Tuesday, November 10, 2015

நாளொரு பக்கம் 31

நாளொரு பக்கம் 31

Wednesday, the 25rd March 2015
अङ्गुष्टमात्र: पुरुषो मध्य आत्मनि तिष्टति
ईसानां भूतभव्यस्य न ततो विजुगुप्सते ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி
ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே


தெய்வத்தின் குரல் எங்கும் ஒலிக்கும். அதன் வெளிச்சமே ஒளி. திருக்கோவிலூர் ரேழியில் முதலாழ்வார்களை நெருக்கியவன், அந்த நீக்கமற நிறைந்தவனாகிய தெய்வமே. ஆங்கிலத்தில் Omnipresent, Omniscient என்பார்கள் அதே கருத்தை.

இதயம் எனப்படும் பெட்டகத்தே, கட்டைவிரல் அளவு இடைவெளிக்குள் ஒடுக்கிக்கொண்டு ஆனந்தமாக உறைவதும், அவனே. 

எல்லை அறிய இயலாத  ஆகாய வெளியில் விசாலமாக  விரிந்திருப்பதும் அவனே. பரம்பொருள் என்கிறார்கள்.

அனாதி காலம் முதற்கொண்டு, என்றென்றும் காலம், நேரம், நாள், கிழமை போன்ற 
கால அளவுகளை கடந்தவனாகிய  கடவுளை உணர்ந்து கொண்டுவிட்டால், அந்த  பாகியசாலிகள் தங்களை எதிலிருந்தும் காத்துக்கொள்ள முனைவதில்லை என்பதே இந்த கடோபனிஷத்  செய்யுளின் பொருள். 

தன்னையும் 
சுற்றத்தையும் பிரித்தறியாமல் 
தன்னுள்
இருப்பதே எங்கும் இருப்பது 
என்று உணர்ந்தபின் எதனிடமிருந்து எதை காப்பாற்றுவது? 
-#-

No comments:

Post a Comment