Saturday, October 26, 2013

கொச்செரில் ராமன் நாராயணன்:அன்றொரு நாள்: அக்டோபர் 27


மறுபடியும் ஒரு அப்டேட்:
சில பகுதிகள் விட்டுப்ப்போயின. முக்கியமாக திரு.வையவனுக்கு நன்றி நவில்வது நழுவிவிடக்கூடாது.அதான்.
இன்னம்பூரான்
27 10 2013

அப்டேட்: இன்றைய அரசியல் குளறுபடிகள் கண்டு கே.ஆர்.என் இல்லையே என்று வருந்துகிறேன்.
இன்னம்பூரான்
27 10 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 27 கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)

Innamburan Innamburan Thu, Oct 27, 2011 at 2:24 PM



அன்றொரு நாள்: அக்டோபர் 27
கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)

இந்தியாவின் பத்தாவது ஜனாதிபதி கொச்செரில் ராமன் நாராயணன் (கே.ஆர்.என்.) அவர்கள் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்பதை நான் பெரிது படுத்தவில்லை. அவருடைய முன்னேற்றம் தகுதி அளித்த வரன். மருத்துவரான தந்தை பரமஏழை. கே.ஆர்.என். படித்தது எல்லாம் கிருத்துவ பள்ளிகள். திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விருது, முதலிடம். நான் மானசீகமாக அமர்த்திக்கொண்ட குருநாதர்களிடம் ~( ஹெரால்ட் லாஸ்கி (வாத்தியரம்மாவை 16 வயதில் மணந்த முந்திரிக்கொட்டை!), ஸர் லையனல் ராப்பின்ஸ் (of the ‘penumbra of approbation’ fame), ஸர் ஃப்ரெட்ரிக் வான் ஹேயக் (of ‘The Road to Serfdom’ fame), அவருடைய பரம வைரியான ஸர் கார்ல் பாப்பர் (of ‘The Road to Hayekdom’ fame) )நேரடியாக பாடம் படித்து, பொருளியல் பட்டம் பெற்றார். சிபாரிசின் மீது 1949ல் இந்தியாவின் வெளியுறவு துறையில் (ஐ.ஃஎப்.எஸ்.) நியமனம். அது என்ன சிபாரிசு? ஆனானப்பட்ட லாஸ்கி, ஆனானப்பட்ட நேருவுக்கு கொடுத்த சிபாரிசு, இந்தியாவின் நலனை நாடி. பல நாடுகளில் தூதராகப் பணி. பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், வெளியுறவுத்துறை தலைவராகவும் பணி. எங்கும் நல்ல பெயர். ஓய்வு பெற்றபின், இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதால், அரசியல் பிரவேசம், ஒட்டப்பாளையம் 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் எம்.பி. ஆக இவரை அனுப்பியது. 1985லிருந்து அமைச்சரவையிலும், எதிர்க்கட்சியிலும். 1992ல் உப ஜனாதிபதி. 1997ல் ஜனாதிபதி. இவருக்கு இரண்டாவது தவணை கிடைக்கவில்லை. நேர்மையான மனிதரல்லவா! நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் உள்குத்து கசமுசாவில் கசங்கியது, ஜனாதிபதி பதவி. பேஷ்! ஓய்வுக்கு பின் உலகிலளாவிய சுதந்திர இயக்கங்களுக்கு ஆதரவு தேடினார். 
இவர் ஒரு நவீன ஜனாதிபதி. முதல் தடவையாக, மரபை (அது என்ன மரபோ!) மீறி  பொது தேர்தலில் வாக்கு அளித்த ஜனாதிபதி. பாப்ரி மஸ்ஜித் இடிப்பட்டபோதும், கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரி கொளுத்தப்பட்டபோதும், தன் கண்டனத்தை, பட்டவர்த்தனமாக உரைத்தார் (ஜனாதிபதி வாயை திறக்கலாமோ?). இருமுறை பிரதமர் நியமனம், நாடாளுமன்ற கலைப்பு ஆகிய பளுவான தீர்மானங்கள் எடுக்கும் போது, பழைய பத்தாம்பசலி முறைகளை தவிர்த்து, உகந்த ஆலோசனைகளை பெற்று, சொந்தமாக சிந்தித்து, ஆணைகள் பிறப்பித்தார். 