Monday, May 20, 2013

[4] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.




 [4] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க..

Innamburan S.Soundararajan Mon, May 20, 2013 at 6:13 PM


 [4] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...

Inline image 1
மூன்று வருடங்களுக்கு பிறகு, நிலைமை மேலும்i சீர்குலைந்தக் காட்சி எங்கும். இந்த இழையில் தனியார் துறையை பற்றியும் நண்பர்கள் பேசியிருக்கிறார்கள். இந்த இழையும், தணிக்கை பற்றிய இழைகளும், கனம் கோர்ட்டார் இழையும் சம்பந்தம் உள்ளவை.
சித்திரத்துக்கு நன்றி: http://www.history.navy.mil/pics/burke_etervig.jpg
இன்னம்பூரான்
21 05 2013
இன்று குறிப்புகள் மட்டும். [16.01.2010]
ஸ்வர்ணா
ஒரு நல்லதல்லாத விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது [ignoring]மாபெரும் தவறு. ஹிட்லர் தலையெடுத்ததற்கு அதுவே காரணம். மறுபடியும், ‘Vigilance is the price of liberty’.
திரு. ரெ.கா
நன்றி. நமக்குள் கருத்து வேறுபடவில்லை. பிரிட்டீஷ் காலனித்துவ ஆட்சி முறை மோசமானது. கென்யாவில்ஜோமோ கென்யாட்டா அவர்களை தலையெடுக்காமல் செய்தார்கள்ஸர் ராய் புஷர் மலேயாவில் கொடுங்கோல் ஆட்சி செலுத்தினார். இந்தியாவும் ஜாலியன்வாலா பாக் கொலைக்களத்தை மறக்குமோ? 17ம் நூற்றாண்டுஇந்தியா செல்வம் கொழித்த நாடு. அள்ளிக்கொண்டு போனார்கள். இருந்தபோதிலும்நிர்வாக வரலாறு என்றால்ஸர் வில்லியம் ஸ்லீமன் 'தக்ஸ்'கொள்ளையர்/கொலையாளிகளை அடக்கியதையும்அவர்களின் வம்சாவளியை புனருத்தாரணம் செய்ததையும் மறக்கமுடியாது.

சர்வாதிகாரத்துக்கு அளித்த விதி விலக்கை நான் விளக்கமாக கூறி இருக்கவேண்டும். அது நன்முத்து ஈன்றதே கிடையாது என்று சொல்லியிருக்கவேன்டும். சிங்கப்பூர் சற்று மாறுபட்டதுசிறிய பிரதேசம் என்பதால். இந்தியாவில்மத்திய/மாநில அரசுகளால்,பல வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட முனிசிபல்/பஞ்சாயத்து நிர்வாகங்களில் சில நல்ல பேர் வாங்கியுள்ளன. அவற்றில் ஒன்று சிங்கப்பூர் படிப்பினை என்று சொன்னதாக நினைவு.  
தனியார் செயல்பாடுகள்எந்த அரசு முறைகளிலும் செம்மையாக அமையாததிற்கு காரணம்அதுவே அரசு மேலாண்மையை குலைத்து விடுவதால்அமெரிக்கவில்இங்கிலாந்தில்ரஷ்யாவில்சீனாவில், இந்தியாவில். இந்தியாவில் தனியார் துறை வந்தால் "விழுங்கிவிடும்" என்ற கருத்தின் அடித்தளம்அரசின் மேலாண்மையின் கந்தரகூளம். இருந்தும்அவையல்லை எனின்அரசின் செயல்பாடுகள் மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்வதும் முரண் அல்ல. இந்த சிக்கலான சமாச்சாரத்திற்கு தனி இழை தொடங்கவேண்டியிருக்கலாம். தற்காலிகமாகஅமைதி காக்கிறேன். உங்கள் கருத்தைப்போற்றுகிறேன்மற்றபடிநம்மிருவரின் சிந்தனை ஒரே வழியில்.

