Monday, December 31, 2012

சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார்!
29 messages

http://www.abebooks.com/images/books/Bobbs-Merrill/Kidnapped-Santa-Claus.jpg

சாண்டா க்ளாஸ் தாடித்தாத்தாவோட கோட்டையும் கொத்தளம் எங்கே இருக்குத் தெரியுமோ? அங்கத்தான், குட்டி தேவதைகள், கிருத்திரமம் செய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லாரையும் வச்சுண்டு அவர் பொம்மையெல்லாம் பண்றார். எல்லாரும் எப்பவும் பிசி. நீங்க தான் யானை மாதிரி பூனை வேணும், புலி மாதிரி எலி வேணும்னு கேட்டுண்டே இருக்கேளே. அவரோட கோட்டையும் கொத்தளமும் ‘இளிச்சவாயன் மலையடிவாரத்திலெ’ இருக்கு.

இளிச்சவாயன் அப்டீனா, கேலியில்லையடீ. எப்பவும் எல்லாரும் அங்கெ குஷியா இருப்பா. அந்த குதித்தோடும் ஓடையை பார்த்தாயோ? ஜில் ஜில் என்று. பச்சைப்பசேன்னு கரையோரம் நெல்லுக்கதிர்  தலையாட்டறது. காத்து விசிலடிக்கிறதுடோய்! கதிரோன் ஒளி பாச்சறான். அது புல்லு மேலே நர்த்தனமாட்றதுடா! புன்னகை அப்டீனா என்ன? இந்த பூக்கள் எல்லாம் ஆடி அசஞ்சுண்டு சிரிக்கறது பாரு. அதான்.

புன்னகைக்க, நகைக்க, மகிழ்ச்சி வேணும்டா, பேராண்டி. மன நிறைவு இருந்தாத்தானே, மகிழ்ச்சி வரும்டா, பையா! இளிச்சவாயன் மலையடிவாரத்திலெ மனநிறைவு பொங்கி வழியுதடா, கண்ணு.

எல்லாம் நம்மூர் மாதிரி தான் அப்பனே! ஒரு பக்கம் அடர்ந்த கானகம், புர்ஜி. இன்னொரு சைட்லே மலை. அதுக்குள்ளே ராக்ஷஸாளோட குகைகள். பயமா இல்லை? அதான் இல்லை. இளிச்சவாயன் மலையடிவாரத்திலெ எப்போதுமே மன நிறைவு.சாண்டா க்ளாஸ் தாடித்தாத்தாவுக்கு பசங்க தான் ஃப்ரெண்ட். அதனாலே, அவருக்கு என்னிக்கிமே, எங்கையுமே பகை இல்லை. எங்கெ போனாலும் அவருக்குத் தட்டுப்படறது, கனிவு, அன்பு, நேசம்.

ஆனாப்பாரு. இது உலகமோல்லியோ? ராக்ஷஸாளுக்கு இவர் மேலே கோபம். இருக்காதா? பசங்க அவர் பக்கம் தானே. அது அவாளுக்கு பிடிக்கல்லை. மஹாபாரதத்திலே பஞ்ச பாண்டவான்னா, இங்கேயும் அஞ்சு குகைகள்.

முதல் குகையின் வாசல்லெ தோரணம். தடபுடலான அலங்காரம். கெட்டி மேளம் கொட்றது. எங்கே பாத்தாலும் பெல்ஜியம் கண்ணாடி. அழகு பாத்துக்கணும் இல்லையா? இது தான் ‘சுயநலம்’ என்னும் குகை. அந்த ராக்ஷஸி தன் அம்மாவையே கால் காசுக்கு வித்தவ தானே!

அடுத்த குகை வாசல்லே யாரோ பிலாக்கணம் பாடிண்டே இருக்கா. கும்மிருட்டு. ஆனா, உரத்த மொணமொணப்பு. அது தான், சார், ‘பொறாமை’ என்னும் பொல்லாக்குகை. அதுக்கு அடுத்தாப்லே, ஊரையே எரிக்கறாப்லெ ஒரு தீமித்தம். அது தான் ‘வெறுப்பு’. கிட்டப்போவாதே, மவனே. சுட்டுப்ப்பிடும். நாலாவது குகைக்கு வந்தாச்சு. அது தான் ‘காழ்ப்புணர்ச்சி’ குகை. ஒர்ஸ்ட்டு. எல்லாரும் சொல்றா, இது தாண்டா நச்சுக்கிணறு. மூணு குகையிலும் இருந்து இதற்கு ஒத்தயடி பாதை உண்டு. கெட்டவா எல்லாரும் எங்கிருந்தோ எல்லாம் வந்து இந்த நச்சுக்கிணறுலெ மத்தவாளையும் தள்ளிட்டு, தானும் விழுத்து சாவறா. அப்டீன்னு.

ஆனா பாருங்கோ. இந்த பெருமாள் கருணாகரன் இல்லையா? அதான் அஞ்சாவது குகையையும் படைத்து விட்டான். கவனிச்சுப்பார்த்தால், ‘தன்னலம்’ ஆயினும், ‘பொறாமை’ ஆண்டாலும், ‘வெறுப்பு’ விரட்டினாலும், ‘காழ்ப்புணர்ச்சி’ உமிழ்ந்தாலும், அவற்றிலிருந்து ‘பரிதவித்து புனருத்தாரணம்’ (Repentance) என்ற பேரெழில் வாய்ந்த ஐந்தாவது குகைக்கு ஒரு அழகிய நடை ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் ராஜா (ராக்ஷசன் இல்லை பெரிய உருவம் ஆயினும்.) நல்லவன். கதவை திறந்தே வைத்திருப்பான்.

அஞ்சு பேரும் ஒரு மீட்டிங்க் போட்டாங்க. பரிசுகள் பல கொடுத்து பசங்களை சாண்டா க்ளாஸ் தூக்கிண்டு போயிட்றான். தன்னலம் நாடுபவர்கள் குறைந்து விட்டார்கள். ~ தன்னலம் அழுகை. அதே தான் தன் பிரச்னை என்று தலையில் கை வைத்து அழுதான், ‘பொறாமை’.  அதான் ஆருமே நம்மை அண்டறதில்லை என்று பெருங்குரல் எடுத்து அழுதான், ‘வெறுப்பு’. ‘சே.சே! என்ன வாழ்க்கை இது. உங்க மூலமாக தானே என் கிட்ட வரமுடியும் என்று குதியாய் குதித்தான், ‘காழ்ப்புணர்ச்சி’.

