Google+ Followers

Friday, June 28, 2013

தட் தடா...அப்டேட்

அப்டேட் 2:(3)

அப்டேட் 1:(1) & (2)
இன்னம்பூரான்
30 6 2013

தட் தடா...

Innamburan S.Soundararajan Fri, Jun 28, 2013 at 7:33 PM


தட் தடா...
Inline image 1
(1)
‘என் பிராணநாதருக்கு,
கல்யாணம் ஆன பிறகு தலை தீபாவளிக்கு வந்தீர்கள். அப்றம் வரவேயில்லை. இரண்டு வருஷமாயிடுத்து. எல்லாரும் ஒரு மாதிரியா பேசறா. அப்பா குனிஞ்ச தலை நிமிரல்லே. அம்மா அழறா. என்னை தூத்தறா. சுப்புணி உங்கள் ஜாடை, அப்டியே. அப்பா எங்கேன்னு கேக்றான். எனக்கு பிராணனை விட்றுணும் போல இருக்கு.
தந்தி போல் பாவித்து, உடனே பதில் போடுங்கோ. வாங்கோ.
உங்கள் பாதாரவிந்தங்களில் விழுந்து சேவிக்கும்,
அடியாள்
Thaiyoo
தேதி: 15 ஜூலை 1923
(2)
கணக்குப்பிள்ளை கொல்லை (.) அரசு புறம்போக்கு மரம் வெட்டி (.) என்கொயர் ப்ளீஸ்.
[சப்-கலைக்டருக்கு ‘ப்ரோ போனோ பப்ளிக்கோ’ அனுப்பிய எக்ஸ்ப்ரெஸ் தந்தி.]
தேதி: 15 ஜூலை 1933
(3)
உடனே தந்தி மணியார்டரில் நூறு ரூபாய் அனுப்புங்கோ, அப்பா. ஏழு நாளா பட்னி.
தேதி: 15 ஜூலை 1943
(4) 
எஸ்.எஸ். எல்.சி. பாஸ் பண்ணிட்டே. பொண் பார்க்க வா. நோ சால்ஜாப்பு
அப்பா ரகுவுக்கு.
தேதி: 15 ஜூலை 1953
(5)
யூ ஹேவ் பீன் அல்லாட்டட் டு ஐ ஏ ஏ எஸ்.
தப்பு விலாசத்துக்குத் துரைத்தனத்தார் தந்தி. அதுவும் எட்டுமாசத்து சிசுவைப்போல, அவசரக்குடுக்கையாக.
[தேதி எதுக்கு சார்?]
(6)
‘திரு. வேலாயுதம்’ போலி காங்கிரஸ். டிஸ்மிஸ் ஹிம். 
387 கத்திரிக்காய் பேட்டை வாசிகள், பிரதமருக்கு/நகல்: முதல்வர்.
தேதி: 15 ஜூலை 1963
(7) யூ ஹேவ் பீன் ட்ரான்ஸ்ஃபெர்ர்ட் டு கடலூர். நோ ஜாயினிங் டைம்.
அரசாணை
தேதி: 15 ஜூலை 1973 
(8) எட்டி ஃபாய், சினிமா நடிகர் காலி.
ராய்ட்டர் தந்தி
தேதி: 15 ஜூலை 1983
(9)
இன்னாசி பத்து லக்ஷம் லஞ்சம் வாங்கினான்.
பன்னாடை ஜனாதிபதிக்குத் தந்தி: நகல்: தலைமை நீதிபதி, உச்ச நீதி மன்றம், ஆடிட்டர் ஜெனெரல்.
தேதி: 15 ஜூலை 1993
(10) மேட்டூர் அணை திறக்கவும். (.) திறக்காவிட்டால், தண்ணி இல்லாவிட்டால் கூட(.) நீர்த்தேக்கத்தில் குதித்து செத்துப்போவோம் (.)
15873 விவசாயிகள்
தேதி: 15 ஜூலை 2003
(11) பீ எம் ஜீ கடைசி தந்தி அனுப்பி விட்டார். இனிமேல் நோ சர்வீஸ்.
அன்பார்ந்த நேயர்களே,
இந்தியாவில் தந்தி அனுப்புவது ஜூலை 15லிருந்து நின்றுவிடும். எப்படியும் காலையில் எனக்கே நான் தந்தி அனுப்பி ஆவணப்படுத்துவேன். அதற்காக இந்தியா போகிறேன்.
மேற்படி தந்திகள் நிசம். முதல் ஐட்டெம் கடுதாசு.
யாராவது கேட்டால், பொழிப்புரை தரப்படும். 15 ஜூலை வரை கெடு..
Innamburan to Networking friends. 
Ask (.) More on wire (.) Not ask (.) Less on letters also.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

