Google+ Followers

Friday, November 11, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [1]கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[1]

இன்னம்பூரான்
12 11 2016
சில நாட்களாக ஊடகங்களும் பூடகங்களும் மத்திய அரசு ரூ. 1000/- & ரூ. 500/- கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்த பின், ஓயாமல் செய்திகள்/ கருத்துக்கள்/ அபிப்ராயங்கள்/ சிக்கல்கள்/ தீர்வுகள் ஆகியவை பற்றி பறை சாற்றி வருகின்றன. நேற்று பிறந்த குழந்தை கூட குறை கூறுகிறது என்ற மிகையை யதார்த்தமாகக் கூறலாம்.

இந்த கனஜோர் நடவடிக்கையை வரவேற்கும் நான், சில தகவல் துணுக்குகளை மட்டும் ஓரோரு வரியில் இந்த மையத்தில் தருகிறேன்.

எல்லாம் பொது மன்றத்தில் வந்தவை தான் என்று உறுதி அளிக்கிறேன். தனித்தனியாக உசாத்துணை கொடுக்க இயலாது.

  1. 21/2 லக்ஷம் பொறும் போலி நோட்டுகளை கேந்திரபாராவிலிருந்து குர்தா ரோடு வந்த சுமித் குமார் துடு என்ற வாலிபன் வங்கியில் செலுத்தும்போது பிடிபட்டான். அவன் ஒரு தேசத்துரோகி கும்பலை சார்ந்தவன் என்று சொல்லவும் வேண்டுமா?
  2. மும்பையிலும், டில்லியிலும், வருமான வரி அதிகாரிகள் 12 ஹவாலா துரோகிகளையும், உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த ஆபரண வியாபாரிகளையும் துளைத்து எடுத்தார்கள் - ஏன்? அவர்கள் சட்டவிரோதமாக செல்லா நோட்டுகளை திரவியமாக்கினர்.
  3. கோவாப்பரேட்டிவ் வங்கிகளில் விதிகள் மீறப்பட்டன. அவர்கள் தலையிலும் கை.
  4. ஹவாலா திவாலானதால் வெளி நாட்டிலிருந்து வரி செலுத்தாமல், வங்கிக்கட்டணம் கட்டாமல் தாய்நாட்டுக்கு பல வருடங்களாக துரோகம் செய்த பாவிகள், தேள் கொட்டிய திருடர்கள் போல் தவிக்கின்றனர்
  5. அவர்களிடம் பெற்ற பணத்தை என் செய்வது என்று தெரியாமல், அரசியலர் ஆதரவுடன் பல வருடங்களாக மக்களை ஏமாற்றியவர்கள் சிக்கி வருகிறார்கள்.
  6. ஏழு வருடங்களாக தி.மு.க. ‘அற’ கட்டளை சொத்து வரி கட்டவில்லை. இன்றைய பாக்கி ரூ.72 லக்ஷம். வாத்தியார் நின்று கொண்டு.....
  7. டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடும் சரிவு. மது மயக்கம் நாடுவோர் மால்களில் க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கி சரியலாம்.
  8. வாட்ஸ் அப்: திருவான்மியூர் குப்பை தொட்டியில் நோட்டுகள்! ~இது வதந்தியாம்.
  9. ஹிந்தி நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க கடன் வாங்க நேரிட்டதால், ‘கொதிப்பு’ ~ செய்தி 
  10. திருமலை ஒம்மாச்சி சார்பில் அந்த கோயில் ‘அறங்காவலர்கள்’ செல்லா நோட்டுகளையும் உண்டியலில் பெற்றுக்கொள்கிறார்கள். யாத்திரீகர்களை என்றும் கவனிக்கும் அவர்கள் கனிவுடன் இரண்டாவது உண்டியல் பெட்டியையும் வைத்துள்ளார்கள். மோடி என்ன சொல்வார்? ஒம்மாச்சி என்ன நினைப்பார்?

அடக்கத்துடன்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: 
http://indianexpresstv.com/vvtimages/news-images/thumbs/tiger-information-center-is-across-the-country-நாடெங்கும்-அமைகிறது-புலிகள்-தகவல்-மையம்-07-08-16.jpgஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com