Google+ Followers

Thursday, April 4, 2013

நூறு வருஷங்களுக்கு முன்னால் : 1
நூறு வருஷங்களுக்கு முன்னால்: 1
23 messages

Innamburan Innamburan Sun, Jun 14, 2009 at 6:33 PM
To: minTamil@googlegroups.com


6/14/2009 10:55 PM IST
நூறு வருஷங்களுக்கு முன்னால் : 1


ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னாலே போக முடியுமோ? அப்படின்னா இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் போக முடியுமே! ஏன்? யுகராம்பத்துக்கே போகலாம். அப்படி மனசு சஞ்சாரம் பண்ணும்போது, செந்தமிழ், பேசும் தமிழ் என்றெல்லாம் பார்க்கமுடியுமா? உணர்ச்ச்சி ஆறா பெருக்கெடுத்துட்டா, கையா எழுதறது? மனசுன்னா இந்த ‘ப்ளான்ச்செட்’ ன்னு சொல்றாளே, ஆவி சொல்ல சொல்ல எழுதறமாதிரி, கையை ‘மூவ்’ பண்றது. இந்த மனோவேகம் இருக்கே, அது கொஞ்சம் கூட தயா தாக்ஷ்ண்யம் பாக்காது. மடை வெள்ளம் திறந்த மாதிரி, விரட்டும். மத்த வேலயையெல்லாம் திரஸ்காரம் பண்ணிட்டு, உடனே எழுதறான்னு, அழுச்சாட்யம் பண்ணும். நான் இந்த மாதிரி எழுதறது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதனாலே, ‘விட்டுப்பிடிறா’ன்னு பட்டறிவு குரல் கொடுத்திண்டே இருக்கு. காதுல்லே விழுந்தாத் தானே?  
பத்து நிமிஷம் முன்னாலே பொதிகையிலே ஒரு சின்ன நாடகம். பத்து பதினெஞ்சு நிமிஷம் தான். குலைந்து போய்விட்டேன். இன்னும் கையும் காலும் பதறறது. நடந்த்ததா? கற்பனையா? தெரியல்லை. வரவள்ளாம், அந்த காலத்திலே இருந்தவா. பெரிய மனுஷான்ன்னா அவா தான் பெரிய மனுஷா. வீரேசலிங்கம் பந்துலு, மடிசஞ்சிக்கெல்லாம் அவர் சிம்ம சொப்னம். ஜி.சுப்ரமண்ய ஐயர், சுதேசமித்திரன்னு. மஹாத்மா காந்தி ஜி.சுப்ரமண்ய ஐயரோட அந்திமக்காலத்திலே, தலையை கோதிக்கொடுத்து ஆஸ்வாசபடுத்தினார்.  ஆனா, கதையின் தலைவி சந்திரிகாங்கற குட்டிப்போண்ணு, அவ அத்தை விசாலாட்சியெல்லாம் கற்பனையாத்தான் படறது. கதை எழுதினது ஒரு ஆவேசக்காரன். ஒரே படப்படப்புத்தான். ஆசுகவி. மனசிலே பட்டதை ‘தீம் தரிகெடெத்தோம்’னு இடியும் மின்னலுமா கொட்டொ கொட்டுன்னு எல்லாரையும் ஆட்டிபடைத்து ஆகாத்தியம் பண்ணும் பேர்வழி. பேர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார். இந்த் கதையை சின்ன வயசில்லே படிச்சது நன்னா ஞாபகம் இருக்கு.
அது சரி. படம் பிடிச்சவா, அவரோட மனசுக்குள்ளே புகுந்து தான் இந்த படத்தைப் பிடிச்சிருக்கா. பெரிய கதை ஒன்னும் இல்லை. ஒரு பொண்ணு பால்ய விதவை. ஊர் தூத்தறது. பட்டிக்காடு. அப்பா தர்மிஷ்டன். அவ மட்ராஸுக்கு, அப்பாட்ட சொல்லிட்டு வந்துறாரா, அநாதைப்பொண்ணு சந்திரிகாவோட. அதோட அம்மா அல்பாயுசுலே போய்ட்டா. ஜி.சுப்ரமண்ய ஐயர் கிட்ட அடைக்கலம். அவர் தன் விதவைப்பெண்ணுக்கு அந்தக்காலத்திலேயே மறுவிவாகம் பண்ணி, ஹிந்து பத்ரிகைல்லேருந்து விலகறமாதிரின்னா ஆயிடுத்து. அவர் இவளை நிராகரிப்பாரா? ஒரு லெட்டர் கொடுத்து, பந்துலுகாரு கிட்ட அனுப்பறார். 
இந்த சினிமாக்காரா, அவ கிராமம், அப்பாவோட ஆசாரம், இவளோட தடபுடல் கல்யாணம், வண்டிக்காரனோட ஆதுரமான பேச்சு, ஆசிகள், பந்துலுவோட சம்சாரத்தின் கரிசனம் எல்லாத்தையும் தத்ரூபமா காட்றதானலத்தான், தெரிஞ்ச கதையும், சிசு அம்மா வயத்துக்குள்ளே உதைச்சுக்கரமாதிரி, என்னை ஆட்டிவச்சுடுத்து. கடைசில்லெ ஆம்பிள்ளை தான் ஜெயிக்கிறான். கோபால ஐயங்கார்ன்னு ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீஸர். ஐ.சீ.ஸ் மாதிரி வைச்சுக்க்கோங்கோ. ஒரு விதவைப்பொண்ணைத்தான் பண்ணிப்பேன்னு தலைகீழா நிக்கறான். பந்துலுகாரு அந்த சம்பந்த்தத்தை முடிக்கப்பாக்கறார். போறாத காலமோ, இல்லை இன்னோத்தரோட போறர காலமோ, சந்துனுவுக்கு மச்சகந்தி மேல கண்ணு விழுந்தமாதிரி, ஐயங்காருக்கு அகஸ்மாத்தா பாத்த வேலைக்காரப்பொண்ணு மேல மோஹமாயிடுத்து. இதான் கதை.
உன்னை ஏன் இந்த கதை இப்படி பாதிச்சுறத்துன்ண்ணு கேப்பேள். என்ன பண்றது? பாரதி பைத்தியம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு அத்தையின் கதையைப் படித்து, ஒரு நாள் பூரா மூட் அவுட். அதை சொன்னா அதிசயிச்சுப்போயிடுவேள்.  சொல்றதா, வேண்டாமான்னு தான் தெரியல்லே.