‘புனருத்தாரணம்’ சார் சொன்னார், ‘பசங்க உங்க கிட்ட வரலேனா, எங்கிட்ட வர சான்சே இல்லை. தேவையும் இல்லை.

எல்லாரும் ஒரு மீட்டிங்க் போட்டங்க. அதன் படி முதல் நாள் தன்னலம் ராக்ஷசி சாண்டா க்ளாஸ் கிட்ட போய், ‘இந்த பொம்மையெல்லாம் என்னே நேர்த்தி. தனக்கு வச்சுக்கமா, அந்த உடைக்கிற பசங்க கிட்ட ஏன் கொடுக்கரெ’ என்று கேட்டாள். ‘போடீ போக்கத்தவளே! அவங்க குஷி எனக்கு மகிழ்ச்சி.’ என்றார், சாண்டா க்ளாஸ். மறு நாள் ‘பொறாமை’ ராக்ஷசன் போய், “சாண்டா க்ளாஸ்! ஃபாக்டரியில் லக்ஷக்கணக்கா பொம்மை பண்ணி விக்றா. நீயும் விலை பேசு.’ என்றான். ‘‘போடா பொறாமை! அன்புக்கும், கனிவுக்கும் விலை பேசுவாளாடா, அசத்து.’ என்றார், சாண்டா க்ளாஸ். இதான் சாக்கு என்று அடுத்த நாள் போன ‘வெறுப்பு’ ராக்ஷசன்,’ சாண்டா க்ளாஸ்! சாரி. கெட்ட ந்யூஸ்’ என்றான். அதெல்லாம் பேசப்படாது. ஓடு என்றார், சாண்டா க்ளாஸ். அத்தனை சுளுவு இல்லை, தாத்தா என்று சிரித்த ‘வெறுப்பு’ சொன்னான். “ இப்ப எல்லாம் முக்காவாசிப்பேர் சாண்டா க்ளாஸ் என்பதையே நம்புவதில்லை. அவர்களை நீ வெறுக்க வேண்டாமோ’ என்றான். ‘நன்னாருக்கு போ! அவர்கள் தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்; குழந்தைகளையும் ஏமாற்றுகிறார்கள். பாவம்! நான் அவர்களை வெறுக்கமாட்டேன்.’ என்றார், சாண்டா க்ளாஸ்’.

ராக்ஷசர்கள் ஏமாந்தார்கள். சாண்டா க்ளாஸ் ஜாலியா இருந்தார். இளிச்சவாயன் கோட்டையில் அவரை ஒண்ணும் பண்ண முடியாது. குட்டி தேவதைகள், கிருத்திரமம் செய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லாரும் அவரை காப்பாத்தி விடுவார்கள். அதனால், ராக்ஷச சூழ்ச்சி வலுத்தது. கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் விழாவுக்கு, காத்திருந்தனர்.

குட்டி தேவதைகள், கிருத்திரமம் செய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு, மானோட்டும் வண்டியிலே  மூட்டை , மூட்டையாக பரிசுகளை அடுக்கிக்கொண்டு, சாண்டா க்ளாஸ் உலக உலாவுக்குப் புறப்பட்டாரா! மான்களும் ஜாலி. அவரும் ஜாலி. உலகமே ஜாலி.

தீடீரென்று ஒரு சுருக்குக்கயிறு ஆகாசத்திலேயிருந்து வந்து விழுந்து சாண்டா க்ளாஸை குண்டுக்கட்டாகக் கட்டி, அலாக்கா தூக்கிண்டு போயிடுத்து. மானோட்டும் வண்டியோ வழக்கமான பாதையில், பசங்களை நோக்கி, போயிண்டு இருந்தது.

‘மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று பீற்றிக்கொண்ட ராக்ஷசர்கள், அவரை ஒரு இருண்ட குகையில் அடைத்து, ஒரு பாறையால் அதை அடைத்து விட்டு. ‘இந்த வருஷம் கிருஸ்துமஸ் அரோஹரா. பொம்மைகளாச்சு. சாண்டா க்ளாஸ் ஆச்சு. நாங்க தான் ராஜா’ என்று கொம்மாளம் போட்டார்கள்.

விடலாமா? தொடரலாமா?

இன்னம்பூரான்

24 12 2012

பி.கு.

ஆக்சுவலி, இது எழுதி நூறு வருசத்துக்கு மேலே ஆச்சு. நான் சகட்டு மேனிக்கு என் வழியில் மொழியாக்கம் செய்தேன். தொடர நேரிட்டால், ஆங்கிலக்கதையையும் அப்டியே போட்றேன். இரண்டையும் பசங்கக் கிட்ட சொல்லலாம். எதற்கும் பசங்க என்ன சொல்றான்னு

கேட்டுச்சொல்லு என்று சாண்டா க்ளாஸ் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கார்.

லேடஸ்ட் தந்தி: ‘சாண்டா க்ளாஸ் மீட்கப்பட்டார்.’

சித்திரத்துக்கு காப்புரிமை & நன்றி: http://www.abebooks.com/images/books/Bobbs-Merrill/Kidnapped-Santa-Claus.jpg

தேமொழி      Tue, Dec 25, 2012 at 6:54 AM
To: mintamil@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, Innamburan Innamburan
ஐயா, உங்கள் மொழிபெயர்ப்புகளின் ரசிகையாகிவிட்டேன்.

நீங்கள் "ஐவரி கோஸ்ட்" மின்னஞ்சலை மொழி பெயர்த்த பாங்கை நினைத்து நினைத்து சிரித்தேன் பல தரம்.

இப்பொழுது நீங்கள்  சிறுவர்களுக்கு கதை சொல்லும் நேர்த்தி கண்டு 'இளிச்சவாய் மன்ற உறுப்பினர்' ஆகிவிட்டேன்.

நன்றி நன்றி

... தேமொழி

(இளிச்சவாய் மன்ற  நிரந்தர  உறுப்பினர்)

எல்லாவிதமாவும்  கதை சொல்வார்  நம்ம  இ சார்..நேரப்பேசப்போனீங்கன்னா  மகிழ்ச்சி+திகைப்புல  வாயடைச்சி உக்காந்துடுவார்:) இணையம்  மூலம் நமக்குக்கிடைத்த  ரத்தினங்களில் இ சாரும் ஒருவர்.

SHYLAJA

Innamburan Innamburan      Tue, Dec 25, 2012 at 7:01 AM
To: தேமொழி
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88
தேன்க்ஸ். கூடுதல் செய்தி. நான் கலிஃபோர்னியா போன போது ஒரு பசங்க மையத்தில் ( என்னே தனித்தமிழ்!) ஒரு மாதம் பஞ்சதந்தரக்கதைகள்
காலக்ஷேபம் செய்தேன். பக்கத்துக் க்ளாஸ், வயசு வந்தோர் ( வய்சுன்னு ஒண்ணு வருமா என்ன!) எல்லாரும் வந்து விடுவார்கள். டமாஷ் தான்.
வாழ்த்துக்கள், தேமொழி.
இளிச்சவாயன் மன்ற போஷகர்/நிறுவனர்/ நடத்துனர்,
இன்னம்பூரான்

2012/12/25 தேமொழி
[Quoted text hidden]

Innamburan Innamburan      Tue, Dec 25, 2012 at 7:02 AM
To: shylaja
எனக்கு ரொம்ப ஷை ஆயிடுத்து, ஷைலஜா.

[Quoted text hidden]
Mohanarangan V Srirangam      Tue, Dec 25, 2012 at 7:04 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
தூள் கிளப்புறார் இ சார்.

2012/12/25 shylaja
எல்லாவிதமாவும்  கதை சொல்வார்  நம்ம  இ சார்..நேரப்பேசப்போனீங்கன்னா

நல்ல டேபிள் டாக்கர்.

:-)

--
SHYLAJA

--

--

shylaja      Tue, Dec 25, 2012 at 7:04 AM

உண்மைதான் இ சார்?
[Quoted text hidden]
--
SHYLAJA

துரை.ந.உ      Tue, Dec 25, 2012 at 7:05 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
  வாழ்க ஐயா
[Quoted text hidden]coral shree      Tue, Dec 25, 2012 at 7:06 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ME TOO.....  ME TOO.......  இ சாரோட தனி ஸ்டைலே இதான்...... சிரிச்சி மாளல. ஷைலு சொன்ன மாதிரி இணையத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இ சார். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் மடை திறந்த வெள்ளமாக கொட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்! அவசியம் தொடருங்கள் சார், அருமை!

அன்புடன்
பவளா

2012/12/25 தேமொழி

--

           shylaja      Tue, Dec 25, 2012 at 7:08 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அயல்நாட்டில் ஒருவர்  இப்போ  முகம் சிவந்து  நெளிந்து வளைந்துகொண்டிருப்பதாக  சிஎன்என்  ஃப்ளாஷ் நியூஸ்!:)

coral shree      Tue, Dec 25, 2012 at 7:15 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஹ.ஹா. அடுத்த பதிவு இன்னும் சூப்பரா சுடச்சுட வரும் பாருங்க.... தகவல் களஞ்சியமாச்சே!

கி.காளைராசன்      Tue, Dec 25, 2012 at 7:16 AM
To: mintamil@googlegroups.com
Cc: Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, vallamai editor , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/12/24 Innamburan Innamburan
முதல் நாள் தன்னலம் ராக்ஷசி சாண்டா க்ளாஸ் கிட்ட போய், ‘இந்த பொம்மையெல்லாம் என்னே நேர்த்தி. தனக்கு வச்சுக்கமா, அந்த உடைக்கிற பசங்க கிட்ட ஏன் கொடுக்கரெ’ என்று கேட்டாள். ‘போடீ போக்கத்தவளே! அவங்க குஷி எனக்கு மகிழ்ச்சி.’ என்றார், சாண்டா க்ளாஸ். மறு நாள் ‘பொறாமை’ ராக்ஷசன் போய், “சாண்டா க்ளாஸ்! ஃபாக்டரியில் லக்ஷக்கணக்கா பொம்மை பண்ணி விக்றா. நீயும் விலை பேசு.’ என்றான். ‘‘போடா பொறாமை! அன்புக்கும், கனிவுக்கும் விலை பேசுவாளாடா, அசத்து.’ என்றார், சாண்டா க்ளாஸ். இதான் சாக்கு என்று அடுத்த நாள் போன ‘வெறுப்பு’ ராக்ஷசன்,’ சாண்டா க்ளாஸ்! சாரி. கெட்ட ந்யூஸ்’ என்றான். அதெல்லாம் பேசப்படாது. ஓடு என்றார், சாண்டா க்ளாஸ். அத்தனை சுளுவு இல்லை, தாத்தா என்று சிரித்த ‘வெறுப்பு’ சொன்னான். “ இப்ப எல்லாம் முக்காவாசிப்பேர் சாண்டா க்ளாஸ் என்பதையே நம்புவதில்லை. அவர்களை நீ வெறுக்க வேண்டாமோ’ என்றான். ‘நன்னாருக்கு போ! அவர்கள் தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்; குழந்தைகளையும் ஏமாற்றுகிறார்கள். பாவம்! நான் அவர்களை வெறுக்கமாட்டேன்.’ என்றார், சாண்டா க்ளாஸ்’.

அருமையான மனநலன்தரும் கருத்து அடங்கிய கதை.
இன்றைக்கு இரவு பேரனுக்குக்குச் சொல்ல நல்லதொரு கதை கிடைச்சிடுச்சு...

அன்பன்
கி.காளைராசன்
Innamburan Innamburan      Tue, Dec 25, 2012 at 6:21 PM
To: mintamil@googlegroups.com, Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, vallamai editor
Cc: Innamburan Innamburan , Jothi Themozhi
Bcc: innamburan88
ஃப்ளாஷ்! சாண்டா க்ளாஸ் மீட்பு!

http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jpg

சொல்லிட்டேன் சாண்டா கிட்ட! ‘பாரேன். எல்லாருக்கும் சந்தோஷம் பாத்தியா?’ என்றார். காளை ராஜன் பேரனை, குகையிலிருந்தபடியே தூங்கப்பண்ணேனே என்று தனக்குத் தானே ஷொட்டுக்கொடுத்துக்கொண்டார். இதல்லாம் எனக்கு அப்றம் தான் தெரியும்.  குகையில் சிக்னல் கிடைக்கவில்லையாம். ‘ஹாய்’ என்று ஒரு சொல் எஸ்.எம்.எஸ். மட்டும் தான் கொடுத்தார்.

‘மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று கொம்மாளம் போட்டாங்களா, ராக்ஷசாள்! “பசங்க பொம்மைகளை காணாமல் ஏமாந்து போவார்கள். அழுவார்கள். அடிச்சுப்பார்கள். அப்பா, அம்மா கூட கோவிச்சுப்பா. வேறே வழி ஒண்ணும் இல்லாமல், பசங்க திண்டாடச்சே, தன்னலமும், பொறாமையும், வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தலை தூக்கும். நாங்கள் ஜெயித்தோம்.” என்று மார் தட்டிக்கொண்டார்கள்.

இனி நடந்தது எல்லாம் மின்னல் வேகம். சாண்டா க்ளாஸ்ஸுக்கு வயசாயிண்டு வரதோல்லியோ. ஜாஸ்தி நடக்கமுடியல்லை. அதான், இந்த தடவை, எதுக்கும் இருக்கட்டும் என்று ஜாலி என்ற குட்டி தேவதை, குசும்பு என்ற குட்டிச்சாத்தான், கேலி என்ற கின்னரன் மூணு பேரையும் கூட்டிண்டு போயிருந்தார். அவா மூணு பேரும்  இந்த ஒன்பது மான் ஓட்டும் வண்டியின் அச்சு மேலே உக்காந்திண்டு கதையளந்துண்டு இருந்தாங்க. தீடீர்னு சைலன்ஸ். தாத்தா விசில் அடிச்சுண்டு தான் போவார்.எப்பப் பாத்தாலும், ஷைலஜா மாதிரி பாடிண்டே இருப்பார். சந்தேஹம் வந்துடுத்தா. கேலி தான் முதல்லெ பாத்தான். சட்னு வண்டியை நிறுத்தினான். ஜாலியும், குசும்பும் உடனே மேலே ஏறி வந்தா. நோ சாண்டா க்ளாஸ்!

அழுகை, அழுகையா வரது. கேவிக் கேவி அழுதார்கள். ஜாலி தான் சொன்னாள், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், இந்த தன்னல வகையறா ராக்ஷசாளுக்கு இரக்கம் வருமாடா? எல்லாரும் கம்போஸ் பண்ணிக்கோங்கோ. நான் லீட் பண்றேன் என்றாள். ஆமாம். அங்கேயும் பொண்டுகள் தான் லீடிங்க்.

சந்த்லெ கேப் கிடைச்சா, நான் சைக்கிள் என்ன? கப்பலே விடுவேன் இல்லையா? டக்னு சொல்லிட்டேன். ‘தேவதா சிரோன்மணிகளா! மின் தமிழ்லெ கூட இப்படித்தான். ஆயிரக்கணக்கான ஆம்ப்ளைஸ் இருக்கா. கண்ணே, மணியே! கண்ணின் மணியே! அப்டீனு  மோஹனும், காளையும் வந்தாலும், நம்ம தீன் தேவீயாஹ்ம்: தேமொழி, ஷைலஜா, பவளா தானே தாத்தாவுக்குக் கொடி பிடிச்சான்னு சொன்னவுடன், ஒரு உத்வேகத்தில் சாண்டா க்ளாஸ் மீட்புப்படை நிறுவப்பட்டது. ஒரு நிமிஷத்துக்கு விஷமம் செய்ய மறந்த குசும்பு நாம திரும்பினா, பரிசுகளை கொடுக்க டிலே ஆயிடும். பசங்களும் ஏமாந்து போவா. சாண்டாவுக்கும் அது பிடிக்காது என்று நிஜமாகவே வருத்தம் தொனிக்கத் தேமொழி (மன்னிக்கவும்! தனிமொழி) பேசினான்.

ஆனா பாருங்கோ. நடந்தது என்ன? ஜாலியும், குசும்பும், கேலியும் பம்பரமாக சுழன்றார்கள்.  ஒன்பது மான்களும் சிட்டா பறந்தன. சின்னப்பசங்க தானே. சொன்னதை செய்யத்தெரியுமே தவிர, தனக்கா (என் மாதிரி) ஒண்ணும் தெரியாது. அதான். சுலோச்சிக்குட்டிக்கு ஒரு டம்ம டம்ம டமரினா தம்பட்டம் கிடச்சது. அவள் கேட்டதோ குழல். சங்கரனுக்கு க்ரோஷா ஊசியும் நூலும்! அவன் கேட்டது ரப்பர் பூட்ஸ். கல்யாண சந்தடிலே தப்பு நடக்கிற மாதிரி, ஒண்ணு, இரண்டு நடந்தாலும். ஆக மொத்தம் சக்சஸ். கொளுத்திப்பிட்டாங்க இந்த தேவதைக்கூட்டம். போது விடிஞ்சா எல்லார் கிட்டேயும் பரிசுக் குவியல். ஆனா, யாருக்கும் தெரியாது, சாண்டா க்ளாஸ் அபேஸ்னு.

இவாள்ளாம், ‘ஆச்சா போச்சா’ னு ஆசுவாசப்படுத்திண்டு இளிச்சவாயன் மன்றதுத்துக்கு , அதுவும், என்றுமில்லாத திருநாளா, பகல்பத்து வேளையில், திரும்பி, மான்களுக்கு ஐஸ் (புலி பால் குடிக்காதுன்னா, வடதுருவத்து ரைய்ண்டீர்கள் தண்ணி குடிக்காமல், ஐஸ் தான் கடிப்பார்கள்!) காமிச்சுட்டு உள்ளே வந்தா ‘சாண்டா க்ளாஸ்’ எங்கேன்னு கேட்கிறாள். பவள சங்கரி. எல்லாம் பேஸ்து அடிச்சாப்லெ முழிக்கிறதுகள். கண்லெ நீர் கோத்துண்டு வருது. கொஞ்சம் தாகசாந்தி பண்ணப்றம் சமாளிச்சுண்டு, துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.

ஜாலி தான் லீடரா. அவள் அந்த புர்ஜி கானகத்து பட்டமகிஷி நன்மொழியாளன்னையிடம் போய் ஃஎப்.ஐ.ஆர். போட்டாள். ராணியும் ஆவன செய்வதாக உறுதியளித்தாள். ஜாலி ஒரு படையை சேர்த்துக்கொண்டு முஸ்தீபுகள் செய்தாள். சாண்டாவுக்குத் தெரியும் சிஷ்யகோடிகளின் அருமை. ஆனாலும் ராப்பூரா அவருக்குக் கவலை. ராக்ஷாசாள்ளெல்லாம் வேறே எள்ளலும், கிள்ளலுமாக வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். காழ்ப்புணர்ச்சி தான் பேயாட்டம் ஆடினான். நம்ம ஐயா கொயட்டு.

