"You must train your intuition- you must trust the small voice inside you which tells you exactly what to day." -Ingrid Bergman
சினிமா நடிகைகளை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்: இங்கிரிட் பெர்க்மென். அவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் உலகெங்கும் கொடி கட்டி பறந்த சிறந்த நடிகை. விளம்பரம் நாடாதவர். தனிமையும், நடிப்புத்திறனையும் விரும்பியவர்.
அவர் கூறிய மேற்படி கருத்தை உளவியல் வல்லுனர்கள் கூட இத்தனை தெளிவாகவும், சுருக்கமாகவும் கூறவில்லை. தேர்வுகளில் பொருத்தமான இடத்தில்
இதை மேற்கோள் காட்டினால், மதிப்பீடு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
இதை தமிழில் மொழியாக்கம்/ தெளிவுரை செய்தால்:
நீ உன்னுடைய உள்ளுணர்வை உனக்கு உகந்த வகையில் பயன்படுத்த வேண்டுமானால், அதற்குத் தக்க பயிற்சி, நீ தான் அளிக்க வேண்டும். உள்ளுணர்வுக்கு ஒரு குரல் உண்டு.அதை நீ நம்பவேண்டும். அதற்கு அசாத்திய திறமை உண்டு. நீ என்ன செய்ய வேண்டும் என்பதை, அந்த அந்த காலகட்டத்தில், அது பிசிறில்லாமல் கூறிவிடும். அதற்கு தயக்கம், சுற்றி வளைப்பது, தாமதம், ‘ஒன்று கிடக்க, மற்றொன்றை கூறுவது’ போன்றவை தெரியாது.
உள்ளுணர்வு என்றால் என்ன?
அதை பழக்கப்படுத்துவதால், என்ன ஆதாயம்?
அதை பழக்கப்படுத்துவது எப்படி?
அதை நம்பாவிட்டால், என்ன இழப்பு ஏற்படலாம்?
அதன் கூற்றை நம்பி, அதன்படி நம் வாழ்வை அமைத்துக்கொண்டால், அவரவர்க்கு என்ன நன்மைகள் விளையக்கூடும்?
உள்ளுணர்வு/உள்ளக்கிடக்கை என்பவை கட்டுக்கதையா?
இந்த வினாக்களுக்கு விடை அளிக்கவும்; ஒரு வரியும் எழுதலாம்; நான்கு பக்கங்களும் எழுதலாம். சில வினாக்களை பதிலளிக்காமல் விட உரிமை உண்டு.
No comments:
Post a Comment