கொல்லுடா!
இன்றைய செய்தி: ஹிந்து ஆங்கில இதழ்:
ஜூலை முதல் வாரம் மருத அரசனூர் என்ற தமிழ்நாட்டு கிராமத்தின் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் அவருடைய சுற்றத்தை சார்ந்த ஆறு பேரால் கொல்லப்பட்டார். அவருடைய ஆதிக்கத்துக்கு அஞ்சி அவர்களின் ஆறு குடும்பங்களும் ஊரை விட்டு ஓடிவிட்டன. அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. அவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் அநாதை ஆயின. அந்த 56 ஆடுகள், 17 பசுக்கள், சில கன்றுகள், சில காளைகள், இரண்டு செம்மறி ஆடுகள், 4 பன்றிகளுக்கு உணவு அளிக்கக்கூடாது, சரண் கொடுக்கலாகாது என்ற கட்டளைக்கு பயந்து, கிராமவாழிகள் அவற்றை ஐந்து நாட்கள் பட்டினி போட்டனர். ஐந்து பிராணிகள் செத்து ஒழிந்தன. கலைக்டருக்கு தகவல் எட்ட, அவருடைய ஆணையின் நற்பயனாக, அருணாசல பிராணிகள் சரணாலயத்தின் நிறுவனரான லெஸ்லீ ராபின்சன் அவற்றை மீட்டி உயிர் பிச்சை கொடுத்தார்.
சித்தரத்துக்கு நன்றி.
http://img.dinakaran.com/data1/DNewsimages/Daily_News_3359142541886.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment