Google+ Followers

Friday, March 23, 2018

மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 5மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 5

இந்த இழை ஒரு மீள்பதிவு. இன்றைய குழப்பமான சூழ்நிலையில் அப்பயை தீக்ஷிதர்  என்ற மஹானின் உன்மத்தத்தில் பொருளுணர்ந்து புதைந்துள்ள பக்தி, மதாபிமானம், பகுத்து அறிந்த சுயமரியாதை,நிறைகுடமான வாழ்வியல் ஆகியவை முனைவர் நாவன்னா கண்ணன் அவர்கள் அனுபவித்த வகையிலும், யானும் மேலும் சிலர்களும் அனுபவித்த வகையிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னம்பூரான்
23 03 2018

உன்மத்தம் : 3

இன்னம்பூரான்

பிரசுரம் : http://www.vallamai.com/?p=34855: மே 1, 2013

எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.

‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
எப்படிப் பாடினாரோ…’

சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.

சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.

‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்

‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’

என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.

‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் பு குந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:
‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’

“…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.

அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்
ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*

என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.

சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.

‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.
சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?
எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.
‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!
அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”
‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.

“…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”

நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.

“…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”

(முற்றும்?)

பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.
உசாத்துணை:
‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.

சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg
பின்னூட்டங்கள்:

ரேவதிநரசிம்ஹன் wrote on 2 May, 2013, 10:30 அந்தத் தும்பைப் பூவையும்,வில்வ தளத்தையும் எடுத்து அவருக்கு அர்ச்சிக்க வேண்டிய புத்தியையும்
அவரே தரவேண்டும்.எத்தனை உன்மத்தம் பிடித்திருந்தால் ஊமத்த இலையையும் உட்கொண்டு புத்தி மாற்றம் ஆகியும் சிவபாதங்களைவிடாமல் பிடித்தவரின் மஹிமையை என்ன வென்பதி.
அறியக் கொடுத்ததற்கு மிகவும் தன்யளானேன்.
....
உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி

அப்பைய்ய தீக்‌ஷிதர்  போல் எழுத எல்லோராலும் முடியுமா?

உன்மத்தம் பிடித்தாலும்  உன் நிமித்தம்தான் 
என்பதை அறிந்த அப்பைய்ய தீக்‌ஷிதர்  பக்தி  பற்றி அறிந்து மனம் உருகுகிறது

நம்மால் ஒரு வினாடி நேரத்துக்கு மேல்  லயிக்க முடியவில்லை இறைவன் சன்னிதானத்தில் கூட . மனம் அலைபாய்கிறது

ஆயிரம் வருடங்கள் தவம் செய்த யோகியர்களை விட
ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் உன்மத்த நிலை எய்தியும்  இறவனைத் தவிர வேறு எதையும் நினையாதிருக்க  முடிந்த அப்பைய்ய தீக்‌ஷிதரின் சிவ பக்தி ஆன்ம பலத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ

....
     எருதேறி ஏழையுடனே,
            பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
                உளமே புகுந்த அதனால்.....'

                  ஊமத்தையைத்தான் 'மத்தம்' என்று சுருக்கி அழைக்கிறார்களா?
அப்பையதீட்சிதர் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை  உங்கள் இடுகை
வாசித்ததும் பிரமிப்பானது  என்ன  ஒரு சிவபக்தி!    ஞானி  யோகி   அந்த உன்னத பக்தர்!

உங்கள் எழுத்தில் பக்திப்பரவசமாகிறது என்றால் அது மிகை இல்லை.  .
[Quoted text hidden]
-- 
ஷைலஜா
 When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

...
உன்மத்தம் பிடிக்கச் செய்யும் இழை.  அருமையா இருக்கு. படிக்கப் படிக்க ஆனந்தம்.  ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் நடையில் படிக்கப் பரவசம்.
கீதா சாம்பசிவம்.
...
ஆச்சர்யமான விதத்தில்/கோணத்தில் அப்பய தீட்சதரைப்பார்த்து எழுதியிருக்கிறார் ’இ’ண்ணா. உன்மத்தம் பிடித்த நிலை என்பதை பயித்தியம் பிடித்த நிலையோடு ஒப்பிட்டு அப்பயர் செய்திருக்கும் பரிசோதனை ஆச்சர்யமானது. சயனைடு சாப்பிட்டவுடன் மரணம். ஆயினும் அதன் சுவையறிய ஒரு விஞ்னானி சாப்பிட்டு S என்று எழுதிவிட்டு முடிப்பதற்குள் செத்துவிட்டதாக ஒரு கதை சொல்வர்.

”சிவாத் பரதரம் நாஸ்தி/அஸ்தி த்ரோணம் அத:பரம்” கதை சுவாரசியமாக இருக்கிறது. கூரத்தாழ்வான் கதையோடு ஒப்பிட்டு இன்னும் எழுதலாம்.

ஹிப்பிகள் ஒருவித உன்மத்த நிலையில் இருந்தனர். வட இந்தியாவில் கும்பமேளா வரும் பல சாதுக்கள் உன்மத்த நிலையில் உள்ளனர். சோமபானம், சுரபானம் என்பது ஆல்கலாய்டு உள்ள தாவரங்கள் தயவால் உன்மத்த நிலையைக் கொடுக்கும்.

அரங்கனார் தரும் தொடுப்பு இதுவெல்லாம் இல்லாமல் கற்றை (கற்ற)த்தாவலில் உன்மத்த நிலைக்கு இட்டுச் செல்லும் ;-)

நா.கண்ணன்

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.comஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com