Gmail
COMPOSE
கலர்! கலர்!! கலர்!!! Most Immediate
கலர்! கலர்!! கலர்!!!
இன்னம்பூரான்
டிசெம்பர் 4, 2016
ஓசையின்றி ஓலா வண்டியில், வலுத்துக்கொண்டிருக்கும் தூறலில், சினிமா அரங்கம் வாசலில் இறங்கினால், சா.கி.நடராஜன் தம்பதியர், ‘சிறகு’ அடித்து, கனிவுடன் வரவேற்றனர். கயல்விழி மங்கையர் கட்டியம் கூறினர். கும்பகோணம் டிகிரி காஃபி தவழ்ந்து கையேறியது. அதை சுவைத்துக்கொண்டே, சுற்றும் முற்றும் கண்சாதகம் செய்தால், கலர்! கலர்!! கலர்!!!. சீருடை யுவதி ஒருவர் லிஃப்ட்டில் சவாரி செய்ய வசதி செய்து கொடுத்தாள்(ர்).
அரங்கம் முழுதும் ஆக்குப்பைய்ட். கலர்! கலர்!! கலர்!!!. கொஞ்சமா? நஞ்சமா? எங்கு திரும்பினாலும் படா படா மானிட்டர்களில், கலர்! கலர்!! கலர்!!!. சற்றே தலை சுற்றியது. எனக்காக சரிபாதியாக குறைக்கப்பட்ட கொய்யா ரசத்தை ஒரு பெண்ணரசி கொணர, அடுத்த பாதியை சா.கி.ந. கடப்ஸ் செய்து விட்டார் என்று நான் சொன்னால் அவர் மட்டுறுத்தப் போவதில்லை. அத்தனை நல்ல மனிதர். மின்னுலகில் நாம் யாவரும் நிழல் மனிதர்கள். மனமுருக ஆமோதிப்பவர்களும், கோதாவில் இறங்கி, கழுத்தைப் பிடிப்பவர்களும், பொடி நடையாக கடுகி விரைந்து குழி தோண்டுபவர்களும், இத்தனை கலர்! கலர்!! கலர்!!! நிறைந்த சுப முஹூர்த்தத்தில் நேரில் சந்திக்க நேர்ந்தால், முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு, தழுவி வாழ்த்துக்கள் கூறிக்கொள்வர், மோடியும், மமதாவும், பார்லிமெண்ட் காண்டீனில் சந்தித்தாற் போல. இது நிற்க.
சா.கு. ந. வழிநடத்த, கலர் சட்டைப்போடாத கல்பட்டாரை விடாமுயற்சியுடன் தேடிப்பிடித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தோம். கடமை தவறாத நான், ‘ பிரியாங்கா சோப்ராவுடன் நடிக்கும் கால்ஷீட் பொருட்டு, மும்பாய் சென்றிருந்தத் தமிழ்த்தேனீ தம்பதியார் வர இயலாததை’ அறிவித்து விட்டு, தேடினேன்! தேடினேன்!! தேடினேன்!!! கால் கடுக்கத் தேடினேன். ஶ்ரீதேவியும் காணோம்;உதயன் தென்படவில்லை; தேவ் கூட AWOL. ஒளிந்திருக்கும் மர்மம் அறிவிக்காத ஶ்ரீரங்கன் மோஹனரங்கம் டபிள் AWOL. நமது Novice not found. மற்றும் பல குமுக்ஸ் நண்பர்கள் வராவிடினும் எக்கச்சக்கக்கூட்டம். மாடல் சித்திரம் நோக்குக. பெருகவாழ்ந்தானை எதிர்பார்த்தேன். நாட் ஸைடட். பரிகாரமாக வந்து சேர்ந்தார், சேட்டை செய்யாத சேட்டை மனிதன். இனிதே நேரம் கழிந்தது. அதனால், பாதாம் அல்வா, இரு வித பாயாசங்கள், லட்டு, குல்ஃபி எல்லாம் கும்பியில் இறங்கின. கனத்த சாப்பாடு, பலமான உபசாரம்.
கல்பட்டாரின் அகமுடையாள் சாந்தா சாந்தமாக என்னிடம் கூறியது, ‘நான் கிழித்தக்கோட்டை அவர் தாண்டமாட்டார்.’ நம்ம வீட்டிலேயும் அப்டித்தான் என்றேன். ஒரு சமயம் ‘பெரிசு’ இன்னம்பூரான் கூறியதை அவர் ஆமோதித்திருக்கலாம். ரிவெர்ஸ்ஸா போட்டுட்டேனோ? அட ராபணா? எல்லாம் வயசுக்கோளாரு. எனக்கு மறதி ஜாஸ்தியாகி விட்டது. தமிழ்த்தேனீ சொன்னது மீனா குமாரி பற்றி. நான் பிரியங்காவை பற்றி எழுதிவிட்டேன். நல்ல வேளை வடேரா என்று போட்டு, அவரை மாட்டி விடவில்லை. நண்பராச்சே! ஆனாலும் விவரமான மனிதர். நான் எழுதிய பதிவின் மீது 'மையோ! மரகதமோ!!' என்று மரகத சாயம் அடித்தாலும் அடிப்பார், இல்லை, அவர் நண்பராச்சே! 'போனால் போகட்டும் போடா' என்று விட்டு விடும் ரகம். அவர் வாயை மூடியாச்சு!
என்ன மறதி! நடந்தது என்ன? நாங்கள் போனது ஒரு கல்யாண வைபவம். கல்பட்டாரின் பெயர்த்தி திருமிகு நிஷா கோபிநாத்திற்கும் திரு நிகீத் வெங்கட்டிற்கும் திருக்கல்யாண வைபோகம். கல்யாண சமையல் சாதம் ரொம்ப பிரமாதம். ( நான் சாதம் போட்டுக்கொள்ளவில்லை என்பதற்கு சா.கி.ந. சாக்ஷி.) கல்யாணக்கூடம் நிரம்பி வழிந்தது. முஹூர்த்தம் சாங்கோபாங்கமாக நிறைவேறியது. ஆசிகள் குவிந்தன. பெண்ணரசிகளுக்கு சமானமாக ஆண்வர்க்கமும் (என்னே இன பேதம்!) வண்ணமயமாக கலாய்த்தனர்.
சுபம்
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
Tamil
English
Translate message
Turn off for: Tamil
நமது Novice not found.
ஐயாவுக்குத் தெரியாதா இன்று ஞாயிறு முழுநாளும் வகுப்பு எடுக்கும் பணி என்பதை
ஐயா கலர் ப்ளைன்ட் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். இப்போதுதான் கழுகுக் கண் என்பது தெரிகிறது
கத்துக்குட்டி
|
1 more
Show details
|
No comments:
Post a Comment