நாளொரு பக்கம் 38
Thursday, the 2nd April 2015
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.
திரிகடுகம் 8
தமிழில் தாரதம்யம் என்றதொரு சொல் உண்டு. இடம், பொருள், ஏவல் ஆகியவை கருதி, அதற்கேற்ப பொருத்தமாக செயல்படுவோருக்கு, தற்புகழ்ச்சிக்கு அவசியமே இல்லை. சான்றாக, தொன்மை, பழமை, பாரம்பரியம் ஆகியவற்றை ஆராயும் இடத்தில் நல்ல குடிப்பிறப்பு அருமையாக உதவும். கற்றோர்களும், புலவர்களும், மேதைகளும் வீற்றிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவு கை கொடுக்கும். போர்க்களத்தில் வாகை சூடுவது மட்டுமே குறி. அதற்கேற்ற துணிவு, ஆற்றல், கட்டுப்பாடு தேவை. இவை மூன்றையும் தானாகவே அறிந்து செயல்பட முடியும்.
அத்தகைய உயர்நிலை சூழ்நிலையில் ‘தம்மைக் கூறாப் பொருள்’ தலைமை வகிக்கும்.
-#-
No comments:
Post a Comment