இந்த சனியங்கள் எல்லாம் ஓடி ஆடி ஓய்ந்த பிறகு, பரிதாப நிவாரணி வந்து மிருதுவாக பேசினார். ‘இதுகளுக்கு என்னை அவ்வளவா பிடிக்காது. ஆனா, காரியம் கெட்டுப்போச்சு. இனிமேல் அடுத்த வருஷம் தான் நீ இயங்கலாம். அதற்குள் ஏமாந்து போன பசங்க இங்கே வந்தால், அவர்களை என் குகைக்குக் கொண்டு வந்துட்றேன்’ என்றார். சாண்டா, நீ பரிதாப நிவாரணம் நாடியது இல்லையா? என்று கேட்டார். வாஸ்தவம். நல்லவனாகிய உன்னை என் குகைக்கு அழைத்துப்போகப்போறேன். எதுக்கு? உன்னை தப்புவிக்க. என்றார். அழைச்சுண்டு போய் விருந்து படைத்து, தாம்பூலம் தரிக்க வைத்து, புத்தாடை உடுத்தி விட்டு, ரகசிய கதவை திறந்து விட்டார். சூரிய வெளிச்சம் பளீரென்று. சாண்டா சொன்னார், ‘இந்த லோகத்திலெ நல்லவா, கெட்டவா உண்டு. நீ இல்லை என்றால், நல்ல வா கெட்டுப்போய்டுவா. கெட்டவா திருந்த மாட்டா. மெர்ரி கிருஸ்துமஸ்.’ என்று.

ஜாலியா விசில் அடிச்சுண்டே, இளிச்சவாயன் மன்றம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். கொஞ்சதூரம் போன உடனே ஸ்தம்பிச்சு நின்னுட்டார். அர்ஜுனனுக்கு வந்தது போல் உடல் நடுக்கம். மனசு சஞ்சலம். கண்களிலிருந்து தாரை, தாரையாக ஜலம் கொட்றது. தாடியெல்லாம் ஈரம். ஏன் தெரியுமா?

கண்ணுக்கெட்டியமட்டும் பெருங்கூட்டம். லக்ஷக்கணக்கான தேவதைகள், கின்னரர்கள், கங்காதரர்கள், கந்தர்வர்கள், தேவதைகள், சமத்துக்குட்டிச்சாத்தான்கள் எல்லாரும், அவா, அவா குழந்தை, குட்டிகளோடு, கூடி, அவரை நோக்கி, நடந்தும், புரவியேறியும், களிறு மேல் அமர்ந்து, ரதங்களிலும், நடந்தும், ஆரவாரமாக வந்து கொண்டிருந்தனர். தலைமை: ஜாலி, குறும்பு, கேலி + பண்பு. போற வேகத்தைப் பாத்தா, ராக்ஷாசா காலி, குகைகள் காலி. ராணிக்கு சிம்மாசனம். பரிதாப நிவாரணி தான் திவான்.

கிஃப்டெல்லாம் வினியோகம் பண்ணிட்டோம். ஓடிப்போய் சுலோச்சிக்குக் குழல் கொடுத்த்தோம். தம்பட்டத்தை வாபஸ் வாங்கவில்லை. அவள் அதை பூதபாண்டி கிட்ட கொடுத்து விட்டாள். சங்கரனுக்கு அளவு பார்த்து பூட்ஸ் கொடுத்தோம். க்ரோஷா ஊசியையும், நூலையும், அவன் கல்யாணிக்குட்டிக்குக் கொடுத்து விட்டான். என்று ஜாலி + சொன்னவுடன், எல்லாரையும் ஆரத்தழுவிக்கொண்டார். ‘தன்னலம் வகையறா இருக்கத்தான் இருப்பா. விட்றுவோம். ஒரு நாள் லேட்டாயிடுத்து. வாங்கோ. ஃபேக்டரியை முடுக்குவோம் என்றார்.

கட் கட் கட கடா!

இன்னம்பூரான்

25 12 2012.

இளிச்சவாயன் மன்ற போஷகர்/நிறுவனர்/ நடத்துனர்

பி.கு. 31 12 2012க்குள் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்குத் தனிமடலாபிஷேகம் செய்து வைக்கப்படும்.
சித்திரத்துக்கு காப்புரிமை + நன்றி: http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jpg

        SANTA.pages
140K
தேமொழி      Wed, Dec 26, 2012 at 2:57 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, Innamburan Innamburan , Jothi Themozhi
ஐயா,

ஆஹா ....நாங்க எல்லோருமே கதையில் வருகிறோமே.  சாண்டாவை கண்டுபிடிப்பதில் பங்கேற்றதில் மகிழ்ச்சி தாளவில்லை.

நான் அடுத்தடுத்து வரும் சாகசப் பயணங்களிலும் பங்கு கொள்ளலாமா?

(ஆனால் ஷைலஜாவை   மைபா கொண்டுவந்தால் மட்டுமே  சேர்த்துக்கலாம்)

"நன்மொழியாளன்னையிடம் போய் ஃஎப்.ஐ.ஆர். போட்டாள்"....என்று காணமல் போனவரைக் கண்டுபிடிக்க நடந்த முறையான முயற்சி சிரிப்பு வரவழைத்தது.

விட்டால் தகவலறியும் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு, மனித நேயம் சட்டம் போன்றவையும் கதையில் வரும் போலிருக்கிறது.

இறுதியில் யாவும் சுபம்.  மகிழ்ச்சியே.  கிறிஸ்துமஸ் முடிந்தது நாமும் நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதானா? 

தொடர் நகைச்சுவை  சித்தரிப்புகளை எதிபார்க்கிறேன்.

நன்றி.

...தேமொழி

(இளிச்சவாயன் மன்ற நிரந்தர உறுப்பினர் )
[Quoted text hidden]
--

shylaja      Wed, Dec 26, 2012 at 4:05 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil@googlegroups.com, thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan , Jothi Themozhi

2012/12/26 தேமொழி
ஐயா,

ஆஹா ....நாங்க எல்லோருமே கதையில் வருகிறோமே.  சாண்டாவை கண்டுபிடிப்பதில் பங்கேற்றதில் மகிழ்ச்சி தாளவில்லை.

நான் அடுத்தடுத்து வரும் சாகசப் பயணங்களிலும் பங்கு கொள்ளலாமா?

(ஆனால் ஷைலஜாவை   மைபா கொண்டுவந்தால் மட்டுமே  சேர்த்துக்கலாம்)?>>>>ஆஹா   தேமொழி  நீங்களுமா?:)

a
[Quoted text hidden]

--
SHYLAJA

amaithi cchaaral      Wed, Dec 26, 2012 at 4:13 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
கலக்கல் இ.ஐயா, சாண்டா க்ளாஸைக் கண்டுபிடித்த மீட்புக்குழுவிற்கு ஸ்பெஷல் ஷொட்டு.

