Monday, October 12, 2015

நோபெல் விருது: 2015: 6

நோபெல் விருது: 2015: 6


இன்னம்பூரான்
அக்டோபர் 12 , 2015

பொருளியலின் பொருள் காண்பதும் கடினம். பொருள் ஈட்டுவது அதை விட கடினம். அதனால் தான் பொருளாதாரம் என்ற சொல்லை நான் ஏற்புடையதாகக் கருதுவதில்லை  வறுமையை பற்றியும், சமுதாயத்தில் செல்வம் தாங்கமுடியாமல் சில இடங்களில் தேங்குவதனால், பற்பல இடங்களில் வறுமையின் கொடுமை இருப்பதையும் நன்கு அலசிய பேராசிரியர் Angus Deatonக்கு நோபெல் விருது அளித்த நோபெல் கமிட்டியின் பரிந்துரையின் பின்னணி வினாக்கள்:
  1. அவரவரது செலவை நுகர்வோர்கள் எப்படி இந்த, இந்த உருப்படிகள் என்று பிரித்து வாங்குகிறார்கள்? 
இதற்கு சரியான விடை கிடைத்தால், செலவினங்களை வகை செய்து ஆரூடம் கூறலாம்; வரி, மான்யம் போன்ற கோட்பாடுகளை நிர்ணயம் செய்யலாம். இந்த விடை தேடுவதில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட Angus Deaton 1980லிலேயே சுளுவான ஒரு மாடலை படைத்தார். அது ஆய்விலும், கொள்கை வகுப்பதில் உதவியது.
  1. சமுதாயத்தின் வரவு, செலவு, சேமிப்பு எவ்வளவு?
Kennath Kurikara வும் J.R. Hicks அறுபது வருடங்களுக்கு முன் எழுதிய நாட்டின் செல்வகுவிப்பு, வாணிக சுழல்கள் போன்ற நிகழ்வுகளை அலச வரவை பற்றியும், நுகர்வோரின் செலவு பற்றியும் அறிய வேண்டிருக்கிறது. 1990லியே Angus Deaton அவர்கள் அக்காலத்து நுகர்வு பற்றிய கருத்துகள் செல்லுபடி ஆவதில்லை என்று நிரூபித்தார். தனிமனிதர்களின் செயல்பாடுகள் (பருப்பு விலையேறினால் வத்தல் குழம்பு!) மாறி இயங்குவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிடின் முடிபுகள் தவறாக அமைந்து விடும் என்றார். இதை தற்காலம் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
3. வறுமையையும், நல்வாழ்வு மான்யங்களையும் (welfare) அளவெடுப்பது எப்படி?
இல்லத்து பொருளியலை வைத்து நாட்டின் செல்வம் வளரும்/தேயும் விதத்தை கணிக்க முடியும் என்று அண்மையில் நிரூபித்த Angus Deaton அதற்கான வழிமுறைகளை வகுத்தார்; சிக்கல்களை அவிழ்த்தார்; அவருடைய வீட்டுக்கணக்குத் தான் அஸ்திவாரம் என்ற கோட்பாடு, செல்வநிலையை உயர்த்தும் வகைகளை சொல்கிறது.

இந்த பின்னணியில் Angus Deatonக்கு கிடைத்த விருது பொருத்தமானதே என்பது தான் பெரும்பாலோரின் கருத்து. தனிமனிதனின் விருப்பங்கள் எவ்வாறு கொள்கைகளை நிர்ணயம் செய்கிறது என்பதை விளக்கி, நுட்பம் சார்ந்த பொருளியல், நாட்டுக்குரிய ‘பெரிய கை’ பொருளியல், வளர்ச்சி பொருளியல் எல்லாவற்றிலும் அவர் மாற்றி அமைத்த கொள்கைகளுக்குத்தான் இந்த விருது (“By linking detailed individual choices and aggregate outcomes, his research has helped transform the fields of microeconomics, macroeconomics, and development economics.”) என்கிறது, நோபெல் கமிட்டி.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2012/02/09/article-2098651-11A47191000005DC-865_634x656.jpg

No comments:

Post a Comment