------------------------------------------------------------------------------

பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்டதோ இல்லையோ.. எழுத்திலேயே வாசிப்போர் உள்ளம் கலங்கி விடுகின்றது.

சுபா
Innamburan S.Soundararajan 
9:44 PM (21 hours ago)


to mintamilSubashinime, bcc: innamburan88
பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்டதோ இல்லையோ.. எழுத்திலேயே வாசிப்போர் உள்ளம் கலங்கி விடுகின்றது.

சுபா
*
நம்பினால் நம்புங்கோ. இல்லையெனில் வேண்டாம். ஒரு நிமிட கற்பனையில் எழுதியிருந்தாலும், மனம் குமைந்தது. ஏனெனில் பல நிஜமான  தையூக்கள் உள்ளுறை. மஹா கனம் பொருந்திய வீ.எஸ். ஶ்ரீனிவாச சாஸ்திரிகளின் இராமயண பிரவசனங்கள் புகழ் பெற்றவை. அவருடைய ஆங்கில உச்சரிப்பு இங்கிலாந்து பிரதமர் க்ளேட்ஸன் போல என்பார்கள். அவர் எழுதிய கதை ஒன்றில் தட்டானுடன் ஓடி போய்விடுகிறாள், தையூ. அங்கிருந்து பெயர் மட்டும் இரவல். பிராமண சமூகங்களில் விதவைக்குக் கிடைக்கும் மரியாதை கூட வாழாவெட்டி க்கு(புருஷனால் தள்ளிவைக்கப்பட்டவள்) கிடைக்காது. தையூ என்ற பெயரை இருக்கட்டும். என் சிறு வயதில் ஒரு வாழாவெட்டியை (30 வயது இருக்கலாம்.) எனக்குத் தெரியும். அவளுடைய குடிகார மண்ணாங்கட்டி புருஷனையும் தெரியும். அவன் திருமணத்துக்கு முன்னும், பின்னும்,மற்றொரு பெண்ணுடன் வேறு ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். சமுதாயம் அவனை ஒதுக்கி வைக்கவில்லை. தையூவை அவமதித்தினர். ஒதுக்கினர். அலர் பரப்பினர். அவள் அண்ணன் வீட்டில் அடைந்து கிடப்பாள். அங்கு வேறு ஏச்சு/பேச்சு. என் கையில் காலணா தான் இருந்தது. ஒரு கார்டு வாங்கிகொடுக்கக்கூடிய ஐவேஜு. அந்த கடிதத்தை ( அவள் எழுதியது எல்லாம் சொல்லமாட்டேன்.) போஸ்ட் கார்டில் பென்சிலால் எழுதி, நான் தபால் பெட்டியில் போட்டேன். என்னை வாசிக்கச்சொன்னாள். ஏன் தெரியுமா? ‘சுப்புணி உங்கள் ஜாடை’ என்பதால் அவனுக்கு கோபம் வருமா என்று ஒரு சிறுவனை கேட்கிறாள்! பிராணனை வாங்கிய பிராணநாதனுக்கு இப்பெண்ணின் அழும் குரல் கேட்கவில்லை.

