தம்! தமா! தம்!- 1
இன்னம்பூரான்
04 02 2016
காலை வாக் போகும் போது அலாக்கா சொல்லிட்டுப்போய்ட்டார், நண்பர் ஒருவர். ஹாஸ்யமா எழுதணுமாம்! ரோசனை பண்ணிக்கிட்டே மத்யானம் தலையை சாச்சா, அம்புலுப்பாட்டி வந்து, ‘நான் சொன்னதா போட்டுடு. நீ பொறுப்பேக்க வேண்டாம். ஆனால் இட்டுக்கட்டக்கூடாது.’ என்றாள். எனவே படிச்ச நன்முத்துக்களில், அவை வித்யா நூலகத்தில் படித்தவை என்று இந்த வருடாந்திர தொடர் முழுதுக்கும் இன்றே சத்தியப் பிரமாணம் செய்து விட்டு, ஒவ்வொரு நன்முத்தாக சிந்துகிறேன். பொறுக்கிக்கொள்ளவும். பாடபேதம் இருக்கத்தான் செய்யும். மன்னித்தருள்க.
கொளத்தூர்லெ ஒரு மீட்டிங். ஸ்டாலின் பேச்றார். எள்ளல் மிகுந்ததால், துள்ளிக்கொண்டே , “ ‘அம்மா அழைப்பு’ என்று ஒரு மின் தாக்குதல் வந்திருக்கு. நீங்க பிராது எல்லாத்தையும் சொல்லிப்போட்லாம்ங்றாங்க, ஆனா பாருங்க! எடுக்கவே மாட்டேங்க்றாங்க. என்னுடைய ப்ரிதிநித்வத்தை நிலை நாட்டும் மையம் 25x 8 வேலை செய்யுது. பாரு பயாஸ்கோப்பு’ என்று முழக்கிவிட்டு டயலினார். யாரும் எடுக்கல்லை. அசடு வழிஞ்சது, அகத்திலும், முகத்திலும்.
மோடி மஸ்தானின் ஸ்வச்சபாரத் ஆசாமிகள் வழித்து சுத்தம் செய்தார்களாம்.
டிஸ்கி: பேராசிரியர் அன்பழகன், ‘யாரு இந்த சோ’ என்று கேட்டாராம்!!! நல்ல வேளை கருணா ஆருன்னு கேக்காமப்போனாரே,
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://mmimages. maalaimalar.com/Articles/2013/ Apr/5b3c15dc-44e9-4ca1-bae8- 5f32167a0398_S_secvpf.gif
No comments:
Post a Comment