1999ல் பொது தேர்தல் நடந்து, வாஜ்பேயி அவர்கள் உகந்த முறையில் பிரதமரானதின் பின்னணி ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு. இருமுறை மத்திய அரசை மாநிலங்களில் ஜனாதிபதி அரசை ஊன்றுவதை மீள்பார்வைக்கு அனுப்பி ஒரு ஜனநாயகக் கோட்பாட்டை வகுத்தார். அரசு வெட்ட வெளிச்சத்தில் நடமாடவேண்டும் என்று இப்போது பேசி தீர்க்கிறோம். ஹஸாரேயும், சைபலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கே.ஆர்.என். என்றைக்கோ, ஜனாதிபதியின் ஆணைகளின் பின்னணியை விளக்கி பிரகடனங்கள் பிரசுரிப்பதை துவக்கினார். அப்றம் அது சப்பரமாச்சுது!
‘மாதம் மும்மாரி பெய்ததா?’ என்ற விட்டேற்றி’ ஜன ‘அதிபதவி’ மரபிலிருந்து விலகி, நாட்டை பற்றிய தன் கவலையை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நிகரற்றவர் கே.ஆர்.என். இந்தியாவின் குடியரசு தினத்தின் பொன் விழாவில் (26 01 2000) அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்...
  • ‘இந்தியர்கள் திறன் மிகுந்தவர்கள்; இந்தியா தான் திறனிழந்தது’ என்ற எள்ளலின் யதார்த்தம் சுடுகிறதே;
  • நம் தேசீய கீதத்தின் ‘ஜன கண’ என்ற மக்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ‘அதிநாயக’ ஆளுமையை மந்திரோபதேசம் என்ற பொருள்பட ஆராதிக்கும் போது, ஒரு அக்னிபரிக்ஷையில் இறங்குவோம்;
  • சேறிலும், சகதியிலும் அபாரா தொழில் வளர்ச்சி; சேரிகளிலிருந்து விண்கலங்கள் புறப்பாடு!
  • நாளிதழ்களில் அன்றாடம் வரும் தீநிமித்தங்களை படிக்க கல்நெஞ்சம் வேண்டுமே;
  • சாது மிரண்டால், காடு கொள்ளாது, நம் நாட்டில்;
வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிற அந்த உரையில் அவர் எழுப்பிய வினாக்கள்:
  • ஏழைபாழைகளுக்கு கல்வி அளிப்பதை சுயநலம் தடுக்கிறதா?
  • மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்னார்வம் கொண்டு ஏன் கல்வி அளிப்பதில்லை?
  • நம்மூர் கார்களும், பஸ்களும் ஏன் இப்படி ரோட்டில் தறி கெட்டு ஓடுகின்றன? 
  • குப்பையை ஏன் தெருவில் வீசுகிறார்கள்?
  • அரசு ஊழியர்கள் மக்களை ஏன் உதறுகிறார்கள்?
  • 200px-YoungKRN.jpgமக்கள் பொதுவுடமைகளை நாசம் செய்கிறார்களே, ஏன்?
  • ஏன் சிறார்களை துன்புறுத்துகிறோம்?
  • சுற்றுப்புறத்தை ஏன் பாழ்படுத்துகிறோம்?
  • பெண்ணியம் பேச்சளவில் தானா?
  • புத்தரும், மஹாவீரரும், குரு நானக்கும், கபீர் தாசரும், மஹாத்மா காந்தியும் வாழ்ந்த நன்னாடா, இது? 
  • ‘காந்தி மஹானின் வைஷ்ணவனுக்கு மாற்றான் வலி தெரியுமே. அவன் எங்கே? 
உரையின் ஈற்றடியில், ‘மற்றவர்கள் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை மற்றவர்களுக்கு செய்யாதே’ என்ற விவிலியத்தின் பொன்மொழிக்கு அடித்தளமாக, வியாசரின் "Aatmanaha pratikulaani pareshaam na samaacharet."...(தனக்கு முரணாக அமைவதை கொண்டு மற்றவர்களுக்கு அரண் அமைக்க இயலாது.) மூலமந்திரமாக உச்சரிக்கிறார்,ேக்.ஆர்.என். 
அவருடைய ஆதங்கம் 2000ல் உரைக்கப்பட்டது. இன்று?
இன்னம்பூரான்
27 10 2011
http://upload.wikimedia.org/wikipedia/en/0/0d/Kocheril_Raman_Narayanan.jpg

