Google+ Followers

Saturday, November 2, 2013

ஜனோபகாரம்:நவம்பர் 3:அன்றொரு நாள்
அன்றொரு நாள்: நவம்பர் 3 ஜனோபகாரம்

Innamburan Innamburan 3 November 2011 15:58


அன்றொரு நாள்: நவம்பர் 3
ஜனோபகாரம்
ராஜ்யபாரம் வகிப்போர் பொது ஜன அபிப்ராயத்தை மதித்து இயங்கவேண்டும் என்ற கோட்பாட்டை ராமராஜ்யமும் மதிக்கும்; ஜனநாயகமும் மதிக்கும். முகமூடி யாதாயினும், கொடுங்கோலாட்சி அதை உதைக்கும். முன்னதற்கு செய்தியும் வேண்டும்; செய்தி விமர்சனமும் நல்வரவு. பின்னதற்கு செய்தி ஒரு கருவி; விமர்சனம் பிரச்சாரத்துக்கு ஒரு உபகரணம்; மட்டுறுத்தல் ஒரு ஆயுதம். கூடன்பெர்க் என்ற ஜெர்மானியரின் அச்சு இயந்திரம் வந்த பிறகு தான், இதழ்களுக்கு நல்ல காலம் பிறந்தது. அச்சுத்திறன் கூட, கூட, இதழியலும் செழித்தது. தற்காலம் இணைய தளத்தில் அவை பீடுநடை போடுகின்றன. 
நவம்பர் 3, 1838 ம் தேதி ஜனித்தது, உலக அளவில் அதிக விற்பனையாகும் Times of India என்ற புகழ் வாய்ந்த இந்திய நாளிதழின் பூர்வாசிரமம் ஆன The Bombay Times and Journal of Commerce. உலகின் முதல் நாளிதழ் The Daily Courant 1702 ல் இங்கிலாந்தில் வந்தது. அதற்கும் முன்னால் அமெரிக்காவில் 1690 ல் வந்த Publick Occurrences both Foreighn and Domestick ஒரு நாள் தான் வாழ்ந்தது எனினும், ஒரு துணிச்சலான வழியில் வாசகர்களின் கருத்துக்களுக்கு அடி கோலியது. வாசகர்கள் தன் கருத்தை எழுதி, மற்றவர்களுக்கு அனுப்ப வழி. அப்போதே லைசன்ஸ் பிரச்னை. மூடு விழா. இந்தியாவில் ஒரு கல்கத்தா இதழாசிரியருக்கு நடந்தது போல, பிரிட்டீஷ் துரைத்தனத்தாரை கடுமையாகக் குறை கூறியதற்காக, 1735ல் ந்யூ யார்க்கில், பீட்டர் ஸெங்கர் கைது செய்யப்பட்டார். தான் எழுதியது உண்மை என்று நிரூபணம் செய்து, அவர் விடுதலை பெற்றார். அன்று தான் பேச்சுரிமை பெற்ற இதழிலக்கியம் ஈன்றெடுக்கப்பட்டது எனலாம். (தற்காலம் ‘காசுரிமை’ இதழிலக்கியம் கோவாவில் பேசப்படுகிறது!). The Bombay Times and Journal of Commerce பிறந்து 13 வருடங்களுக்கு பிறகே, 1851ல் இதழியலின் உச்சஸ்தானத்தில் இருக்கும் ந்யூ யார்க் டைம்ஸ் பிறந்தது. இனி, ஊர் சுற்ற வேண்டாம். மும்பைக்கு வருவோம். 
வாரம் இருமுறை என்று தொடங்கிய இந்த இதழ் 1850ல் நாளிதழாக மாறியது. 1861ல் தற்கால நாமம் பூண்டது. நிறுவனரும், முதல் ஆசிரியருமான ராபர்ட் நைட் 1857 வருட ‘சிப்பாய் கலகத்திற்கு’, பிரிட்டீஷ் ராணுவத்தை குறை கூறினார். அத்துடன் நிற்காமல், பிரிட்டீஷாரின் நிர்வாஹத்திறனின்மை, பேராசை, நாடு பிடிப்பு, வரிப்பளு, இந்திய மரபை மீறிய கல்விக்கொள்கை இவற்றையெல்லாம் சாடினார். அவர் இதழியல் உரிமை மறுக்கப்படுவது, அச்சுறுத்தல், அரசும், வணிகமும், மற்ற சக்திகளும் இதழியலை ஏறி மிதிப்பது ஆகியவற்றை எதிர்த்தார் என்று அந்த இதழின் இணைய தளம் கூறுகிறது. அது, தற்காலம் 70 லக்ஷம் மக்கள் அவ்விதழை படிப்பதாகவும், இணைய தளத்திலும் அது சக்கை போடு பாடுவதாக, சான்றுகள் அளிக்கிறது. தொலை & தொல்லைக்காட்சிகளிலும் இது பிச்சு உதறுவதை பார்க்கிறோம். இப்போதெல்லாம், ஒவ்வாரு இதழாயலயமும் லாயமாக (stable) கருதப்படுகின்றன.
இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியா லாயம்;
http://www.timesofindia.com (The Times of India)
http://www.economictimes.com (Economic Times)
http://www.syndication.indiatimes.com (Times Syndication Service)
http://www.educationtimes.com (Education Times – A comprehensive education portal)
http://www.timesascent.in (Times Ascent – A HR community portal)
http://www.timesjobs.com (Times Jobs.com – A job portal)
http://www.simplymarry.com (Simply Marry.com – A matrimonial portal)
http://www.magicbricks.com (Margi Bricks – A real estate portal)

கொஞ்சம் போர் அடிக்கிறது இல்லை. விஷயம் அப்படி. அதான், ஹால்ட் போட்டுட்டேனே.
இன்னம்பூரான்
03 11 0211

Times--I-B--V-8078-40_b.jpg

உசாத்துணை: