'உம்'
ராமுவும் சோமுவும் பள்ளித்தோழர்கள். கணினி மன்றத்திலும் தான். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு
விண்ணப்பித்தார். ஒரே பரிக்ஷை. அதே கேள்விகள். பால்யபருவத்திலிருந்து ஒரே மார்க் வாங்கி கின்னஸ் ரிக்கார்ட்
படைத்த இந்த இளஞர்கள் இங்கும் அப்டியே. வியப்பில் ஆழ்ந்த அதிகாரி, இரண்டு பேருக்கு இடம் காலியில்லை. ஒரு பத்து வினாத்தொடர். பத்து நிமிடங்களில் பதில் என்று பந்தயம் வைத்தார். ஒரே மார்க். சோமுவுக்குத்தான் வேலை கொடுத்தார். ராமு கொஷ்யண்ட். நியாயமான பதில் அளித்தார். அது என்ன, நண்பர்களே?
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co. uk
http://innamburan.blogspot.de/ view/magazine
www.olitamizh.com
-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016
தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016
தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:
1. விடையில்லையெனினும் தேர்வு. ஐந்தாவது வினாவுக்கு, 'எனக்கு தெரியாது' என்று சோமுவும், 'எனக்கும் தெரியாது' என்று ராமுவும் எழுத, ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை.
2. எதிர்பாராத டெவலப்மெண்ட்: தொல்காப்பியம் கற்று, மறக்காமல் இருக்கப்பாடம்;
எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறைமுற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்றுஅப்பால் எட்டே உம்மைச் சொல்லே
நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போதுஉதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போதுஉதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போதுஉதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போதுஉதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)5. முற்று : முழுமையைச் சொல்லும்போதுஉதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போதுஉதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போதுஉதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போதுஉதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?உபயம்: என்.சொக்கன்ராமுவின் 'உம்' இந்த எட்டில் எது?இன்னம்பூரான்
No comments:
Post a Comment