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.

http://amaithicchaaral.blogspot.com
--

Karuannam Annam      Wed, Dec 26, 2012 at 6:11 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai editor , Innamburan Innamburan
சில நாட்களில் படித்த பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு.
 பொருட்செறிந்த கதையைத் தெரிந்தெடுத்து அருமையாக மொழிபெயர்த்துள்ளீர்கள் இ.சார்.
குழந்தைகளுக்கான பதிவு என்பதை விடவும் பெரியவர்களுக்கான கருத்து.
தன்நலம், பொறாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி மகிழ்ச்சியை அழிக்கும், குறறத்திற்கு மறுகிவருந்தல் மகிழ்ச்சியை மீட்கும் என்பது நல்ல உருவகம்.

மகிழ்ச்சிக்கு உற்ற துணை குறும்பு, ஜாலி, புண்படுத்தாத கேலி! அவை சில நேரங்களில் எண்ணத்திற்கு மாறாகச் செயலாற்றிவிடுவதுமுண்டு!

மகிழ்ச்சியின் தோழர்களுக்குக் குறும்பு, ஜாலி, புண்படுத்தாத கேலி என்ற பெயர்களும் அரசிக்கு நன்மொழிஅன்னை எனப் பெயரளித்தது தங்கள் தனித்திறன். கதையில் இல்லாதது. கதையின் மூலத்தையும் உடன் படிக்கத்தந்தது சிறப்பு.
அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும் தங்களை வணங்குகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Innamburan Innamburan      Wed, Dec 26, 2012 at 7:29 AM
To: Karuannam Annam
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai editor , Innamburan Innamburan
நன்றி பல. நன்மொழியாளன்னை யார் என்று கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்.  புத்தாண்டு பரிசு கியாரண்டி.
இன்னம்பூரான்

[Quoted text hidden]
Geetha Sambasivam      Wed, Dec 26, 2012 at 10:03 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: tamizhsiragugal@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal
புன்னகை அப்டீனா என்ன? இந்த பூக்கள் எல்லாம் ஆடி அசஞ்சுண்டு சிரிக்கறது பாரு. அதான்.//

மிக அருமையான, அழகான வர்ணனை.  இயல்பானதும் கூட. சான்டாகிளாஸ் கிடைச்சுட்டாரா? நல்லவேளை! நான் ஒரு பையனையும் அவன் நண்பர்களையும் போலார் எக்ஸ்பிரஸில் சான்டாவைப் பார்க்க அனுப்பி வைச்சிருக்கேன். ஏமாந்து போகமாட்டாங்க. சான்டாவைப் பார்த்துடுவாங்க.

2012/12/24 Innamburan Innamburan
சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார்!

ஆக்சுவலி, இது எழுதி நூறு வருசத்துக்கு மேலே ஆச்சு. நான் சகட்டு மேனிக்கு என் வழியில் மொழியாக்கம் செய்தேன். தொடர நேரிட்டால், ஆங்கிலக்கதையையும் அப்டியே போட்றேன். இரண்டையும் பசங்கக் கிட்ட சொல்லலாம். எதற்கும் பசங்க என்ன சொல்றான்னு

கேட்டுச்சொல்லு என்று சாண்டா க்ளாஸ் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கார்.

லேடஸ்ட் தந்தி: ‘சாண்டா க்ளாஸ் மீட்கப்பட்டார்.’

சித்திரத்துக்கு காப்புரிமை & நன்றி: http://www.abebooks.com/images/books/Bobbs-Merrill/Kidnapped-Santa-Claus.jpg

[Quoted text hidden]
Geetha Sambasivam      Wed, Dec 26, 2012 at 10:07 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil@googlegroups.com, தமிழ் சிறகுகள்
//பி.கு. 31 12 2012க்குள் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினர்களுக்குத் தனிமடலாபிஷேகம் செய்து வைக்கப்படும்.//

பதிவு பண்ணிண்டாச்சு.

2012/12/25 Innamburan Innamburan

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

[Quoted text hidden]
Innamburan Innamburan      Wed, Dec 26, 2012 at 4:32 PM
To: kamaladevi aravind
நேரம் கிடைத்த போது படித்து, நகைத்துக்கொள்ளவும், கமலம். தனிமடலாபிஷேகத்துக்கு பதிவு செயது கொள்ள விருப்பமா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

[Quoted text hidden]
coral shree      Fri, Dec 28, 2012 at 3:00 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
ஹ. ஹா.....அருமை... அருமை ஐயா.... எம் இளம் வயதில் மீண்டும் நுழைந்து வந்த மகிழ்ச்சி... சூபரோ சூப்பர்......

2012/12/24 Innamburan Innamburan
[Quoted text hidden]
--

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
coralsri.blogspot.com
coralsri.com
Erode.
Tamil Nadu.
--

Karuannam Annam      Sat, Dec 29, 2012 at 9:28 AM
To: Innamburan Innamburan
புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
 நன்மொழியாளன்னை செவிலித்தாயா?
பரிசுக்குப் பரிதவித்த தருமி நினைவுக்கு வருகிறார்!
வணக்கத்துடன்
சொ.வி

2012/12/26 Innamburan Innamburan
நன்மொழியாளன்னை

Innamburan Innamburan      Sun, Dec 30, 2012 at 8:37 AM
To: Karuannam Annam , mintamil
நண்பர் சொ.வி.அவர்களுக்கு
நன்மொழியாளன்னை யாரு? நம்மாத்து சுபாஷிணி தான் வேறு யாரு?. எதற்கும்
உமக்கு பரிசு உண்டு. அது இளிச்சவாயன் மன்ற உறுப்பினராக பதிவு செய்து
கொண்டால் தான் அளிக்கப்படும். மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நிபந்தனை
உண்டு. பின்னூட்டம் போட்டுத்தான் ஆகவேண்டும்.
அன்புடன்,
இன்னம்பூரான்

2012/12/29 Karuannam Annam :
[Quoted text hidden]
Subashini Tremmel      Sun, Dec 30, 2012 at 2:17 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
Cc: Subashini Tremmel
இரண்டு கதைகளையும் இன்று தான் வாசித்தேன் திரு.இன்னம்பூரான். குழந்தைகளுக்குச் சொன்னால் மிக ஜாலியாகக் கேட்டு ரசிப்பார்கள். நன்றாக வந்திருக்கின்றது. அதிலும் கிறிஸ்மஸ் நேரத்தில்.. மிகப் பொருத்தம்.

