Friday, July 10, 2015

நாளொரு பக்கம் 58

நாளொரு பக்கம் 58


Wednesday, the 22th April 2015

கல்கத்தாவில் ஒரு பெரிய பணக்காரன் ஒரு சமயம் ஶ்ரீராமகிருஷ்ணரிடன் வந்து குதர்க்கமாக வாதஞ்செய்தான். ஶ்ரீராமகிருஷ்ணர் அவனிடம், ‘பயனில்லா வாதங்களினால் விளையும் நன்மையென்ன? சுத்தமான நம்பிக்கையுள்ள மனத்துடன் பகவத் நாமாவை ஜெபி. அது உனக்கு நன்மை தரும்.’ என்றார். இந்த நற்போதனையைக் கர்வம் மிகுந்த அம்மனிதன் கவனியாது, மரியாதையின்றி, ‘நீங்கள் எல்லாம் அறிந்து விட்டீர்களா?’ என்று கேட்டான்.  ஶ்ரீராமகிருஷ்ணர் கூப்பிய கைகளுடன் பணிவாய். ‘உண்மை தான்; என்னால் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை தான். ஆனாலும், துடைப்பமானது தான் அசுத்தமாகயிருந்தாலும் தன்னால் துடைக்கப்பட்ட இடத்தை சுத்தமாக்குமே’ என்றார்.
-ஶ்ரீமத் பிரம்மானந்த சுவாமிகளால் தொகுக்கப்பட்டதிலிருந்து.
-#-
இன்னம்பூரான்

No comments:

Post a Comment