Geetha Sambasivam Thu, Oct 27, 2011 at 7:15 PM


ம்ம்ம்ம் பெருமூச்சு விட்டுக்கறேன். :(
2011/10/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>


அன்றொரு நாள்: அக்டோபர் 27
rajam 



வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிற அந்த உரையில் அவர் எழுப்பிய வினாக்கள்:
... ... ...

உரையின் ஈற்றடியில், ‘மற்றவர்கள் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை மற்றவர்களுக்கு செய்யாதே’ என்ற விவிலியத்தின் பொன்மொழிக்கு அடித்தளமாக, வியாசரின் "Aatmanaha pratikulaani pareshaam na samaacharet."...(தனக்கு முரணாக அமைவதை கொண்டு மற்றவர்களுக்கு அரண் அமைக்க இயலாது.) மூலமந்திரமாக உச்சரிக்கிறார்,ேக்.ஆர்.என். 
உரை ஆற்றியதோடு ... "ஜனாதிபதி" என்ற ஆற்றல்/அதிகாரம்/உரிமை இருந்தபோதே இந்த மாதிரிச் சிக்கல்களுக்கு ஏதாவது ஒரு தீர்வும் காண முயன்றிருக்கலாமே? ஏதாவது செய்தாரா? அதுபற்றிக் குறிப்பு இருக்கிறதா?


On Oct 27, 2011, at 6:22 AM, Innamburan Innamburan wrote:

அன்றொரு நாள்அக்டோபர் 27
கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)
இந்தியாவின் பத்தாவது ஜனாதிபதி கொச்செரில் ராமன் நாராயணன் (கே.ஆர்.என்.) அவர்கள் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்பதை நான் பெரிது படுத்தவில்லை. 27 10 2011
N. Ganesan 



On Oct 27, 6:22 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
அன்றொரு நாள்அக்டோபர் 27
>
> கொச்செரில் ராமன் நாராயணன் (27 October 1920 – 9 November 2005)
>
> இந்தியாவின் பத்தாவது ஜனாதிபதி கொச்செரில் ராமன் நாராயணன் (கே.ஆர்.என்.)
> அவர்கள் தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்பதை நான் பெரிது படுத்தவில்லை.
> அவருடைய முன்னேற்றம் தகுதி அளித்த வரன். மருத்துவரான தந்தை பரமஏழை.
> கே.ஆர்.என். படித்தது எல்லாம் கிருத்துவ பள்ளிகள். திருவிதாங்கூர்
> பல்கலைக்கழகத்தில் முதுநிலை விருது, முதலிடம். நான் மானசீகமாக அமர்த்திக்கொண்ட
> குருநாதர்களிடம் ~( ஹெரால்ட் லாஸ்கி (வாத்தியரம்மாவை 16 வயதில் மணந்த
> முந்திரிக்கொட்டை!), ஸர் லையனல் ராப்பின்ஸ் (of the ‘penumbra of approbation’
> fame), ஸர் ஃப்ரெட்ரிக் வான் ஹேயக் (of ‘The Road to Serfdom’ fame), அவருடைய
> பரம வைரியான ஸர் கார்ல் பாப்பர் (of ‘The Road to Hayekdom’ fame) )நேரடியாக
> பாடம் படித்து, பொருளியல் பட்டம் பெற்றார். சிபாரிசின் மீது 1949ல்
> இந்தியாவின் வெளியுறவு துறையில் (ஐ.ஃஎப்.எஸ்.) நியமனம். அது என்ன சிபாரிசு?
> ஆனானப்பட்ட லாஸ்கி, ஆனானப்பட்ட நேருவுக்கு கொடுத்த சிபாரிசு, இந்தியாவின் நலனை
> நாடி. பல நாடுகளில் தூதராகப் பணி. பேராசிரியராகவும், துணை வேந்தராகவும்,
> வெளியுறவுத்துறை தலைவராகவும் பணி. எங்கும் நல்ல பெயர். ஓய்வு பெற்றபின்,
> இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதால், அரசியல் பிரவேசம், ஒட்டப்பாளையம் 1984,
> 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் எம்.பி. ஆக இவரை அனுப்பியது. 1985லிருந்து
ஒட்டப்பாளையம் என்று கேரளாவில் தொகுதி இல்லை.