சுபா

2012/12/25 Innamburan Innamburan
[Quoted text hidden]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Innamburan Innamburan      Sun, Dec 30, 2012 at 2:21 PM
To: mintamil@googlegroups.com
அதை ஏன் கேட்கிறீர்கள், சுபாஷிணி? மவுண்டன் வ்யூ பசங்க அருமையா ஆக்ட் பண்ணி காண்பித்தார்கள். இரண்டு நாள்-4 மணி நேரம். நேரம் போனதே தெரியவில்லை.
இன்னம்பூரான்.
[Quoted text hidden]
Kamala Devi      Sun, Dec 30, 2012 at 2:56 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: "mintamil@googlegroups.com"
iஇ சார்
நிங்ஙளின் தமிழ் , ரசித்துப்படிக்கிறேன்
எப்படி எழுதுகிறீர்கள் ?அவ்வப்போது ஓய்வெடுங்கள்
முதலில் உடல் நலமும் பேணவும்
அன்புடன் கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

2012/12/25 Innamburan Innamburan
ஃப்ளாஷ்! சாண்டா க்ளாஸ் மீட்பு!
http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jpg

சொல்லிட்டேன் சாண்டா கிட்ட! ‘பாரேன். எல்லாருக்கும் சந்தோஷம் பாத்தியா?’ என்றார். காளை ராஜன் பேரனை, குகையிலிருந்தபடியே தூங்கப்பண்ணேனே என்று தனக்குத் தானே ஷொட்டுக்கொடுத்துக்கொண்டார். இதல்லாம் எனக்கு அப்றம் தான் தெரியும்.  குகையில் சிக்னல் கிடைக்கவில்லையாம். ‘ஹாய்’ என்று ஒரு சொல் எஸ்.எம்.எஸ். மட்டும் தான் கொடுத்தார்.
‘மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று கொம்மாளம் போட்டாங்களா, ராக்ஷசாள்! “பசங்க பொம்மைகளை காணாமல் ஏமாந்து போவார்கள். அழுவார்கள். அடிச்சுப்பார்கள். அப்பா, அம்மா கூட கோவிச்சுப்பா. வேறே வழி ஒண்ணும் இல்லாமல், பசங்க திண்டாடச்சே, தன்னலமும், பொறாமையும், வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தலை தூக்கும். நாங்கள் ஜெயித்தோம்.” என்று மார் தட்டிக்கொண்டார்கள்.
இனி நடந்தது எல்லாம் மின்னல் வேகம். சாண்டா க்ளாஸ்ஸுக்கு வயசாயிண்டு வரதோல்லியோ. ஜாஸ்தி நடக்கமுடியல்லை. அதான், இந்த தடவை, எதுக்கும் இருக்கட்டும் என்று ஜாலி என்ற குட்டி தேவதை, குசும்பு என்ற குட்டிச்சாத்தான், கேலி என்ற கின்னரன் மூணு பேரையும் கூட்டிண்டு போயிருந்தார். அவா மூணு பேரும்  இந்த ஒன்பது மான் ஓட்டும் வண்டியின் அச்சு மேலே உக்காந்திண்டு கதையளந்துண்டு இருந்தாங்க. தீடீர்னு சைலன்ஸ். தாத்தா விசில் அடிச்சுண்டு தான் போவார்.எப்பப் பாத்தாலும், ஷைலஜா மாதிரி பாடிண்டே இருப்பார். சந்தேஹம் வந்துடுத்தா. கேலி தான் முதல்லெ பாத்தான். சட்னு வண்டியை நிறுத்தினான். ஜாலியும், குசும்பும் உடனே மேலே ஏறி வந்தா. நோ சாண்டா க்ளாஸ்!
அழுகை, அழுகையா வரது. கேவிக் கேவி அழுதார்கள். ஜாலி தான் சொன்னாள், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், இந்த தன்னல வகையறா ராக்ஷசாளுக்கு இரக்கம் வருமாடா? எல்லாரும் கம்போஸ் பண்ணிக்கோங்கோ. நான் லீட் பண்றேன் என்றாள். ஆமாம். அங்கேயும் பொண்டுகள் தான் லீடிங்க்.
சந்த்லெ கேப் கிடைச்சா, நான் சைக்கிள் என்ன? கப்பலே விடுவேன் இல்லையா? டக்னு சொல்லிட்டேன். ‘தேவதா சிரோன்மணிகளா! மின் தமிழ்லெ கூட இப்படித்தான். ஆயிரக்கணக்கான ஆம்ப்ளைஸ் இருக்கா. கண்ணே, மணியே! கண்ணின் மணியே! அப்டீனு  மோஹனும், காளையும் வந்தாலும், நம்ம தீன் தேவீயாஹ்ம்: தேமொழி, ஷைலஜா, பவளா தானே தாத்தாவுக்குக் கொடி பிடிச்சான்னு சொன்னவுடன், ஒரு உத்வேகத்தில் சாண்டா க்ளாஸ் மீட்புப்படை நிறுவப்பட்டது. ஒரு நிமிஷத்துக்கு விஷமம் செய்ய மறந்த குசும்பு நாம திரும்பினா, பரிசுகளை கொடுக்க டிலே ஆயிடும். பசங்களும் ஏமாந்து போவா. சாண்டாவுக்கும் அது பிடிக்காது என்று நிஜமாகவே வருத்தம் தொனிக்கத் தேமொழி (மன்னிக்கவும்! தனிமொழி) பேசினான்.
ஆனா பாருங்கோ. நடந்தது என்ன? ஜாலியும், குசும்பும், கேலியும் பம்பரமாக சுழன்றார்கள்.  ஒன்பது மான்களும் சிட்டா பறந்தன. சின்னப்பசங்க தானே. சொன்னதை செய்யத்தெரியுமே தவிர, தனக்கா (என் மாதிரி) ஒண்ணும் தெரியாது. அதான். சுலோச்சிக்குட்டிக்கு ஒரு டம்ம டம்ம டமரினா தம்பட்டம் கிடச்சது. அவள் கேட்டதோ குழல். சங்கரனுக்கு க்ரோஷா ஊசியும் நூலும்! அவன் கேட்டது ரப்பர் பூட்ஸ். கல்யாண சந்தடிலே தப்பு நடக்கிற மாதிரி, ஒண்ணு, இரண்டு நடந்தாலும். ஆக மொத்தம் சக்சஸ். கொளுத்திப்பிட்டாங்க இந்த தேவதைக்கூட்டம். போது விடிஞ்சா எல்லார் கிட்டேயும் பரிசுக் குவியல். ஆனா, யாருக்கும் தெரியாது, சாண்டா க்ளாஸ் அபேஸ்னு.
