இந்தியா 2014 -2
உடனுக்குடனே இதை எழுதுவதாக இல்லை. ஆனால் பிரதமர் மோடி இப்படி செய்து விட்டாரே! சற்று முன் அவர் மேடிசன் சதுக்கத்தில் ஆற்றிய உரை முழுவதையும் கவனத்துடன் கேட்ட பிறகு, ஹிந்து இதழில் நான் தெரிவித்த கருத்து.
‘கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஒரு மாபெரும் புரட்சி வரும். தலைகள் உருளும். உதிரம் சிந்தும். வன்முறை தலை தூக்கும்.இந்த தாங்கொண்ணா துன்பத்திற்கு பிறகு, விவேகம் திரும்பும்.’
என் நண்பர்களுக்கு இது பிடிக்கவில்லை. உள்ளதை சொல்கிறோம் அல்லவா. தேசீய தேர்தல் 2014 நடந்த பின்னும், புரட்சி நிகழும் என்றும் அதன் தீவிரம் தணிந்து இருக்கும் என்று நினைத்தேன். வரலாறு காணாத வகையில் நமது பிரதமர் மோடி, இயல்பாக, கடுதாசி வைத்துக்கொள்ளாமல் பல நற்செய்திகளையும், சீரிய கருத்துக்களையும், வருங்கால நடவடிக்கைகளை பற்றியும் மேற்படி உரையில் கூறியதையும், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பையும் கண்ட பின், வரப்போகும் புரட்சி அமைதியாகவும், சத்தம் போடாமலும் நிகழும் என்ற கனவு எனக்கு மேலோங்கி நிற்கிறது. உள்மனது உடனுக்குடனேயே பகிர்ந்து கொள்ள சொன்னது. அவர் கூறிய பெரிய உரையிலிருந்து சில அரிய கருத்துக்களும் செய்திகளும்:
- இந்தியா தான் 21ம் நூற்றாண்டில் உலகை வழி நடத்தும்.
- கவலைக்கும் ஏமாற்றத்துக்கும் இடமில்லை. இந்தியாவின் இளைய சமுதாயம் சாதனை படைக்கும்.
- அமெரிக்காவில் பலநாடுகளிலிருந்து வந்தவர்கள் உளர். இந்தியர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
- நடைமுறையில், இந்தியா வீசா எளிதில் கிடைக்கும். என்.ஆர்.ஐ.களுக்கு நியாயமான சலுகைகள் கிடைக்கும்.
- எல்லோரும் வந்து வடம் பிடிப்பீர்களாக.
மற்றதை ஊடகங்களில் படித்துக்கொள்ளவும்.
சித்திரத்துக்கு நன்றி: http://i.ytimg.com/vi/APva4nVmXFA/0.jpg
No comments:
Post a Comment