வாரிசுத்துவத்தைப்பற்றி திரு நரசய்யா ஹிந்துவில் எழுதியதையும்மற்ற கருத்துக்களையும் படித்தேன். இந்தியாவின் வாரிசுத்துவம் மகா மோசம். தொடக்க காலம்.: மோதிலால் நேரு [தனயன் தந்தையை கொணர்ந்தார் என்பதையும் மறக்கலாகாது.] அமெரிக்காவில் புஷ் வம்சாவளி ஒரு அகஸ்மாத்தான கேடு. அங்கு கென்னடி வம்சாவளியையும் இங்கிலாந்தில் பிட் வம்சாவளியையும் பார்த்தால்வேறுபாடுகள் தெரியும்.  அங்கு தகுதி இருந்தது.

ஓம் ஐயா அவர்களின் 'லாண்டரி மார்க்', ',ரி,,,,,நிரசித்தேன். தணிக்கை துறைக்கு  நோட்ஃபைல்  பார்க்க முழு உரிமை உண்டு. இந்திராகாந்திஅரசியல் சாஸனத்துக்கு முரணாகஎமெர்ஜென்ஸி சமயத்தில் அந்த உரிமையை பறித்தார். பிறகு ஜாம் ஜாம் என்று திரும்பி வந்தது.
தமிழ்த்தேனி சொலவது முற்றிலும் உண்மை. எக்ஸ்னோரா நிர்மல் சாதனை செய்யவில்லையா?
Venkatachalam Subramanian 
1/16/10



தற்கால சூழ்நிலையில் தனியார் வந்தால்இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழ்நாட்டு இலவச மருத்துவ சிகிச்சை காப்பீடு ஒரு உதாரணம. 
-=-=
ஓம்.
  • தொழு நோய் வந்தவர்களுக்கென இலவசமாக ஒரு இந்தியத் தயாரிப்பின்  மாத்திரைகள் நெடுங்காலமாக உட்கொள்ளவேண்டும் என்று அரசு மருத்துவ மனைகளில் வினியோகிக்கப்பட்டு வந்தன. தவறாமல் குறிப்பிட்ட நாட்களில் தன்னுடைய வெளி நோயாளிப் பதிவேட்டினைக் கொண்டு காட்டி தமக்கான கோட்டா மாத்திரையைப் பெற்று மேற்கொண்டு வலுவடையும் தொழு நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் அப்பாவி மக்கள்..
  • ஜெர்மன் நிறுவனம் ஒன்று இலவசமாக அந்த தொழுநோய் மாத்திரைகளைத் தருவதாக தந்துதவியது. இந்தியத்  தயாரிப்பு மாத்திரைக்கு வெளிச் சந்தை இல்லை என்பதால் தயாரிப்பு நின்றுவிட்டது. ஜெர்மன் நிறுவனம் தன்னுடைய கொடையை முன்னறிவிப்பு ஏதும் இன்றி நிறுத்திவிட்டது. கேட்ட அரசுக்கு ஒரு “சாரி” சொல்லிவிட்டு முடங்கி விட்டது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக சாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் மக்கள் தவித்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை.
  • கன்னியா குமரியில் விவேகானந்தர் தீவுத் திடலில் , கட்டிடம் மற்றும் சிலா ரூபங்களைக் உப்புக் காற்றின் அரிப்பினிலிருந்து தடுத்துக் காக்கும் தனி வகையான வர்ணம் பூச எடுத்துக்கொண்ட முயற்சியில் வெளி நாட்டு நிறுவனம் முன்வந்து வினியோகம் மேற்கொண்டது. உச்சக் கட்டத்தில் அந்தவகை வர்ணம் தயாரிக்க செலவு மிகுந்துபோயிற்று என பலமடங்கு விலையை உயர்த்தி, விரும்பினால் வாருங்கள் என்று சொல்லி விட்டது.
  • அய்யன் வள்ளுவரும் இந்தப் பட்டியலில்  தற்போது அகப்பட்டுக் கொண்டு பெருஞ்செலவாளி ஆகிவருகிறார்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
Geetha Sambasivam
1/16/10

இப்படி எத்தனையோ!!!!!!!!!