ஒத்தப்பாலம். இலங்கைப்போரில் பெரும் பங்காற்றிய
எம். கே. நாராயணன் ஊரும் ஒத்தப்பாலம்.

ராமகிருஷ்ண மடத் துறவி தபச்யானந்தரின் ஊரும் அது.

நா. கணேசன்

> அமைச்சரவையிலும், எதிர்க்கட்சியிலும். 1992ல் உப ஜனாதிபதி. 1997ல் ஜனாதிபதி.
> இவருக்கு இரண்டாவது தவணை கிடைக்கவில்லை. நேர்மையான மனிதரல்லவா! நாட்டின்
> இரண்டு முக்கிய கட்சிகளின் உள்குத்து கசமுசாவில் கசங்கியது, ஜனாதிபதி பதவி.
> பேஷ்! ஓய்வுக்கு பின் உலகிலளாவிய சுதந்திர இயக்கங்களுக்கு ஆதரவு தேடினார்.
>
> இவர் ஒரு நவீன ஜனாதிபதி. முதல் தடவையாக, மரபை (அது என்ன மரபோ!) மீறி  பொது
> தேர்தலில் வாக்கு அளித்த ஜனாதிபதி. பாப்ரி மஸ்ஜித் இடிப்பட்டபோதும், கிரஹாம்
> ஸ்டைன்ஸ் என்ற பாதிரி கொளுத்தப்பட்டபோதும், தன் கண்டனத்தை, பட்டவர்த்தனமாக
> உரைத்தார் (ஜனாதிபதி வாயை திறக்கலாமோ?). இருமுறை பிரதமர் நியமனம், நாடாளுமன்ற
> கலைப்பு ஆகிய பளுவான தீர்மானங்கள் எடுக்கும் போது, பழைய பத்தாம்பசலி முறைகளை
> தவிர்த்து, உகந்த ஆலோசனைகளை பெற்று, சொந்தமாக சிந்தித்து, ஆணைகள்
> பிறப்பித்தார். 1999ல் பொது தேர்தல் நடந்து, வாஜ்பேயி அவர்கள் உகந்த முறையில்
> பிரதமரானதின் பின்னணி ஜனாதிபதியின் தீர்க்கமான முடிவு. இருமுறை மத்திய அரசை
> மாநிலங்களில் ஜனாதிபதி அரசை ஊன்றுவதை மீள்பார்வைக்கு அனுப்பி ஒரு ஜனநாயகக்
> கோட்பாட்டை வகுத்தார். அரசு வெட்ட வெளிச்சத்தில் நடமாடவேண்டும் என்று இப்போது
> பேசி தீர்க்கிறோம். ஹஸாரேயும், சைபலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
> கே.ஆர்.என். என்றைக்கோ, ஜனாதிபதியின் ஆணைகளின் பின்னணியை விளக்கி பிரகடனங்கள்
> பிரசுரிப்பதை துவக்கினார். அப்றம் அது சப்பரமாச்சுது!
>
> ‘மாதம் மும்மாரி பெய்ததா?’ என்ற விட்டேற்றி’ ஜன ‘அதிபதவி’ மரபிலிருந்து விலகி,
> நாட்டை பற்றிய தன் கவலையை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நிகரற்றவர்
> கே.ஆர்.என். இந்தியாவின் குடியரசு தினத்தின் பொன் விழாவில் (26 01 2000) அவர்
> ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்...
>
>    - ‘இந்தியர்கள் திறன் மிகுந்தவர்கள்; இந்தியா தான் திறனிழந்தது’ என்ற
>    எள்ளலின் யதார்த்தம் சுடுகிறதே;
>    - நம் தேசீய கீதத்தின் ‘ஜன கண’ என்ற மக்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தின்
>    ‘அதிநாயக’ ஆளுமையை மந்திரோபதேசம் என்ற பொருள்பட ஆராதிக்கும் போது, ஒரு
>    அக்னிபரிக்ஷையில் இறங்குவோம்;
>    - சேறிலும், சகதியிலும் அபாரா தொழில் வளர்ச்சி; சேரிகளிலிருந்து
>    விண்கலங்கள் புறப்பாடு!
>    - நாளிதழ்களில் அன்றாடம் வரும் தீநிமித்தங்களை படிக்க கல்நெஞ்சம் வேண்டுமே;
>    - சாது மிரண்டால், காடு கொள்ளாது, நம் நாட்டில்;
>
> வரலாற்றில் பெரிதும் பேசப்படுகிற அந்த உரையில் அவர் எழுப்பிய வினாக்கள்:
>
>    - ஏழைபாழைகளுக்கு கல்வி அளிப்பதை சுயநலம் தடுக்கிறதா?
>    - மாணவர்களும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்னார்வம் கொண்டு ஏன்
>    கல்வி அளிப்பதில்லை?
>    - நம்மூர் கார்களும், பஸ்களும் ஏன் இப்படி ரோட்டில் தறி கெட்டு ஓடுகின்றன?
>    - குப்பையை ஏன் தெருவில் வீசுகிறார்கள்?
>    - அரசு ஊழியர்கள் மக்களை ஏன் உதறுகிறார்கள்?
>    - மக்கள் பொதுவுடமைகளை நாசம் செய்கிறார்களே, ஏன்?
>    - ஏன் சிறார்களை துன்புறுத்துகிறோம்?
>    - சுற்றுப்புறத்தை ஏன் பாழ்படுத்துகிறோம்?
>    - பெண்ணியம் பேச்சளவில் தானா?
>    - புத்தரும், மஹாவீரரும், குரு நானக்கும், கபீர் தாசரும், மஹாத்மா
>    காந்தியும் வாழ்ந்த நன்னாடா, இது?
>    - ‘காந்தி மஹானின் வைஷ்ணவனுக்கு
> ...
>
> read more »
Innamburan Innamburan 
10/27/11
to mintamil
ஒத்தபாலம் என்று ஒத்துக்கிறேன், கணேசனார். அநேக தகவல்கள் ஆங்கிலத்தில். உச்சரிப்பெல்லாம் உஸ்ஸெரிஃப்ஃபு! என்ன பண்றது?

