Monday, June 29, 2015

நாளொரு பக்கம் 52

நாளொரு பக்கம் 52





Thursday, the 16th April 2015
கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.
- திரிகடுகம் 10

‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இறை வணக்கத்துகந்தது. கணக்காயர் இல்லாத ஊரும், முரண் நிலை பிணக்குகளை தீர்க்கும் திறனுடைய பெரியவர்கள் இல்லாத சபையும், உதவும் கரம் நீட்டாதவர் உள்ள அக்கம்பக்கமும் வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை என்பது அன்றாட வாழ்வியல். கணக்காயர் என்ற சொல்லுக்கு இரு பொருளுண்டு. ஆசிரியர் என்பது ஒன்று. ஆசிரியர் இருந்தால் தானே கல்வி வளரும். கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர் என்ற பொருளும் உண்டு என்பதை "கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற், பெற்றதாம் பேதையோர் சூத்திரம்" என்ற நாலடி உணர்த்துகிறது. வெண்கொடை தாங்க, செங்கோல் ஓங்க, பற்று, வரவு கணக்கை பதிவு செய்து, ஆய்வு செய்யவேண்டும் என்று சங்கக்காலத்திலேயே நல்லாதனார் கூறிவிட்டார். அவ்வாறு இல்லையெனின், தற்காலம் நாட்டை இருட்டடித்த வண்டவாளங்கள் தண்டவாளமேறியிருக்காது.
சான்றோர் சபை என்பது நீதிமன்றத்துக்கு சமானமானது. உதவும் கரம் பற்றி ஒரு நிகழ்வு. அமெரிக்காவில் புதிதாக குடியேறிய நகரத்தில், அக்கம்பக்கத்தை அறிந்து கொள்வதற்கு முன், ஒரு குடும்பத்தில் உடல்நிலை பாதிப்பால், பெரும் சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஒரு மாதத்திற்கு மேல் அக்கம்பக்கம் சோறு போட்டது; பூனைகளை பராமரித்தது; வீட்டுச்சாவியை வாங்கிக்கொண்டு, அவ்வப்பொழுது கூட்டி, மெழுகி ஆதரித்தது. இந்தியா முழுதும் அந்த வழக்கம் வரவேண்டும். ‘ஏனோ தானோ!’ என்ற அக்கறை இல்லாத துர்குணம் நீங்க வேண்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:  

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







No comments:

Post a Comment