Google+ Followers

Sunday, June 26, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [3/2]இன்னம்பூரான் பக்கம் [7]

இன்னம்பூரான் பக்கம் [7]
 பெண்ணியம்: புதிய பார்வை [3/2]

p
Sunday, June 26, 2016, 14:51
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=69914
இன்னம்பூரான்
ஜூன் 26, 2016
கட்டுரையை தொடர்வதற்கு முன் ஷாக்: இன்று சென்னையில் ஐந்து பெண்மணிகள் (நான்கு பெண்கள் 30 வயதுக்குள்) கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 24 வயது யுவதி. கணினி பணியாளர். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொலை. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு அன்னையும் அவரது மூன்று மகளிரும் கொல்லப்பட்டு, வீட்டிலேயே சடலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கேட்டு, பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை; வெளியிலும் இல்லை. அவர்கள் தற்காப்பு சண்டைகள் கற்றுக்கொள்ள வேண்டும். ‘ என்கிறார்.

“,,,இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.”
(தயக்கத்துடன் தொடருக்குத் திரும்புகிறோம்.).

சாரு பஹ்ரீ இந்த கொடுமையின் நிவாரணம் பொருட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும்போது, கூறுவது:
உலக சுகாதார மையம் [WHO] உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்பாலார் தனது வாழ்க்கையில் வன்முறையால் துன்பம் அடைகின்றனர் என கூறுகிறது. இந்தியாவில் வீட்டிற்குள் வன்முறை அவதிப்படும் பெண்களே மூன்றில் ஒரு பங்கு என்பதால் உலக பிரச்னை, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு மாபெரும் பிரச்னையாகி விட்டது. முதற்கண்ணாக, விழிப்புணர்ச்சி தலையெடுக்கவேண்டும். இந்திய மத்திய அரசின் சுகாதார இலாக்கா 850,000 நபர்களை முன்னிலை சமுதாய ஆலோசகர்களாக (Accredited Social Health Activists (ASHAs)—front-line community health workers—to create awareness of what constitutes violence against women, the consequences, and its identification and prevention.) நியமனம் செய்து, பயிற்சி அளித்து, வன்முறைக்கு உட்படுத்த பெண்களுக்கு தக்கதொரு ஆலோசனை, அடைக்கலம், சட்ட உதவி, வருமானம் தரும் சிறு தொழில்கள் கற்றுக்கொடுப்பது, குழந்தை பராமரிப்பு ஆகிய உதவிகள் செய்வார்கள்.’ என்ற திட்டம் பற்றி விவரம் கொடுத்திருக்கிறார், இத்தகைய சங்கிலித்தொடர் உதவிகள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்கிறார். பொது மக்கள் இவற்றீன் மீது கவனம் வைத்து இவர்களின் பணியை தணிக்கை செய்யவேண்டும்.

என்ன உதவி செய்தாலும் அவை உடனுக்குடன் நம்பகத்தனமான முறையில் கிட்ட வேண்டும் என்பதற்காக, புது டில்லியில், எல்லா விதமான உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மாநிலங்களில் இத்தகைய சேவை மன்றங்கள் எதிர்ப்பார்த்த அளவு உருவாகவில்லை. காரணம், வேறு அமைச்சரகம் என்ற ஐயம் ஏற்படுகிறது. எனினும் 33 மையங்கள் இருப்பது ஒரு அளவு வரவேற்கத்தக்கதே. மூன்றே வருடங்களில் ஒவ்வொறு மாவட்டத்திலும் இவை சேவை செய்யும் என்று மத்திய அரசு உறுதி கூறுகிறது. மற்றும் பல உத்திகளை கையாளப்போவதாக மத்திய அரசும் தன்னார்வக்குழுக்களும் திட்டம் போடுகின்றனர்.
பார்க்கலாம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/aHjoqG8R6Dg/hqdefault.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com