இந்திய அரசியல் சாஸனப்படி ஜனாதிபதி சொல்பதிகாரி, முனைவர் ராஜம். அதே சமயம் அந்த 'சாது' மிரண்டால், காடு புரளவேண்டும். ராஜாஜி கவர்னர்ஜெனரலாக இருந்தபோது, தீர்க்கமான காரியங்கள் செய்தார். அதில் ஒன்று: பிரதமரையும், உதவி பிரதமரையும் கட்டிப்போட்டார். மற்றபடி எல்லா ஜனாதிபதிகளுக்கும் வீக் பாயிண்ட்டுகள் இருந்தன. ஓரளவுக்கு டா. ராதாகிருஷ்ணன் பல விஷயங்களை திறன்பட கையாண்டார். மற்றவர்கள் எல்லாருக்கும் அரசியல்வாதி சாயம் இருந்தது. டா. சா.ஹு. பரவாயில்லை. பக்ருதீன் அஹ்மத், சைல் சிங் அவர்களெல்லாம், less said ,the better. ஆனால், கே.ஆர்.ஏன் ஒருவர் தான் சொல்பதிகாரத்திலும் ஜனநாயகம் கண்டார், நான் சான்றுகள் அளித்த அளவுக்கு. மற்றபடி பிரதமருக்கு அவ்வப்பொழுது நல்ல ஆலோசனைகள் வழங்கினார். அரசு சொன்னபடி ஆட்டோமாட்டிக் ஆட்டம் ஆடவில்லை, பிற்காலம் டாக்டர் அப்துல் கலாம் செய்த மாதிரி. உரையில் சொன்ன சிக்கல்களில் இவர் தன்னாலான தீர்வுகள் கண்டதோடு, இந்த அளவு வெளிப்படையாக வேறு ஒரு அதிபரும் பேசவில்லை. அதுவே நவீனம்.  இவர் காலத்து ஜனாதிபதி ஆவணங்கள் வெளி வர சில வருடங்கள் பாக்கி. அப்போது, எனக்கு தெரியவந்த சில விஷயங்களை முன் வைக்கலாம்.
இன்னம்பூரான்
2011/10/27 N. Ganesan <naa.ganesan@gmail.com>
செல்வன் 



