‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ [7]
http://imageenvision.com/450/27533-clip-art-graphic-of-a-white-bread-slice-mascot-character-greeting-with-open-arms-by-toons4biz.jpg
தேசீய தேர்தல் நெருங்குகிறது. விந்தை கூட்டணிகள் பற்றி செய்திகள், வதந்திகள், கருத்துக்கள் உலவுகின்றன. சர்ச்சைக்கும், உள்குத்துக்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஜாயிண்ட் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் அந்த ‘அநாவசிய’ கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்து, பாரததேசத்தின் ஜனநாயகத்தின் வாய்மையையை பழித்துவிட்டார் என்று ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வலம் வருகின்றன. பாரத நாட்டின் தற்கால அரசியல் மையங்களில் லஞ்ச லாவண்யத்தின் கொடி பனிமலையிலிருந்து குமரி முனை வரை தடாலடியாக பறக்கிறது. ஆடிட்டர் ஜெனரல் ஆகாயத்தில் 2ஜியையும், நிலத்தடி நிலக்கரியையும், கச்சா எண்ணெயையும் கையாண்ட முறை தவறிய நடைமுறைகளை சாடிய போது கூக்குரல் போட்டவர்கள், அந்த தணிக்கை அறிக்கைகளின் பரிந்துரை படி தான் நடக்க விழைகிறார்கள். தேசீய வங்கிகளின் வாராக்கடன்கள் அவற்றை மூழ்கடிக்கும் அச்சம் நிலவுகிறது. அவற்றை ஆடிட்டர் ஜெனரல் ஆடிட் செய்யக்கூடாது என்ற கோஷம் வலுக்கிறது. கனம் கோர்ட்டார் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளை கண்டு அரசாணை தவிக்கிறது. இத்தனை பீடிகை எதற்கு என்றால், சிறு துளி நச்சு பெருங்குடத்தின் நீரை பாழாக்கி விடுகிறது என்பதற்கு 40 வருடங்களுக்கு முந்திய ஒரு காட்சியை முன் வைக்க:
WHY NOT THE CAKE !
“ The poor are given bread
Urban as they were.
Say it not, it was like mud.
Ingradients as you know, came from CARE !
Let’s be fair, as CARE gave all.
Soy flour, sugar, salt and yeast.
The baker, look at his gall,
Took them away, the beast.
Let’s be fair, water he gave free,
Sixteen times by the litre.
Took salt, but gave malt in a spree.
Less of sugar, hops, yeast and milk,
[to make the kids fitter.
The child is the father of the Man,
And the kids spat it out.
The baker cared not a damn.
And you know, he is now stout!
-S.Soundararajan: 1978.
மேற்படி வாசகத்தை இன்று பதிப்பிக்கும் காரணம், அது இன்று தற்செயலாகக் கிடைத்ததே. இதை நான் ஒடிஷா பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டியிடம் சமர்ப்பித்த போது, பின்னணி கூறப்பட்டது. - ரூர்கெலாவின் எஃகு தொழிற்சாலையை தணிக்கை செய்த போது, எதிர்பாராத விதமாக, முனிசிபல் கெளன்சிலர் ஒருவர், அங்கன்வாடியில் மாணவர்கள் ரொட்டித்துண்டை டம்ளரில் பருகுவதை பற்றி அளித்த புகார் சிக்கியது. இந்திய மரபுப்படி எல்லாருக்கும் நகல் அனுப்பிய போது, சம்பந்தமில்லாத தொழிற்சாலைக்கும் அனுப்பியிருந்தார். அன்றே அங்கன்வாடிக்கு போய் பார்த்தால், அவர்கள் அந்த நீராகார ரொட்டியை துப்பிக்கொண்டிருந்தார்கள்! மாநில அளவில் தணிக்கை செய்த போது, இந்த சிறுதுளி நஞ்சு திருட்டுத்தான் பல மேல்மட்ட களவாணிகளுக்குக் கை கொடுத்தது தெரியவந்தது. அந்தக்காலத்தில் பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டிக்கு மதிப்பு இருந்தது. ஜாயிண்ட் கமிட்டிகள் வாரா. இந்த வாசகத்தை முன் வைத்து, பின்னர் அரசு வாசகத்தில் அதை பிரசுரித்தபின், மற்ற ஊழல்கள் நிற்காவிடினும், பசங்க ரொட்டியை கடித்துத் தின்றார்கள்.
லஞ்சம் ஒழிப்பது மக்கள் கையில். அப்போது தான் பாரத தேசம் என்று பெயர் சொல்லலாம்.
இன்னம்பூரான்
02 03 14
சித்திரத்துக்கு நன்றிhttp://imageenvision.com/450/27533-clip-art-graphic-of-a-white-bread-slice-mascot-character-greeting-with-open-arms-by-toons4biz.jpg
No comments:
Post a Comment