இவாள்ளாம், ‘ஆச்சா போச்சா’ னு ஆசுவாசப்படுத்திண்டு இளிச்சவாயன் மன்றதுத்துக்கு , அதுவும், என்றுமில்லாத திருநாளா, பகல்பத்து வேளையில், திரும்பி, மான்களுக்கு ஐஸ் (புலி பால் குடிக்காதுன்னா, வடதுருவத்து ரைய்ண்டீர்கள் தண்ணி குடிக்காமல், ஐஸ் தான் கடிப்பார்கள்!) காமிச்சுட்டு உள்ளே வந்தா ‘சாண்டா க்ளாஸ்’ எங்கேன்னு கேட்கிறாள். பவள சங்கரி. எல்லாம் பேஸ்து அடிச்சாப்லெ முழிக்கிறதுகள். கண்லெ நீர் கோத்துண்டு வருது. கொஞ்சம் தாகசாந்தி பண்ணப்றம் சமாளிச்சுண்டு, துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.
ஜாலி தான் லீடரா. அவள் அந்த புர்ஜி கானகத்து பட்டமகிஷி நன்மொழியாளன்னையிடம் போய் ஃஎப்.ஐ.ஆர். போட்டாள். ராணியும் ஆவன செய்வதாக உறுதியளித்தாள். ஜாலி ஒரு படையை சேர்த்துக்கொண்டு முஸ்தீபுகள் செய்தாள். சாண்டாவுக்குத் தெரியும் சிஷ்யகோடிகளின் அருமை. ஆனாலும் ராப்பூரா அவருக்குக் கவலை. ராக்ஷாசாள்ளெல்லாம் வேறே எள்ளலும், கிள்ளலுமாக வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். காழ்ப்புணர்ச்சி தான் பேயாட்டம் ஆடினான். நம்ம ஐயா கொயட்டு.
இந்த சனியங்கள் எல்லாம் ஓடி ஆடி ஓய்ந்த பிறகு, பரிதாப நிவாரணி வந்து மிருதுவாக பேசினார். ‘இதுகளுக்கு என்னை அவ்வளவா பிடிக்காது. ஆனா, காரியம் கெட்டுப்போச்சு. இனிமேல் அடுத்த வருஷம் தான் நீ இயங்கலாம். அதற்குள் ஏமாந்து போன பசங்க இங்கே வந்தால், அவர்களை என் குகைக்குக் கொண்டு வந்துட்றேன்’ என்றார். சாண்டா, நீ பரிதாப நிவாரணம் நாடியது இல்லையா? என்று கேட்டார். வாஸ்தவம். நல்லவனாகிய உன்னை என் குகைக்கு அழைத்துப்போகப்போறேன். எதுக்கு? உன்னை தப்புவிக்க. என்றார். அழைச்சுண்டு போய் விருந்து படைத்து, தாம்பூலம் தரிக்க வைத்து, புத்தாடை உடுத்தி விட்டு, ரகசிய கதவை திறந்து விட்டார். சூரிய வெளிச்சம் பளீரென்று. சாண்டா சொன்னார், ‘இந்த லோகத்திலெ நல்லவா, கெட்டவா உண்டு. நீ இல்லை என்றால், நல்ல வா கெட்டுப்போய்டுவா. கெட்டவா திருந்த மாட்டா. மெர்ரி கிருஸ்துமஸ்.’ என்று.
ஜாலியா விசில் அடிச்சுண்டே, இளிச்சவாயன் மன்றம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். கொஞ்சதூரம் போன உடனே ஸ்தம்பிச்சு நின்னுட்டார். அர்ஜுனனுக்கு வந்தது போல் உடல் நடுக்கம். மனசு சஞ்சலம். கண்களிலிருந்து தாரை, தாரையாக ஜலம் கொட்றது. தாடியெல்லாம் ஈரம். ஏன் தெரியுமா?
கண்ணுக்கெட்டியமட்டும் பெருங்கூட்டம். லக்ஷக்கணக்கான தேவதைகள், கின்னரர்கள், கங்காதரர்கள், கந்தர்வர்கள், தேவதைகள், சமத்துக்குட்டிச்சாத்தான்கள் எல்லாரும், அவா, அவா குழந்தை, குட்டிகளோடு, கூடி, அவரை நோக்கி, நடந்தும், புரவியேறியும், களிறு மேல் அமர்ந்து, ரதங்களிலும், நடந்தும், ஆரவாரமாக வந்து கொண்டிருந்தனர். தலைமை: ஜாலி, குறும்பு, கேலி + பண்பு. போற வேகத்தைப் பாத்தா, ராக்ஷாசா காலி, குகைகள் காலி. ராணிக்கு சிம்மாசனம். பரிதாப நிவாரணி தான் திவான்.
கிஃப்டெல்லாம் வினியோகம் பண்ணிட்டோம். ஓடிப்போய் சுலோச்சிக்குக் குழல் கொடுத்த்தோம். தம்பட்டத்தை வாபஸ் வாங்கவில்லை. அவள் அதை பூதபாண்டி கிட்ட கொடுத்து விட்டாள். சங்கரனுக்கு அளவு பார்த்து பூட்ஸ் கொடுத்தோம். க்ரோஷா ஊசியையும், நூலையும், அவன் கல்யாணிக்குட்டிக்குக் கொடுத்து விட்டான். என்று ஜாலி + சொன்னவுடன், எல்லாரையும் ஆரத்தழுவிக்கொண்டார். ‘தன்னலம் வகையறா இருக்கத்தான் இருப்பா. விட்றுவோம். ஒரு நாள் லேட்டாயிடுத்து. வாங்கோ. ஃபேக்டரியை முடுக்குவோம் என்றார்.
கட் கட் கட கடா!
இன்னம்பூரான்
--

[Quoted text hidden]
கி.காளைராசன்      Sun, Dec 30, 2012 at 4:06 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Tremmel
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
2012/12/30 Innamburan Innamburan

நன்மொழியாளன்னை யாரு? நம்மாத்து சுபாஷிணி தான் வேறு யாரு?.

அன்பன்
கி.காளைராசன்
--
[Quoted text hidden]
Karuannam Annam      Sun, Dec 30, 2012 at 4:41 PM
To: Innamburan Innamburan
Cc: mintamil

2012/12/30 Innamburan Innamburan
நண்பர் சொ.வி.அவர்களுக்கு
நன்மொழியாளன்னை யாரு? நம்மாத்து சுபாஷிணி தான் வேறு யாரு?. எதற்கும் உமக்கு பரிசு உண்டு.

திருமிகு சுபாவுக்கு ஏற்ற பட்ட்ம் சார்.
இன்மொழி எப்போதும் நன்மொழி தானே.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

No comments:

Post a Comment