Google+ Followers

Friday, February 5, 2016

தம்! தமா! தம்!- 5


தம்! தமா! தம்!- 2
இன்னம்பூரான்
05 02 2016
இன்றைய தினமலரில்: பாடபேதத்துடன்: மோடிக்குக் கோடி புண்ணியம். வேலை செய்யாமலிருக்கும் அமைச்சர்களை உதறபப்போறாராம்! அநேக மந்திரி தந்திரிகள் குலைநடுக்கத்தில் என்று பேசிக்கிராங்க. நடுவண் அரசில் வேளான்மை அமைச்சருக்கு படா கிலி. வாஸ்துவை நம்பி ஆபீஸ்லெ பெரிய மீன் தொட்டி வச்சு, அலங்காரம் பண்ணி, குட்டி மீன்களை எதிர்நீச்சுக்குப் பழக்கி, வாஸ்து புருஷா! காப்பாத்து என்கிறாராம். அவரென்னத்தைக் கண்டார்னேன். ஓமந்தூரார் ஆசுபத்திரி இருக்குமிடத்தில் சட்டசபை கட்டிய அக்கால முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் கூட மீன்வேடிக்கை பாத்தாங்க, அங்க. வேல போயுடிச்சே!
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.ornafish.biz/images/homePic.jpg
Source:இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

___________
தம்! தமா! தம்!- 3

இன்னம்பூரான்
06 02 2016

ஒத்தன் குப்பற விழுந்தானாம். மீசை இல்லாததால், மண் ஒட்டல்லைன்னு சொல்ல முடியல்லெ. ஆனா, வாசாலகத்திலே மன்னன். யோவ்! நானா விளுந்தேன்? அது கரடி வித்தை அய்யாமார்களே! அம்மாமார்களே! பசங்களே! என்று மாய்மாலம் பண்ணானாம். அந்த மாதிரியில்லெ இருக்கு, அகில இந்திய காங்கிரஸ்ஸின் உண்மை ஊழியன் சஞ்சய் நிருபம் அவர்களின் கோக்குமாக்கு! காங்கிரஸ் தர்ஷன் என்றதொரு தப்பறிக்கைப் பத்திரிக்கை. அதுலெ சஞ்சய் ‘நேரு தான் காஷ்மீர் கஷ்டத்துக்கும், திபெட் டபெக்குக்கும், சைனா பிரச்னைக்கும் வித்திட்டவர் என்று வீரவசனம் எளுதினாராம். சனி பிடித்து அவரை ஆட்டியிருக்கிறது. சோனியாவின் தந்தையை பாசிஸ்ட் ஜிப்பாய் (இது இடாலியன்; தமிழில் சிப்பாய்.) என்று வசை பாடினாராம். அது பாயிண்ட் இல்லை. இந்திய அரசியலில் நமக்கு பிடிக்காதவர்களை பாசிஸ்ட் என்று திட்டுவது பண்பு.
விளக்கம் கேட்டார்கள். தார்மீகம் பொங்க, ‘ தப்புத்தான்; மாப்பு ப்ளீஸ்’ என்றாராம். ஆதர்ஷ் கேஸ்லெ சாவனை காப்பாத்தின மாதிரி நிருபத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்கிற மாதிரி, விட்டுப்பிடித்தா, அவர் ஏன் இதெல்லாம் கரடி வித்தை என்று சொல்லமாட்டார். வாழ்க சால்ஜாப்புக்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி:https://s-media-cache-ak0.pinimg.com/136x136/ac/ec/28/acec2873306499e9f4d3271539b84bef.jpg

