Thursday, July 18, 2013

எலிஹு யேல்: அன்றொரு நாள்: ஜூலை 8



அன்றொரு நாள்: ஜூலை 8


Innamburan Innamburan Fri, Jul 8, 2011 at 7:36 AM


அன்றொரு நாள்: ஜூலை 8


என்னை கேட்டால்? சென்னையிலிருந்து வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, உபகாரச்சம்பளம் அளித்து, அமெரிக்காவின் தலை சிறந்த மேற்கல்வி ஸ்தாபனமான யேல் யுனிவர்சிடி அவர்களையெல்லாம் கெளரவிக்க வேண்டும் என்பேன். அவரது நினைவு தினமான இன்று மட்டுமாவது மகா கனம் பொருந்திய எலிஹு ஹேல் (05 ஏப்ரல் 1649 - 08 ஜூலை 1721) அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். முதல் பாய்ண்ட்: அவர் அந்த பல்கலைக்கழகத்தை, பலர் நினைப்பது போல், ஸ்தாபிக்கவில்லை. காசு கொடுத்தார். புத்தகங்கள் கொடுத்தார். பேர் வச்சுட்டாங்க. அவருக்கு காசு எங்கேயிருந்து வந்தது? அங்கே தான் சூக்ஷ்மம்!

ஆங்கிலேயரான அவரது தந்தை அமெரிக்காவுக்கு ஓடி வந்தவர் என்றலும், எலிஹு யேலின் பாலப்பருவத்திலேயே, இங்கிலாந்து திரும்பியாச்சு. ஒரு பாடாக, அங்கு கல்வி கற்றபின், ‘கழுதை கெட்டா குட்டிச்சுவர்’ என்ற கணக்கில், இந்தியாவை கட்டி காபந்து செய்து, செல்வம் திரட்டிய கிழக்கிந்திய கம்பேனியில் ஊழியம் சேர்ந்து, சென்னை பிராந்திய கவர்னர் ஆனார். அதுவும் இரு முறை. முந்திய கவர்னரின் விதவையை மணந்து கொண்டது மட்டுமல்லாமல், மற்றும் இரு துணைவிகளையும் அமர்த்திக்கொண்டு 27 வருடங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். கனகச்சிதமாக, வைர வியாபாரத்தைத் திருட்டுத்தனமாக பல்லாண்டுகள் செய்து எக்கச்சக்க கறுப்புப்பணம் சேர்த்து, இங்கிலாந்து சென்று மாடமாளிகை என்ன? தோட்டம் துரவு என்ன? பெரிய, சின்ன வீடுகள் என்ன? என்று படோடாபமாக வாழ்ந்தார். அதான் கறுப்பு மசி!

அக்காலம் அமெரிக்காவின் கனக்டிக்கெட் கல்லூரிக்கு இவரிடம் காட்டன் மேத்தர் என்பவர் 1718ல் நன்கொடை கேட்டார். ஐயாவும் துணிமணிகளென்ன, அணிகலன்கள் என்ன, புத்தகங்கள் என்ன என்று பலதானம் செய்தார். தேறிய செல்வம்: 562 பவுன் + புத்தகங்கள். நன்றிக்கடனாக, கனக்டிக்கெட் கல்லூரி பொறுப்பாளர்கள் இவரது பெயரை அந்த கல்லூரிக்கு நாமகரணம் செய்து வைத்தார்கள். அது பிற்காலம் கற்பக விருக்ஷமாக வளர்ந்தது யாவரும் அறிந்ததே. 

இது எல்லாம் பெரிது அல்ல. பீ.பீ.ஸீ. இவரை பற்றி எழுதியதும், உலகமெங்கிலிருந்தும், சொந்தம் கொண்டாடியவர்கள், பலர்.

நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?
இன்னம்பூரான்
08 07 2011
உசாத்துணை:


Geetha Sambasivam Fri, Jul 8, 2011 at 7:43 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?//

சரிதான். என்றாலும் சேர்த்த செல்வத்தில் இந்தியச் செல்வத்தின் பங்கும் இருக்கணும்.  ஆகவே பல்கலைக் கழகத்தை  நமக்கும் சொந்தம் கொண்டாடிக்கலாம் இல்லையா?? 

2011/7/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜூலை 8



நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?
இன்னம்பூரான்
08 07 2011

No comments:

Post a Comment