Google+ Followers

Wednesday, October 16, 2013

கண்ணதாசன்: அன்றொரு நாள்: அக்டோபர் 17.1

அன்றொரு நாள்: அக்டோபர் 17.1 கண்ணதாசன் (24 06 1927 ~ 17 10 1981)
Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 1:52 AMஅன்றொரு நாள்: அக்டோபர் 17.1
கண்ணதாசன் (24 06 1927 ~ 17 10 1981)
கவிஞர் கண்ணதாசன் அவர்களை பற்றி அறியாத, அவரை போற்றாத, தமிழனை காண்பது அரிது. திரைப்பட பாடலோ (‘கோப்பையிலே குடியிருப்பு’), கிருஷ்ண கானமோ, ஏசு காவியமோ, அனார்கலி நாடகமோ, இலக்கிய யுத்தங்களோ, ‘அர்த்தமுள்ள இந்து மதமோ’, அவருடைய படைப்பில் ஆற்றல் தோன்றவில்லை; அது அவருடன் கருவிலேயே, இரட்டைப்பிறவியாக, வளர்ந்ததினால். அவருடைய வனவாசம், நம் மன வாசம். ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை, வடமொழி அறியாத கண்ணதாசன் அவர்கள், மற்றவரின் உதவியுடன் கவிதையாக, தமிழாக்கம் செய்து இருக்கிறார். அதில் ஒரு நுட்பம். அது செய்த பின்னர், தன் செல்வநிலை உயர்ந்தது என்கிறார். அதை என்னிடம் காட்டி, அந்த நூலை எனக்கு அன்பளிப்பாக, ஒரு மதுரை வாழ் காரோட்டி அளித்தார். ஐயா! என் செல்வநிலை உயர்ந்தது! பலருக்கு வாங்கிக்கொடுத்தேன். அவர்களுக்கு அப்படித்தான் என்று தோன்றுகிறது! 
அவரை பற்றி நான் எதிர்பார்த்த அளவு இணைய தளத்தில் ஆய்வுகள், ஏன்? செய்திகள் கூட இல்லை. அவரும் பலமுறை அரைக்கப்படும் மாவாயினார். ஒரு காரணம், மாவரைப்பதில் தமிழனின் ஆர்வமாக இருக்கலாம். மற்றொன்று காப்புரிமை பிரச்னையாக இருக்கலாம். அவருடைய படைப்புகளை நாட்டுடமையாக்க, வாரிசுதார்கள் சம்மதிக்க வில்லையாம். அது அவர்களின் உரிமை. மேலும் ஒரு காரணம். நமக்கு இலக்கிய பார்வை மங்கல்; இலக்கிய ஆய்வுகள் மு.வ. அவர்கள் காலத்திற்கு பிறகு காய்ந்து போயின. ஒப்பியல் என்ற இலக்கிய ஆய்வு முறையை கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் துவக்கி வைத்தார். அந்த முறையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை, மகா கவி, கவி மணி, நாமக்கல் கவிஞர்  போன்றோரின் படைப்புகளுடன் ஒப்பியல் செய்தால் தமிழன்னை மகிழ்ச்சி அடைவாள். விட்ட குறை, தொட்டகுறை நீக்குவது உமது கடனே.
இன்னம்பூரான்
17 10 2011

20091212010104.jpg

rajam Mon, Oct 17, 2011 at 2:49 AMகண்ணதாசன் + விசுவநாதன் + ராமமூர்த்தி + டி. எம். சௌந்தரராஜன் + சுசீலா ... இந்தத் தொகையலுக்குப் பின் வேறு எந்தத் தொகையலையும் என் செவிக்கும் மனத்துக்கும் உணவாகப் பெற்றதில்லை! :-) :-) :-)   கண்ணதாசன் அவர்களுக்கு எப்பவும் என் அஞ்சலி!

rajam Mon, Oct 17, 2011 at 4:05 AM


ஓ ... ஒரு கூடுதல் கருத்து. கண்னதாசன் மகள் அலர்மேலு பாத்திமாக் கல்லூரி மாணவி. கண்ணதாசன் ஒரு முறை கல்லூரிக்குச் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அப்போதுதான் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடலை இயற்றியிருப்பதாகச் சொல்லி அதைப் பகிர்ந்துகொண்டார். நல்ல நாட்கள் அவை! ! 
[Quoted text hidden]

