சுகவனம் 2
இன்னம்பூரான்
செவ்வாய் 23 08 2016
மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அது தான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் என்பதை ஐயமுற அறிவதற்கு, 1976 லிருந்து இயங்கும் மேற்படி அமைப்பு மனித இனத்தின் காவல் தெய்வமாக இயங்கி வருகிறது. அண்மையில் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வின் பயனாக பத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் முதலாவது பற்றிய பதிவு இது. வாசுதேவன்,ருத்ரா, கோபால், லக்ஷ்மி நாரயணன் போன்றோர் கேட்டால் அவை யாவையும் அலசி, அவரவருக்கு ஏற்புடையதை நடைமுறைக்கு கொணரலாம். தமது உணர்ச்சிகளை இற்செறிக்காதீர்கள். நால்வரிடம் அது பற்றி கலந்தாலோசித்தால், அது பெரிதும் உதவும் என்பது முதல் அறிவுரை, விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்.
சற்றே விவரமாக: தன் உணர்ச்சிகளை பகிர்ந்து கொளவது பலவீனமல்ல. அது தன்னலம் போற்றும் அணுகுமுறை. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழி. உன்னை அலக்கழிக்கும் சிக்கலை, அது அவிழ்க்கக் கூடும். இது எளிதில் நடக்கக்கூடியது இல்லை. தீராத பிரச்னையை விசாலமாக விளக்குவதும் நலனே. அதற்காக, ஒரு பகிர்வை செயற்கையாக அமைத்து விட்டால், வேறு வினை வேண்டாம். இத்தகைய உரையாடல்கள் தான்தோன்றியாக, இயல்பாகவே அமைந்து விட்டால், நீங்கள் ஒரு பாலத்தை கடந்து விடுவீர்கள். முஸ்தீபுகள் செய்து கொள்ளாமல், நண்பர்களிடம் மனம் விட்டு பேசினால், தீர்வு கிடைப்பது எளிதாக அமையும் என்பது ஆய்வின் வெளியீடு. துவக்கும் போது பாலைத்திணை கற்கள் நெருடலாம். அவசரம் இல்லை. காலம் கடந்தாலும், தக்கதொரு சூழ்நிலை ஏற்படுகிறது என்பதும் ஆய்வின் முடிபு எனலாம்.
Mental Health Foundation Copyright © 2016.
சித்திரத்துக்கு நன்றி:
No comments:
Post a Comment