Google+ Followers

Saturday, October 26, 2013

காஷ்மீர்! ஹோஷ் மே ஆவ்!அன்றொரு நாள்: அக்டோபர் 26

2013 வருட அப்டேட்: பாகிஸ்தான் அட்டுழியங்கள் குறையவில்லை,
ஒபாமா ஒட்டுக்கேட்டுவிட்டு,
கோவிச்சிக்கிணாலும்.
26 10 2013அன்றொரு நாள்: அக்டோபர் 26 காஷ்மீர்! ஹோஷ் மே ஆவ்!

Innamburan Innamburan Wed, Oct 26, 2011 at 6:42 PM
அன்றொரு நாள்: அக்டோபர் 26
காஷ்மீர்! ஹோஷ் மே ஆவ்!
நாள், கிழமை எல்லாம் கவனத்தில் இல்லை. அரசு ஆவணங்களில் இருக்கும். விமானத்தின் கடைசி சீட்டில் ஷேக் அப்துல்லா, சினம் கொப்பளிக்க, அமர்ந்திருந்தார். அருகிலிருந்த அதிகாரி யாரையும் அண்டவிடவில்லை.  இறங்கினால், ரேடியோ செய்தி: ஷேக் அப்துல்லா கைது! இத்தனைக்கும், அவர் பிரதமர் நேருவோட ஃப்ரெண்ட். இந்த காஷ்மீர் பிரச்னை என்று தான் எப்படித்தான் தீருமோ?  இங்கு நான் அரசியல் பேசப்போவதில்லை. விவரிக்கப்போவதில்லை. அக்டோபர் 26, 1947 அன்று பெண்ணாசை வீரன் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட காஷ்மீர் மஹாராஜாதிராஜ ஹரி சிங்க் அவர்கள் மெளண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒரு பிராதும், மகஜரும் கொடுத்ததும், மனம் உடன்படாத ‘உடன்கட்டை’ ஏறியதும், ‘போர்’ மூண்டு, குர்காவ்ன் ராணுவமுகாமில் கால்ஃப் விளையாடிக்கொண்டிருந்த பிரிகேடியர் உஸ்மான் உயிர் தியாகம் செய்ததும், அடுத்துடுத்து  இன்று வரை,வந்து கொண்டிருக்கும் பிரச்னைகளை பற்றி ஒரு சிறிய டைம்-லைன். ஒரு 1948 உரையாடல். ஆவணங்கள், உசாத்துணையில்.
நடுவுநிலையில் மூன்று வகை:
1.’சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்/கோடாமை சான்றோர்க் கணி.’ (திருக்குறள் 118) ~ ‘முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.’ (மு.வ.உரை).

2. மதில் மேல் பூனை.
3. மறைந்திருந்து பார்க்கும் மர்மம்.

ஆங்கிலேய அரசு மூன்றாவது வகை நடுவுநிலையை வகித்தது. 

1820: 1349லிருந்து இஸ்லாமிய அரசர்கள் வசம் இருந்த காஷ்மீரை மஹாராஜா ரஞ்சித் சிங் கைபற்றினார். அவர் லாஹூர் வருகை தந்த வைபவத்தை பற்றி எழுதியிருக்கிறேன்;

1846: சீக்கியர்களை தோற்கடித்த ‘மதில் மேல் பூனை’ பிரிட்டீஷ், ஒரு ஹிந்து ராஜாவை காஷ்மீருக்கு அமர்த்தியது. அந்த ராஜ்யத்தின் லடாக் பிராந்தியத்தில் பெளத்தர்கள், ஜம்முவில் ஹிந்துக்கள்; காஷ்மீரில் இஸ்லாமியர். முழு நாட்டிலும், அவர்கள் தான் 75% மெஜாரிட்டி.
1933: பாகிஸ்தான் தேசாபிமானத்தை செளதரி ரஹ்மத் அலி துவக்கிவைத்தார்; அதில் உள்ள ‘கே’ காஷ்மீர்!