Geetha Sambasivam Mon, Oct 17, 2011 at 5:48 PMஅருமையான நினைவலைகள்.  கண்ணதாசனின் பாடல்கள் அமரத்துவம் பெற்றவை.  விஸ்வநாதன் ராமமூர்த்தியின்
இசையில் அனைத்தும் என்றென்றும் விரும்பிக் கேட்கும் கீதங்கள்.  உச்சரிப்பு, இசை அமைப்பில் அதிக சத்தம் இல்லாமல் என எத்தனையோ சொல்லலாம்.  நன்றி பகிர்வுக்கு.
அவரோட குமாரன் வெங்கட் என்பவர் கண்ணதாசன் பாடல்களுக்கெனத் தனி வலைப்பதிவு வைத்திருந்தார்.  பார்த்திருக்கேன்.  இப்போ மூடிட்டார்னு நினைக்கிறேன். 
2011/10/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>Subashini Tremmel Mon, Oct 17, 2011 at 11:48 PM


உண்மைதான்.. தேடியதில் இணையத்தில் அவ்வளாக பதிவுகள் கிடைக்க வில்லை. எனது வலைப்பூ பதிவுகளின் 2003 பதிவுகள் இரண்டு..கே: பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்....

பதில்: என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. ஆண் என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப்
பாடுவதற்கு என்ன இருக்கின்றது?


மேலும் ஒன்று.. பிடித்த கவிதையின் ஒரு சில பகுதிகள்..

அப்போதெல்லாம் எனக்கு வலையில் கிறுக்க நிறைய நேரம் இருந்த சமயம். அதனால் இப்படி சில பதிவுகள் :-)

நமது மின் நூல்கள் சேகரத்திலும் கண்ணதாசனின் ஒரு நூல் இருக்கின்றதே. எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. வாசித்துப் பாருங்களேன்.

குடும்ப சூத்திரம் என்பது நூலின் பெயர். எண் 271

அன்புடன்
சுபாInnamburan Innamburan Tue, Oct 18, 2011 at 1:59 AM

To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88

‘உண்மைதான்.. தேடியதில் இணையத்தில் அவ்வளாக பதிவுகள் கிடைக்க வில்லை.’
~ நன்றி, அன்பின் ஸுபாஷிணி, தேடியதற்கு. எனக்கு,
தேடி, தேடி, பலபட்டறை திறந்து, அன்றைய தலைமாந்தரை/ தகவலை தேர்ந்தெடுக்கும் முன் வெள்ளி கிளம்பி விடுகிறது. ஸ்னானபானாதிகளை முடித்து, தேடி முடிப்பதற்குள், மற்ற ‘தலை’ யீட்டுக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பசி எடுத்து விடுகிறது. பின்னர் உண்ட மயக்கம். எழுந்தால் தேடல் மும்மரம். மனதில் விஷயத்தை உட்கொள்ள, போவதோ உலாவ. எழுதி முடிக்கும்போது, டயர்டு. இன்று புதிதாக நூல் ஒன்றும் படிக்க வில்லையே என்ற ஏக்கம். 
எனினும், ஒரு நிறைவு. பல விஷயங்கள் எனக்கும் புது வரவு. பகிர்ந்து கொள்ள ஒரு மின் வாய்க்கால். உசாத்துணைகளும், படங்களும் சேகரம். புத்தகம் எப்போது வரும் என்று பார்க்கலாம். இப்போதே 500-600 பக்கங்கள். எல்லாம் உங்கள் ஊக்கம். உங்கள் வலைப்பூ படித்தேன்.
கண்ணதாசன் ஒரு யதார்த்தவாதி. ஆகவே, 
'எல்லாம் அவன் செயலே' என்பதற்கு 
என்ன பொருள்?
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவு 
என்று பொருள்..!
குடும்ப சூத்திரம் படித்தேன். ஸூபர் யதார்த்தம்.
வணக்கம்
அன்புடன்