Thursday, September 8, 2016

சிவகாமியின் செல்வன் 11

சிவகாமியின் செல்வன் 11


இன்னம்பூரான்
9 9 2016

வருடம் 1954: என் வாழ்க்கையில் திருப்பு முனை வருடம். அவ்வருடம் காமராஜர் முதலமைச்சரானார். ஏழு அமைச்சர்கள் மட்டும். விருப்பு, வெறுப்பு, ஜாதிக்கண்ணோட்டம் ஆகியவை இடம் பெறவில்லை. இரட்டைமலை சீனிவாசனின் பேரனாகிய திரு.பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தார்.'பறையன்' என்ற முத்திரையை சுமந்த இரட்டைமலை சீனிவாசன் வட்டமேஜை மாநாட்டுக்கு 'எஸ்.சி.' பிரதிநிதியாக சென்ற கல்விமான். ஆங்கிலேயர்கள் கைகுலுக்க வந்தபோது தீண்டாமையின் கொடுமையை அவர்களுக்குப் புரிய வைத்தவர். அவருடைய பேரனாகிய இந்து புது அமைச்சரை பற்றி பேச்சு எழுந்ததாம். ஆன்மீக செம்மல்களையும், பக்திப்பழங்களையும் விட்டு விட்டு... என்று பேச்சாம். பெரியவரிடம் கேட்டும் விட்டார்களாம். "ஆமான்னேன்...பரமேஸ்வரன் எஸ்.சி. என்று தெரிந்து தான் போட்டிருக்கேன்னேன்...எந்த நாலாஞ்சாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னையோ, அதே நாலாஞ்சாதிக்காரனுக்கு பூரண கும்ப மரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சிக்கிடுப் போவியா இல்லியா? ...பரமேஸ்வரனை மந்திரியக்கி, ஒரு பறையனுக்குக்குப் பரிவட்டம் கட்ட வைக்கிறேன்ன்னேன்..." என்று விளக்கம் கொடுத்தார் என்று சொல்லக்கேட்டவர்?

சித்திரத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxBOlDhMf7n1_iUQ-sjZlxkslnzklaQAnzcuS_HCJAg1hSrgPG0Xv_19QFurvAg83IwDD-GQeSIHxQJBqXteYzvCfFIVpwMmMjMJlsAYhvL-BOz_lL9MIUfydWp8CX39_HMlzIIYaseCbq/s1600/paari0011.JPG


No comments:

Post a Comment