karthi 
1/17/10

அன்புள்ள ஓம் அவர்களுக்கு,
தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளன,
உலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும்
இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது
எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு.
இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின்
நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது. Law and order சரியாக
உள்ள ஓர் அரசாங்கத்தில், பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார்
நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது. தனியார் துறையை மேற்பார்க்கும் அரசு
நேர்மையானதாக இருக்க வேண்டும். (மீண்டும் சிங்கப்பூரே நினைவுக்கு வருகிறது.)
ரெ.கா
ம ஸ்ரீ ராமதாஸ் 
1/17/10

karthi wrote:
அன்புள்ள ஓம் அவர்களுக்கு,
 தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளன,
உலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும்
இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது
எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு.
 இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின்
நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது. Law and order சரியாக
உள்ள ஓர் அரசாங்கத்தில், பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார்
நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது. தனியார் துறையை மேற்பார்க்கும் அரசு
நேர்மையானதாக இருக்க வேண்டும். (மீண்டும் சிங்கப்பூரே நினைவுக்கு வருகிறது.
One harm in an election based periodic democratic set up, is the influence of wicked Capitalists over the government & its authorities.

ஜனநாயகம் என நாம் மேற்கொண்டுள்ள முறையில் அரசுக்கும் வணிகத்திற்கும் நாம் முறையான பிரிவினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலை ஒரு கண்ணியமான தொழிலாக முழு நேரமாக மேற்கொள்ள வாய்ப்பிருப்பதில்லை. அந்நிலையை வாக்களிப்பு ஜனநாயக முறை தரும் என எதிர்ப்பார்ப்பது கடினம். யதார்த்தமாக, தேர்தலில் ஒருவர் நிற்கிறார் என்பதைக் காட்ட தேவைப்படும் விளம்பரம் முதலீடு எல்லாவற்றையும் பார்க்கும் போது  முதலாளித்துவ சக்திகளை சாராது அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவது எங்ஙனம்?

அரசியலை தொழிலாக மேற்கொள்வோர் இல்லாமையால், தத்தம் தொழிலை விருத்தி செய்ய விரும்புவோரெல்லாம் அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள்.  அவர்கள் யாவரும் முதலாளிகள் :-) ஒருவிதத்தில் தனது நிறுவனத்தை நன்றாக நிர்வகித்து, அதன் பொருட்டு அரசாங்க நிர்வாத்தை நிலை குலைய வைப்போரும் தனியார் முதலாளிகளே!

இதற்கு கார்பரேட்களும் விதிவிலக்கல்ல..

:-)

--

ஆமாச்சு


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/18/10



 ஓம் ஐயாவின் சான்றுகளை வைத்து தனியார்த்துறையை குறை காண இயலாது என்பது சரியே. அரசு துறைகள் இதை விட மட்டமாக் இயங்கியதை காட்டலாம்.

தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளனஉலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும்,இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு. இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின் நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது.
என்று ரெ.கா. அவர்கள் கூறியதை தான் வரலாறும் கூறுகிறது. ஆனால்,

‘ Law and order சரியாக உள்ள ஓர் அரசாங்கத்தில்பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார் நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது என்பது சர்ச்சைக்கு உரியது. சிங்கப்பூர் மாடல் எங்கும் உகந்தது அல்ல.   ம ஸ்ரீ ராமதாஸ் சொல்வது சிக்கலை முன்னிறுத்துகிறதுவிடை தேடவில்லை.

