Google+ Followers

Friday, June 24, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [3/1]இன்னம்பூரான் பக்கம் [7] 
பெண்ணியம்: புதிய பார்வை [3/1]


பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=69888 

Friday, June 24, 2016, 22:30
இன்னம்பூரான்
ஜூன் 24, 2016

ஒரு கட்டுரையை நான்கு பாகமாக அளிக்க வேண்டிய கட்டாயம், நேரமின்மை. விட்டு விடுவதை விட, இது மேல்.

இங்கிலாந்தின் லான்ஸெட் என்ற மருத்துவ இதழ் பல்லாண்டுகளாகவே மிக பிரபலம்; முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நாளை சாரு பஹ்ரீ என்பவர் எழுதிய Gaps in India’s health response to violence against women என்ற ஆங்கில கட்டுரை வெளியாகும். நாமும் நான்கு பேர் ஆராய்ந்து கூறுவதை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். இல்லையென்றால், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டலாம்.

அந்த கட்டுரையின் என்னுடைய சாராம்சத்தின் முதல் பாகம் இங்கே.

பெண்கள் மீது வன்முறை நடப்பதை சமுதாயத்தின் ஆரோக்கிய பிரச்னையாக அரசு அணுகினாலே, சுகாதார நடைமுறைகளால் இந்த பூதாகாரமான பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிதாகும் என்று வல்லுனர்கள் கருதுவதாக, சாரு பஹ்ரீ கூறுகிறார்.

ஐந்து வருடங்கள் முன்னால் இந்த பிரச்சனையை அணுக தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பது காயத்திரி என்ற கர்நாடகா அரசு பணி புரியும் செவிலியருக்குத் தெரியாது. இன்று, 82 செவிலியர்கள், 37 டாக்டர்கள், 270 சமுதாய ஆர்வலர்கள், இவருடன் இணந்து இந்த பிரச்சனையின் தாக்கத்தை கணிசமான அளவு குறைக்க முடிந்திருக்கிறது என்பது அவருக்கு ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ‘ஸெளக்யா’ என்ற திட்டத்தின் கீழ் தனியார்-அரசு கூட்டமைப்பு ஒன்று அருமையாக செயல் படுகிறது. இதற்கு மத்திய அரசும், அமெரிக்க உதவியும் போற்றத்தக்கவை.

பளிங்கு நீர் போன்ற தெளிவுடன், பெண்களை அடித்து துன்புறுத்தியோ, வாய்வீச்சில் வசை பாடியோ, பாலியல் தொந்தரவு கொடுத்தோ, காசு பணம் கொடுக்காமல் பாடாய் படுத்தினாலோ அது பெண்ணியத்தைத் தாக்கும் வன்முறை என்பது அந்த கூட்டமைப்பின் தாரகமந்திரம். 

‘இவர்கள் எல்லாரும் ஆரோக்கிய வாழ்வின் பாதுகாவலர்கள், அண்டை வீட்டார் போல..’ என்கிறார், அகில இந்திய அளவில் இந்த பிரச்சனையுடன் போராடும் Research Triangle Institute Global India Private Limited, New Delhi, என்ற அமைப்பின் தலைவரும் பெங்களூரில் மருத்துவ பேராசிரியையும் ஆன சுனீதா கிருஷ்ணன். ஆகவே, அனுபவமும், பரிச்சியமும் கை கொடுக்க, காயத்திரி போன்றோர் துப்புத் துலக்கி, ‘அடி வாங்கி சுருங்கிக் கறுத்தக்கண், காயம் பட்ட அவயவங்கள், அஞ்சி நடுங்கும் பீதி போன்ற சின்னங்களை புரிந்து கொண்டு தக்கதொரு முறையில் இயங்குகிறார்கள்.’ என்று கூறுகிறார். சில பெண்கள் கதறியழுது கொடுமையை பற்றி கூறிவிடுகிறார்கள்; சிலர் பல முறை பேசிய பிறகு தான் நடந்த கொடுமையை ஒத்துக்கொள்கிறார்கள்.’ என்று காயத்திரி கூறியிருக்கிறார். சில குடும்பங்களில் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்கள் எங்களை அணுகமுடியாமல் குடும்பத்தினர் தடுப்பார்கள். நான் அதையும் மீறி அவர்களிடம் தனித்து மிருதுவாகப் பேசி உண்மையை அறிந்துகொள்வேன், என்கிறார், காயத்திரி.
இந்த தொடர் சொற்றொடராக பதிவு செய்யப்படவில்லை. இது உண்மையை கக்கும் அப்புரானி. அதனால் தான் இந்தியாவில் வெளிவராமல், இங்கிலாந்தில் பதிவு ஆகி, நம் மானத்தை வாங்குகிறது. எப்படியாவது கொடுமையை தடுக்கும் வழியில் பயணிப்பது நம் கடமை.

இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
(தொடரட்டுமே.)

சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com