1946 ~1947: விடுதலைக்கு முன்னும், பின்னுமாக பாகப்பிரிவினை கண்டதுண்டங்கள், கொலைகள், புலன் பெயர்தல்,அகதி துன்பம், போர்க்கோலம் இத்யாதி.  

ஆகஸ்ட் 1947: இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேரச்சொல்லி, ராஜாவுக்கு அறிவுரை. அவர் கமுக்கம். அக்டோபர் மாதத்துக்குள் கொந்தளிப்பு. பாகிஸ்தானிலிருந்து’தன்னார்வ’ ராணுவம் படையெடுப்பு.

அக்டோபர் 26, 1947: ‘அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு எளுதறேன்’ என்று முடிக்கும், சுற்றி வளைத்த விண்ணப்பத்தில், ஹரி சிங், தற்காலிக ஒப்பந்தம் செய்து கொண்ட பாகிஸ்தான் தகராறு செய்கிறது, அடியாட்களை அனுப்பி கலாட்டா செய்கிறது. இந்தியா உதவாவிட்டால் நாங்கள் காலி. ஆகவே இந்தியாவில் சேர உடன்படுகிறேன். கையொப்பமும் இட்டேன், ஐயா. நான் ராசாவாக இருக்கும் வரை (அடேங்கப்பா!) அன்னியனை விடுவேனே என்று மார் தட்டி வஞ்சித்திணை பாடினார். அன்றே, உடன்பட்டார். இந்தியாவும் களத்தில் இறங்கி ‘அடியாட்களை’ அடித்து விரட்டியது. ஐ.நா.விடம் பிராது, ‘வானர’ மத்யஸ்துக்கு போக... 
1948ல் ஒரு தற்காலிக போர் நிறுத்தம். ஐ.நா. கோரிய மக்கள் வாக்கு கேட்பு இன்று வரை நடக்கவில்லை. தற்காலிக போர் நிறுத்தம்  அவரவர் இருந்த இடங்களை ஒரு எல்லைக்கோட்டாக அமைத்து விட்டது. 

1965:  பாகிஸ்தான் போர் துவக்கியது. டாஷ்கண்ட்.

1989லிருந்து காஷ்மீரில் அமைதி குலைந்தது. ( நான் 1982ல் அங்கு போனபோது பார்த்த செக்யூரிட்டி கெடுபிடிகள் இந்தியாவில் வேறு எங்குமில்லை.)

1999 மற்றொரு யுத்தம்.

2004: இந்தியா எல்லைக்கோட்டின் அடிப்படையில் சமாதானம் நாடியது. பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. பஸ் விடுவதே எங்கும் பேச்சாச்சு. யாருக்கு லாபம்?
கார்கில் யுத்தம் பற்றி, இங்கு எழுதப்போவதில்லை.

இனி ஒரு 1948ம் வருட உரையாடல்: மஹாத்மா காந்தி & கிங்ஸ்லி மார்ட்டின். (இவர் இந்தியாவின் நண்பர். அவரை பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஒரு நாள் பிரசுரிக்க வேண்டும் என்று ஆஸ்தை. பார்க்கலாம்.
உரையாடல்:
கி.மா: இந்த காஷ்மீர் விவகாரத்திற்கு, இந்த தற்காலிக எல்லைக்கோட்டின் அடிப்படையில் தீர்வு காணக்கூடாதா?
ம.கா: நீங்கள் ஒரு சாதாரண இதழாளர். உங்களுக்கு அரசியல் என்ன தெரியும்?
ம.கா. ( நிதானித்து} நீங்கள் கேட்பது சரி தான். ராஜாஜியும் அன்றே கேட்டார். மெளண்ட்பேட்டனும் கேட்டார். 
(மெளனம்: 2004 வரை. அப்போது தாமதமாகிவிட்டது)
இன்னம்பூரான்
26 10 2011
140.jpg
உசாத்துணை

Geetha Sambasivam Wed, Oct 26, 2011 at 10:11 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஐ.நா.விடம் பிராது, ‘வானர’ மத்யஸ்துக்கு போக//
 
மஹா பெரிய தவறு! இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை
 

2011/10/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 26
காஷ்மீர்! ஹோஷ் மே ஆவ்!