Google+ Followers

Monday, November 18, 2013

ஆட்டிப்படைத்திடவே: அன்றொரு நாள்: நவம்பர் 19அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!
10 messages

Innamburan Innamburan 19 November 2011 18:10

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி? 

நவம்பர் 19, 1917 அன்று பிறந்த  ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம்.  அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல்.  இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.

இந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.

“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”

நான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர். 

இந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில்  50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா? நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’  இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த  கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.
இந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்: 
~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.
~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.
~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.

உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து இருக்கப்போகிறது? இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’

இனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும். 
அதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.
இன்னம்பூரான்
19 11 2011  
scan0017-300x174.jpg
உசாத்துணை:

18 NOV, 2011, 12.10PM IST, IANS 


Seethaalakshmi Subramanian 19 November 2011 19:47


அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan 19 November 2011 19:54
To: mintamil@googlegroups.com
நீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா! எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய்! ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.
அண்ணா இன்னம்பூரான்

2011/11/19 Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com>
அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!Seethaalakshmi Subramanian 19 November 2011 20:12


அண்ணா, நான் சிறுமியாக இருக்கும் பொழுதே என் அப்பா என் பொண்ணை இந்திராகாந்தி மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்பொழுது அந்த அம்மாள் எந்தப்பதவியிலும் இல்லை. நேருஜிக்கு ஒரே பெண். அப்பாவிடம் கேட்டதற்கு துணிச்சலான பொண்ணா இருன்னு சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான பெண். அவர்கள் செய்த செய்ல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவில்லை. அவரது துணிச்சல் பிடிக்கும். அதுவும் அரசியலில், ஆண்கள் உலகில் துணிச்சலுடன் இருந்தே ஆக வேண்டும். அவர்களை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க விரும்பினேன். போட்டொ எடுத்துக் கொள்ள விரும்பினேன். இரண்டும் நடந்தது அண்ணா
சீதா

[Quoted text hidden]

Innamburan Innamburan 19 November 2011 20:48
To: mintamil@googlegroups.com

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, சீதா. தற்கால வரலாறு எழுதும்போது, தெரிந்ததை எல்லாம் எழுதிவிடமுடியாது. எல்லாரும் மனிதர்கள் தானே. சந்ததிகள் மனம் நோகலாகாது. இந்திரா காந்தியின் அசாத்திய துணிச்சல் மோதிலால் நேருவுக்கு இருந்தது. பிறகு யாருக்கும் இல்லை. நான் குறிப்பிட்ட முப்பெருந்தேவிகளில் மார்கெரட் தாட்சரின் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவருடைய தீர்மானத்தின் பிற்கால நல்ல பயனை புறக்கணித்தால், வரலாறு எழுதும் தகுதியை இழந்து விடுவேன். அம்மாதிரி தான் இந்திரா காந்தியின் தீர்மானங்களில் சில. என்றுமே, ஆளை பொறுக்குவதிலும், கழிப்பதிலும் அவருடைய அபார திறனை நான் வியக்காத நாள் கிடையாது.

அது சரி. உன்னை சேர்த்து எனக்கு ஐந்து தங்கைகள். கடைக்குட்டிக்கூட என்னை பன்மையில் விளிப்பதில்லை. நீயும் அந்த பழக்கத்தை நிறுத்தி விடு.
அண்ணா இன்னம்பூரான்


Seethaalakshmi Subramanian 19 November 2011 22:01


அண்ணா, ஒரு விஷயம். ஒரு பெரிய அரசியல் பிரமுகரிடம் நான் "நீங்கள் அரசியலுக்கு அவ்வளவு சரியில்லை" என்றேன்.அவர் என் மீது கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் உடனே ஒரு கேள்வி கேட்டார். "நீ யாரை பொருத்தம் என்று நினைக்கின்றாய்? உடனே தயங்காமல் இந்திராகாந்தி என்றேன். நேருஜி நல்லவர். ஆனால் மகள் வல்லவர். 
அரசியலில் தலைமையேற்று நடப்பது சாதாரணமல்ல.
உங்களுக்குத் தெரியும். நாம் வேலை செய்வது எளிது. ஆனால் பலரிடம் வேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  management is not easy. he should have special skill.
போர்க்களத்தில் கொலைகள் எப்படி நியயப்படுத்தப்படுகின்றதோ அரசியலிலும் சில போக்குகள் அவசியமாகின்றது. சாணக்கிய தந்திரம் என்கின்றோம். எதற்கும் அஞ்சாத ராட்சசி அந்த அம்மாள்
ஆனால் அவர்களும் சாதாரண மனுஷி என்பதை ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலக்பத் தீர்ப்பு வந்தது. எமெர்ஜென்சியும் வந்தது. அதன் பின்னர் அவர்கள் காஞ்சிக்கு மகாப் பெரியவரைப் பார்க்க வந்தார்கள். தேனப்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பெரியவர் ஒன்றும் பேசவில்லை. நேரகப் பார்க்கக் கூட இல்லை. அங்கே அமைதியாக கிழே அமர்ந்திருந்த அம்மையாரின் கண்கணில் கண்ணீர் வழிந்தோடியது. அவர்கள் ஆத்மாவின்  கண்ணீர்
இதுவரை இதனை நான் யாரிடமும் சொன்னதில்லை. சிலர்தான் அக்காட்சியைக் காணமுடிந்தது
கண்ணன் பார்தப்போரில் செய்யாத சூழ்ச்சியா? அவனால் சிரிக்க முடியும். ஆக்கலும் அழித்தலும் அவனுக்கு ஒன்றே. நாம் மனிதர்கள். துணிச்சல் எத்தனை இருந்தாலும் ஏதாவது தவறுகள் செதிருந்தால் (மனிதன் செய்யாதிருப்பானா) என்றாவது ஒருநாள் 
கண்ணீர் சிந்தத்தான் வேண்டும். . முதுமை கால்த்தில் வேலைகள் எதுவும் செய்யாதிருந்தால் நம் பழங்கணக்கைப் பார்க்கத்தோன்றும். அப்பொழுது சிரிப்பதும் அழுவதும் நேரிடும்
இந்திராகாந்தி பெயரே என்னை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. பலரும் புத்தகத்திலும் படங்களிலும் பார்க்க முடிந்த பல பெரியவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்பு நம்மிருவ்ருக்கும் அதிகம் உண்டு. நாம் பேசியிருக்கின்றோம்

Geetha Sambasivam 19 November 2011 23:16


அரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு.
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

இன்னம்பூரான்
19 11 2011  

Geetha Sambasivam 19 November 2011 23:18


Subashini Tremmel 20 November 2011 09:01இப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான். 

இந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது. 


சுபா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா


Innamburan Innamburan 20 November 2011 10:16
~ நன்றி, ஸுபாஷிணி, அரிய படங்களையும், ஒரு நேர்காணலையும் இணைத்திருக்கிறேன். நேரம்கிருக்கும் போது பார்க்கவம்.
இன்னம்பூரான் 

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!