இன்னம்பூரான்

Subashini Tremmel Tue, Jun 16, 2009 at 12:44 PM
To: Innamburan Innamburan
---------- Forwarded message ----------
From: meena muthu
Date: Jun 15, 2009 7:05 PM
Subject: [MinTamil] Re: நூறு வருஷங்களுக்கு முன்னால்
To: minTamil@googlegroups.com
அடடா! என்ன ஒரு எழுத்து!அப்படியே எதிர்க்க உக்காந்து பேசறமாதிரி!!

நல்லாத்தெரியறது  உணர்ச்சி ஆறாப்பெருக்கெடுத்து ஓடறது!

நீங்க பட படன்னு எழுதினா மாதிரி நானும் பர பரன்னு படிச்சுட்டேன்!

இப்படித்தான் எப்பவாவது வரும்போது பசக்குனு மனசுல பதிஞ்சுடும் கமலத்தோட எழுத்து மாதிரி ஒங்கொளோடதும்!

அடுத்ததையும் சீக்கிரமா(இதப்போலவே)எழுதிஅதிசயிக்கவையுங்கள். காத்திருக்கோம்.

மீனா
---------- Forwarded message ----------
From: நா.கண்ணன்
Date: Jun 16, 2009 1:16 AM
Subject: [MinTamil] Re: நூறு வருஷங்களுக்கு முன்னால்
To: மின்தமிழ் <minTamil@googlegroups.com>
On Jun 15, 5:51 pm, "innambu...@googlemail.com"
<innambu...@googlemail.com> wrote:
> உன்னை ஏன் இந்த கதை இப்படி பாதிச்சுறத்துன்ண்ணு கேப்பேள். என்ன பண்றது?
> பாரதி பைத்தியம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு அத்தையின் கதையைப்
> படித்து, ஒரு நாள் பூரா மூட் அவுட். அதை சொன்னா அதிசயிச்சுப்போயிடுவேள்.
> சொல்றதா, வேண்டாமான்னு தான் தெரியல்லே.
சத்தியமா இது இன்னம்பூரான் எழுத்தா? இல்லை, மேற்கோள் காட்டுகிறாரா?
இந்த நடை அவருடையதா? எங்கு போச்சு இத்தனை நாள்...
ம்ம்ம்..அதிசயத்து வாய் திறந்தவண்ணம்...

அசட்டுக்கண்ணன்
[Quoted text hidden]


Innamburan Innamburan Tue, Jun 16, 2009 at 4:35 PM
To: Subashini Tremmel
கண்ணன்,
தி.கே.சி. ஒரிடத்தலே சொல்றார், இது கடாக்ஷம் என்று. இது அடியேனின் உடனடி இடுகை. கடாக்ஷம் தான். இந்தமாதிரி அப்பப்போ எழுதினது  இருக்கு.
இன்னம்புறான்
சுபாஷினி,மீனா

நன்றி பல.
[Quoted text hidden]

S
Tthamizth Tthenee Wed, Jun 17, 2009 at 4:28 AM
Reply-To: minTamil@googlegroups.com
To: minTamil@googlegroups.com
இன்  அம்பு நடை
 
 
இன்னம்புரானின்  எழுத்துநடை
 
அதனால் விர்ரென்று பாய்ந்துவிட்டது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


ஏப்ரல் 4, 2013  அன்றைய பின்குறிப்பு. எனக்குத் தமிழில் எழுதி பழக்கம் இல்லை. அநேகமாக, Wed, Jun 17, 2009 at 4:28 AM காலகட்டத்தில், உறக்கம் வர மறுத்த அன்று எழுதியதின் மீள்பதிவு, இது. நண்பர்களில் சிலர் படித்திருக்கலாம், இங்கு கருத்துக்கூறிவர்கள் போல. தவிர, நேரமின்மையால், சக்தி போதாமல் போனதால், ப்ளாக் பதிவு பல வருடங்களாக தேக்கம். நூறு வருஷங்களுக்கு முன்னால் தொடரும். தமிழ் பசியின் காரணமாக பழங்கணக்குப் பார்க்கும்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_sS0Wy1iokpE/TL24nOES-pI/AAAAAAAADOM/rp4NlbwYhrA/s1600/DSC03809.JPG


இன்னம்பூரான்

 

 
n]