பத்தி பத்தியா பதில் எழுதலாம்.எனினும் தேவ ரகசியத்தை சுருக்கி தருகிறேன்.

சோஷலிசமே இந்தியாவின் தடுமாற்றத்துக்கு காரணம்.

ஊதிபெருத்த அரசின் சைசை பாதியாக குறையுங்கள்.அதன்பின் இருக்கு புலிப்பாய்ச்சல்
vaiyavan mspm 



அன்புள்ள பெருந்தகை இன்னம்பூரான் அவர்களுக்கு வணக்கம். ஒரு நாள் கழிந்த எனினும் மகிழ்ச்சி குன்றாத தீபாவளி வாழ்த்துக்கள் . சக்கை போடு போட்டு வருகிறீர்கள் .மின்னுலகையே ஒரு கலக்கு கலக்கி வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் .நான்?
இதோ ஒரு சிறு அறிமுகம் தங்கள் அன்பான அனுமதியோடு 
ரீங்காரம் ஓய்வதே இல்லை
ஓயாத வாயாடிகள் அந்தத்
தேன் கூட்டில் குழுமியிருக்கும்
தேனீக்கள் ....
ஆற்றங்கரை கிணறு
குழாயடி பூங்கா கடற்கரைகளில் 
கூடிக் கூடிப் பேசும்
பெண்களின் குலாவலும்
சச்சரவும் வம்பளப்பும் போல
தேனீக்களின் ரீங்காரம்
ஓய்வதே இல்லை
என்ன பேசுகிறார்கள்
பெண்கள் எல்லோரும்
கூடிக் கூடி ?
எனக்கும் உண்டு
அறிய விரும்பும் ஆர்வம்
எல்லோரையும் போல
தேனீக்களின் ரீங்காரம்
தெளிய வைத்தது
பெண்கள் பெண்களாகவே
நீடித்திருப்பதைக் குறித்தும்
தேனீக்கள் தேனீக்களாகவே
திகழ்வது குறித்தும் தான்
எழுகின்றன அந்த ஓசைகள்
உயிர்த்திருப்பதை அவர்கள்
தமக்குத் தாமே
உணர்த்திக் கொள்ளும்
அந்த விவரம்
நீங்கள் தேனீயாகவோ பெண்ணாகவோ
இருந்தால் புரியும் நிச்சயம் 
-வையவன் 

 மேலும் கொஞ்சம் அட்டாச்மென்ட் பைலில்
வாழ்க தங்கள் தமிழ்ப்பணி வளர்க தங்கள் புகழ்


 
Innamburan Innamburan 
10/28/11
to mintamil
நன்றி, திரு வையவன். தீபாவளி வாழ்த்து. உங்களை போன்றோர் கொடுக்கும் ஊக்கத்தினால், சமீப காலம் வரை தமிழில் எழுததாதவன், தமிழில் எழுதுகிறேன். பிழைகள் இருக்கலாம். ரீங்காரம் ஓயாது. ஓய்ந்தால் கற்பனை கலைந்து விடும். உங்கள் கவிதையையும், கலைந்த மெளனத்தையும் ரசித்துப்படித்தேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்
28 10 2011

No comments:

Post a Comment