Friday, April 18, 2014

நோட்டாவுக்கு நோட்டா!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 11

நோட்டாவுக்கு நோட்டா!: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 11


இன்னம்பூரான்
18 04 2014

கேட்டுக்கேட்டு புளிச்சுப்போச்சு, ராணியம்மா!
ஓட்டுக்கேட்டு உயிரை வாங்காதே, யுவராசா!
நோட்டாவுக்குக்கூட நோட்டா போடுவோம்லெ!
ஆட்டம் கண்டு ஓடிடுவாய், பிரதிகூலா!

இதனால் சகலமான ஜீவராசிகளுக்கெல்லாம், சன்னமான குரலெழுப்பி, 
‘நிஜ்ஹோதா குக்கிராமத்து 736 ‘தாரு’ இன ஆதிவாசி மனுஷங்களாகிய நாங்கள் ( ஆமாங்க! நாங்களும் மனித ஜீவராசி தாங்க!) கோஷமெழுப்பி, முரசடித்து, கொம்பெடுத்து ஊதி, எங்கள் கலாச்சாரத்திலிருந்து அணுவளவும் பிசிறாமல், எங்கள் தலைவர் மூலம் சொல்வதை கேளாய்’ என்று விரதமிருந்தார்கள், வாக்குச்சாவடி முன்னால். தலைவர் சிவசரண், பொறுமை பூஷணமாக உரைத்ததை கேளும்:
‘அரசு அதிகாரிகளே! பிரதிகூலர்களின் கைத்தடிகளே! (மிகை நமது: சொல்லில்: கருத்தில் மிகை இல்லை.) எமது கிராமத்து அருகில் ஓடும் மோஹனா நதி தடம் மாறுகிறாள், அடிக்கடி, ‘பிரதிநிதிகளின்’ சொல்லைப்போல. கரை உடைந்து, நீர் பெருகி, நிலம் அழிந்து, அறுவடை கருவாடாகி தவிக்கிறோம். பல்லாண்டு, பல்லாண்டாக பாட்டுப்பாடி, ஆட்டம்போட்டு, ஓட்டுக்கேட்டு, கெஞ்சி விட்டு, பிறகு எமது நெஞ்சை உடைக்கிறார்கள். அதனால் நோட்டாவுக்கும் நோட்டா’ என்று சொல்லி ஹர்த்தால் செய்தனர். நடுப்பகல் வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆனால், 736 பேரும் வாக்குச்சாவடி முன்னால். சப் டிவிஷனல் மாஜிஸ்ட் ரேட் நைச்சியம் செய்து பார்த்தார். அரசு சொல்லும் சால்ஜாப்புக்களை அடுக்கினார். தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை சொல்லிப்பார்த்தார். ஊஹூம்! அவர்கள் அசையவில்லை. கடைசியில், அந்த மேட்டுக்குடி மக்கள் மோஹனதரிசனம் செய்து, ‘சூ’ ‘சூ’ கொட்டின பிறகு, மக்கள், தலைவர் சொல்லுக்குப் பணிந்து வாக்களிக்க வந்தன்ர். ஆனாலும், ‘இதெல்லாம். வேஸ்ட். வேலைக்கு ஆவாது’ என்று உமிழ்ந்து விட்டு, திரு.கரம் சிங் நடையை கட்டினார். இதுவல்லவோ ஜனநாயகம்; மக்களாட்சி; குடியரசு.
இதே மாதிரி, அவ்விடம் 40 கிராமங்களில் 80 ஆயிரம் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஐந்து நிமிடம் முன் கிடைத்த செய்தி.
சித்திரத்துக்கு நன்றி:www.allhawaiinews.com


No comments:

Post a Comment