விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....
அல்லது
லபோ திபோ; II.2
ஈஷ்வரன் லீவுல்லே போயிட்டாரோ? எப்படி சென்னை வந்தோம்னு கேட்கிறீர்களா?
(தொடரும்)...
நானும் சைனீஸ் பேச, மூக்கால் முணமுணக்க, மெல்லின உயிர்மெய் வாய்பாடு தொடங்கினவுடன், தட்தடதடா என்று விமானம் தரை தட்டுவதற்கு ஆயத்தம் செய்தது. பிரிவுபசாரம் அளித்த பெண்மணி மென்மையாக பேசியது ஆண்களை மட்டும் தான் குறி வைத்த மாதிரி இருந்தது. ஆமாம்: ‘கொம்மன், டாங்க, ஃப்ராகன், ஃவெர்போட்டான் அது இது என்று ஆண்பால் பக்கம் பேசினாள், கரடுமுரடாக. பிஸினஸ் க்ளாஸ் என்ற இனபேதம் பைலட் சொற்கள் மூலம் இளித்தது. ஒளஃப் வீடர் ஸேஹன் என்றார் பாருங்கள், எனக்கு மூச்சு வந்தது. என் பெண்ணிடம் சொன்னேன், லுஃப்தான்ஸோ இல்லையா? சைனா போனாலும் தாய்மொழிபற்று, இந்த தந்தை வழி நாட்டுக்கு என்றேன். அவள் சும்மா இரு என்றாள்.
சும்மா சொல்லக்கூடாது. நமக்கு ஊருக்கு போய்ச்சேர ஆசை. அவங்களுக்கு நம்மை கழட்டி விட ஆசை. இல்லை என்றால் செல்வன் மாதிரி நம்பள்க்கு விருந்து படைக்கணும், மூன்று நாட்களுக்கு! இறங்கினவுடன், ஒருவர் நம்மை அழைத்து, ‘மோடிக்கு ஜே! பிரதமர் மோடிக்கு ஜே! என்று ஆரவாரித்த பின், ‘சென்னை விமானம் பறந்தோடி விட்டது. ‘உங்களுக்கு பெங்களூரு வழி ரிபுக்ட். அங்கிருந்து ஜெட் ஏர்வேய்ஸ். ராத்திரி பூரா வைட்டிங்கு. என்ஷூல்டிகன் ஸீ’ என்றார். நானும் அவருடைய சட்டையின் அட்டையை பார்த்து, ‘கேம்! மஜா மேன் சே?’ என்றேன். அவர் தான் சைனா மர்மத்தை அவிழ்த்தார். அடிக்கடி சிஸ்டம் ஃபைலியர் ஆயிடறது. லண்டன்லேயிருந்து மாஸ்கோ போற விமானத்தில், அது திண்டுக்கல்லில் இறங்கப்போவதாக சொல்லிச்சு. அப்றம், பைலட் கூகிள் மேப்ஸ் வச்சுக்கிணு மாஸ்கோ போனார் என்றார். அடுத்த அரை மணி நேரம் சுறுசுறுப்பாக இயங்கின அவர் பேசியவை: மலேசியா விமானம் இஸ்ரேலில் இருக்கு என்று குஜராத்தி ஜோசியர் ஜோஷி சொன்னார்: இவர் மோடிக்கு ஓட்டுப்போடப்போவதில்லை. ஜெர்மன் சிடிஸன் ஆச்சே. டிப்ஸ் கொடுக்கும் உத்திகள்.ஆகமொத்தம் தக்ஷிணை பத்து பவுண்டு.
அந்த விமானம் மாடி பஸ். எல்லாமே பிரமாதம். ஜெர்மன் திட்டோலக்கணம். அப்பத்தான் கொஞ்சம் உறங்கினோம். அப்டி, இப்டினு பெங்களுரு வந்தவுடன், இந்திய லக்ஷணங்கள் ‘பளிச்’ என்று தெரிந்தன. மேல்வகுப்பு இளைப்பாறும் அறை, வெளியில் இருந்தது. போனால், சென்னை விமானம் பிடிக்க நடுத்தெருவில் நான்கு மணி நேரம் நிக்கணும். அதனால் இடங்கழி வாசம். ஜெட் ஏர்வேஸ், பிஸினெஸ் க்ளாஸ் சலுகைகளை அறவே மறுத்து விட்டார்கள். கூடவந்த மதுரை மாமா மூலம் பினாமி சமர் புரிந்தோம். ஜெயிச்சோம். சென்னை வந்தோம். சம்பந்தி விருந்து.சவுடாலுக்கு ஃபோனினேன். பிஸி டோன். நான் சைனாவுக்கு சிஸ்டம் அனுசரித்து, மானசீக யாத்திரை செய்தது என்னமோ உண்மை.
வர்ரேன்...
சித்திரத்துக்கு நன்றி: http://www.nanditaarts.com/wp-content/uploads/2013/03/ModernArtMentalJourney1.jpg
No comments:
Post a Comment