ஆள் மாறாட்டம் செய்வதால், 1941 நிகழ்வை 1958க்குக் கொண்டு போகிறேன். இந்த தையூவின் கணவனும், இரண்டாவது மனைவியும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அவள் தான் முதலில் என்னிடம் குட்டை உடைத்தாள். எவ்வளவு சொல்லியும் இருவரும் நெருக்கத்தைத் தவிர்க்க வில்லை.  இது மூன்றாவது தையூ. அவள் கிராமத்துப்பெண். வெள்ளந்தி. ஏழை. அவன் மத்திய வர்க்கம்.  ஒரு நாள் அவனிடன் ‘ஊருக்கு போனாயே. தையூவுடன் உறவு கொண்டாயா? என்று கேட்டேன். அந்த கழுதை சொல்லுது,‘அவள் தான் வாழாவெட்டியாச்சே. நான் என்ன செய்தாலும் கேட்டுத்தானே ஆகவேண்டும்.’ அவளுடைய பிரார்த்தனைகளை உதறி தள்ளிய அவன், அவற்றை என்னிடம் சொன்னான்.  அவளும் அல்பாயுசில் மாண்டாள். இது என் மனதை பாதித்ததை தெரிந்துகொள்ளாமல், அதை மாற்றி  எழுதியிருக்கிறேன். நான் உபயோகப்படுத்த நினைத்தது, ‘தந்தி போல் பாவித்து’ மட்டும். இது அக்கால கடிதங்களில் வழக்கமான வசனம். ஆனால், தையூ வந்தது வியப்பு தான். இதற்கு மேல் எழுதுவது நியாயமில்லை. இது வரை எழுதியதும் தப்பு இல்லை.
இன்னம்பூரான்
29 06 2013
K R A Narasiah
2:20 AM (16 hours ago)


to mintamil
Original in thinking. Truthful in depicting. As it happened. Yes In my life I have heard about such real life situations!
Narasiah


2013/6/30 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Innamburan S.Soundararajan 
12:36 PM (6 hours ago)


to mintamil
நன்றி, சுபாஷிணி, திரு.நரசய்யா.


(2)

கணக்குப்பிள்ளை கொல்லை (.) அரசு புறம்போக்கு மரம் வெட்டி (.) என்கொயர் ப்ளீஸ்.

[சப்-கலைக்டருக்கு ‘ப்ரோ போனோ பப்ளிக்கோ’ அனுப்பிய எக்ஸ்ப்ரெஸ் தந்தி.]

தேதி: 15 ஜூலை 1933
*
இது நிஜம். கும்பகோணம் சப் கலைக்டர் பிற்காலம் யூபீஎஸ்சி தலைவராக இருந்த வி.எஸ். ஹெஜ்மாடி. கன்னடத்துக்காரர். என் தாத்தா (ஒரிஜினல் இன்னம்பூரான்) பட்டாமணியம். வச்சது சட்டம். தொழில் முறையில் அவருக்கும் கணக்குப்பிள்ளைக்கும் கீரி-சர்ப்பம் உறவு. 'தட் தடா' வென்று மோட்டார் சைகிளில் வந்து இறங்கினார். ஹெஜ்மாடி. மரத்தை காணும்! தந்தி குமாஸ்தா கணக்குப்பிள்ளையிடம் சொல்லி விட, அவர் சமாதான புறாவுடன் தாத்தாவை சரிக்கட்டினார். ஏமாந்தது சப்.கலைக்டர். விசாரணையில் தந்தி அடித்தது என் தாத்தா என்று தெரிந்த போது, ஹெஜ்மாடி சிரித்துக்கொண்டாராம்.
இன்னம்பூரான்
30 06 2013

(3)
உடனே தந்தி மணியார்டரில் நூறு ரூபாய் அனுப்புங்கோ, அப்பா. ஏழு நாளா பட்னி.
தேதி: 15 ஜூலை 1943
***
இது நான் என் அப்பாவுக்கு அனுப்ப நினைத்து அனுப்பாத தந்தி. ஆம். அவரும் ஒரு வேளை பட்டினி. நானும் ஒருவேளை பட்டினி. 'படிப்பு தான் முக்கியம்' குடும்பம். வேறு யாரோ சொல்லி, அப்பா ஒரு முறை ரூபாய் 100/ இன்ஷ்யூர்ட் கவரில் அனுப்பினார். அந்த கவரை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறேன். அக்காலம் தந்தி மூலம் பணம் அனுப்பலாம்.

இன்னம்பூரான்
01 07 2013