____________________________________
தம்! தமா! தம்!- 4
இன்னம்பூரான்
07 02 2016

பண்டாவுக்குக் கொண்டாட்டம். மனுஷாளுக்குத் திண்டாட்டம். டோக்யோவிலிருந்து ஒரு ஒஸாகா செய்தித்துளி. அச்சம், வெட்கம், மடமை, பயிர்ப்பு மிகுந்து காணப்படும் பெண்ணினம், மனிதர்கள் அல்ல; ஐ மீன் மனுஷிகள். கலி முத்திடுத்தா. தடியெடுத்தவள் எல்லாம் தண்டல்காரி என்ற வகையில் கொலை கூட நடக்கிறதாம். நல்லதே நடக்கும். அச்சம் தவிர்த்த பாரச்சூட் ஜம்பிகளும், வெட்கம் மறைக்காத நடிகைகளும், மடமையை கொளுத்திய பெண்ணினமும், பயிர்ப்பை கண்டு கொள்ளமுடியாதபடி பெண்கள் பயணிக்க வேண்டிய நிர்பந்தமும், மனித இனத்துக்கு சொந்தம். பண்டா பெண்குலம், பார்க்க வருபவர்களை அச்சத்துடன் மிரண்டு பார்க்கிறது. வெட்கம் பண்டா ஆண்குலத்துக்கும் உண்டாம். மடமை இல்லாவிடினும், வாரிசுகள் உற்பத்தி செய்ய தயங்குவது மடமை தானே! டோக்யோவில், பெண்ணரசி பண்டாக்கள் திலோத்தமை, ரம்பை, ஊர்வசி போல், சற்றே கவர்ச்சி காட்ட, அந்த மிருக கண்காட்சியாளர் பண்டா அந்தபுரம் அமைத்து விட்டு, காத்துக்கொண்டு இருக்கிறார்களாம். ஏன் தெரியுமா? ஒரு வருடத்தில் 363 நாட்கள் கருத்தத்தரிக்க லாயக்கில்லை, பண்டாக்களுக்கு. எல்லா ஆக்கபூர்வமும், இரண்டு நாட்களில் நிறைவேற வேண்டும். மனுசனை நினச்சா போச்சு. லீப் வருடத்தில் 366 நாட்களுக்கும் லீப் தான்!

ஒரு மாமா சொன்னார். தாத்தாப்பாட்டிக்கு, அந்தக்காலத்தில் சுகஜீவனம். ஏழு, எட்டு பாப்பாக்கள். இரண்டு தலைமுறைக்குள்  எட்டு பதினாறாகி, அதுவும் 256 ஆகி, அடுத்தாப்ல 516 ஆகி!! சிவ! சிவ!

ஜூட்!
-#-
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

------------------------------------------------------------
தம்! தமா! தம்!- 5


இன்னம்பூரான்

08 02 2016
கீர்த்தனாரம்பக்காலத்திலே ரிஷிபத்தினியும், ரிஷிகுமாரனும் யாகசாலையின் ஈசானமூலையில் தவமிருந்தவாறே, ‘கேள்விக்கென்ன பதில்?’ என்ற சூத்திரம் படைத்து, பதிலுக்கேற்ப கேள்விகள் அமைத்துக்கொண்டதாக, அம்புலுப்பாட்டி, நேர பாத்தமாதிரி கதை அளப்பாள். தற்காலம் காந்தி ஃபேமிலி ( அசல் காந்தி ஃபேமிலி வேற.) அதே சூத்திரத்தை வைத்து சொல்ல வருவது யாதெனில்:
  1. இந்த நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் காந்தி ஃபேமிலி இன்னும் துட்டு பார்க்கலையே. எஃப்.ஏ.க்யூ நோக்கவும்.
  2. பழையன கழித்து புதியன படைத்து லாகவமாக பாயை பிறண்டாமல், சுருட்டியபோது, புது கம்பேனி வீடு வாங்கல்/விற்றல் பண்ணவில்லையே.
  3. சட்டப்படி அரசியல் கட்சிக்கள் கடன் கொடுக்கலாமே.தேர்தல் கமிஷனும் 2012 அதானே சொன்னாங்க. இது கடன் இல்லையே, வாராக்கடனாச்சோ? என்று துளைத்து எடுக்காதே, மகனே!
  4. மாதிரிக்கு ஒரு வினா: பாடபேதத்துடன்:
நீங்கள் எல்லாம் பெரிய மனுஷா. வங்கியில் கடன் வாங்கி, காங்கிரஸ்ஸுக்குக் கொடுத்து, நன்றிக்கடன் மட்டும் வச்சுக்கிறது தானே?
என்ன கேள்வி இது? கம்பெனி பூண்டி. எந்த வங்கி இளிச்சவாயனாக கடன் கொடுக்கும். நாங்கள் என்ன மீன்கொத்தி தேறல் கம்பெனியா? அசத்து! இன்னா கேள்விக்கேக்கிறாய் நீ?
---
முழு  எஃப்.ஏ.க்யூ:  காங்கிரஸ் இணைய தளத்தில். நம்மடவர்கள் தானே. வினவ மாட்டர்கள் என்ற தகரியம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn2.business2community.com/wp-content/uploads/2012/10/tumblr_mcao3ufGD31r7ub2p.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com