அரசுதனியார்இருவரும் கூட்டுதன்னார்வம்கூட்டுறவு, பஞ்சாயத்து போன்ற சிறுலோகல் அரசியல் என்று பல வகையான இயக்கங்கள் உள்ளனபணி புரிய. இங்கிலாந்தில் தன்னார்வக்குழுக்ககளை பலபடுத்துவதில்ஓரளவு வெற்றி.
இந்த இழையின் தலைப்பு எளிதில் அவிழ்க்கமுடியாத முடிச்சு. எனினும்சர்வாதிகார அரசு தீமை பல பYaஅக்கும் என்பதில் ஐயமில்லை. ஜனநாயக அரசு செலவு மிகுந்தத்துஆளுமை குறைந்தது எனினும்அதை விட சாத்தியக்கூறு உலகில் எங்கும் இல்லை. இருந்ததும் இல்லை. வரப்போவதுமில்லை. அதன் அசுத்தங்களை களைவது எப்படிஅதை பரிசுத்தப்படுத்துவது எப்படி என்பது தான் கேள்வி.
சில சிந்தனைகள்:
1. வாரிசுத்துவம்சட்டப்படி களையப்படவேன்டும்.
2. அரசோதனியாரோமற்ற இயக்கங்களோமக்கள் பணி பொறுத்தவரைமக்களுக்கு பதில் சொல்லவேன்டும்.
 3.தணிக்கைபுலனாய்வுநீதித்துறை|ண்காணிப்புத்துறைஇவை இணைந்து பணி ஆற்றவேன்டும். 
இன்னம்பூரான்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/18/10


போதுமா இந்த அரசு/தனியார் கூடாநட்பு?
ஹிந்து [19 01  ௨௦௧௦]
 The Centre on Monday told the Supreme Court that 44 institutions including the Bharath Institute of Higher Education and Research, Chennai, founded by Union Minister S. Jagathrakshakan, would lose the deemed university status as they did not meet the standards.
(After becoming Minister, Mr. Jagathrakshakan has not been associated with the management of the Balaji Dental College and Hospital, the Balaji Medical College and Hospital, the Bharat Institute of Science and Technology, the Bharat College of Nursing, the Bharat College of Physiotherapy, and the Sri Lakshmi Narayana Institute of Medical Sciences, Puducherry.)
Students won’t suffer
The Centre, however, made it clear that an estimated 1,19,363 students enrolled in these 44 institutions at the undergraduate and postgraduate levels, in addition to 2,124 students doing research in M.Phil and Ph.D. programmes and 74,808 students pursuing distance education programmes, would continue their studies as the colleges would continue to be affiliated to the universities to which they were earlier affiliated.
This information was given before a Bench of Justices Dalveer Bhandari and A.K. Patnaik, hearing a petition filed by advocate Viplav Sharma seeking regulation of deemed universities.
The bulk of the 44 institutions are in Tamil Nadu: St. Peter’s Engineering College, Avadi; the Noorul Islam College of Engineering, Kumaracoil, Thuckalay; the Meenakshi Medical College and Research Institute, Kancheepuram, and other institutions run by this university; the Chettinad Hospital and Research Institute, Padur, the Chettinad College of Nursing; the Saveetha Dental College and Hospital; the Saveetha Medical College and Hospital and other institutions; the Arulmigu Kalasalingam College of Engineering, Virudhunagar; the Periyar Maniammai College of Technology, Thanjavur; the Academy of Maritime Education and Research, Chennai; Vel’s Institute of Science, Technology and Advanced Studies, Chennai; the Vel Tech Engineering College; the Karpagam Academy of Higher Education, Pollachi; Vinayaka Mission’s Research Foundation, Salem, and the Balaji Vidyapeeth, Puducherry.
Show-cause to MGR institute
In another case before a Bench of Chief Justice K.G. Balakrishnan and Justices R.V. Raveendran and Deepak Verma, Solicitor-General Gopal Subramaniam said the Dr. MGR Educational and Research Institute running the Thai Moogambigai Dental College and Hospital and the Dr. MGR Engineering College, Chennai, was among the 44 institutions to which notices would be issued asking them to show cause why the deemed university status should not be cancelled.
The ACS Medical College, which admitted students in 2008-2009 and 2009-2010, would not be affiliated to the deemed university as the Human Resource Development Ministry decided not to accept the recommendation of the University Grants Commission.
The Bench disposed of the matter asking the Centre to pass appropriate orders within four weeks in the light of the UGC recommendations and other considerations.
Several aberrations
The Centre’s affidavit said a review committee, headed by Prof. P.N. Tandon, came across several aberrations in the functioning of some of the deemed universities. It found an undesirable management architecture in which families rather than professional 


No comments:

Post a Comment