Saturday, February 14, 2015

அச்சச்சோ! சோச்சோ! ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7




அச்சச்சோ! சோச்சோ!
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7
இன்னம்பூரான்
14 02 2015

‘நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்’ என்ற வகையில் அந்தக்காலத்து குறுநிலமன்னர்கள் கழுவேற்றுவார்கள் என்றும், தான்தோன்றித்தனமாக ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற வகையில் அரசியல் தலைவர்கள் குளறுபடி செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் ஓவர் இல்லை !? என்னைக்கேட்டால், கஷ்குமுஷ்கு யஷ்ஷை விட படுமோசம் என்று தோன்றுகிறது. விமானம் ஏறத்தொடங்கிய உடனேயே, அங்கு ஊழியம் செய்யும் அழகிகள் பலமான உபசாரம் செய்வார்கள். முந்திரி தந்திரம், பான அபிஷேகம், நசுங்கிய சோறு, பொங்கிய சப்பாத்தி, காரமான மிட்டாய் வகைகள் என்றெல்லாம் பூமியில் கிடைக்காத மாற்றுருவ சாப்பாட்டு வைபோகம் நடக்கும். அதற்காக விமானபோக்குவரத்தையே, நம்ம ‘அச்சச்சோ சோச்சா’ மாமி மாதிரி ஸ்தம்பிக்க செய்யலாமோ?  ‘அச்சச்சோ சோச்சா’ மாமியிடைய தகப்பன்சாமி தான் விமான கம்பெனி சொந்தக்காரர். ‘போத்திப் போத்தி’ செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்கள் போல. அவள் பெயர் ஹீதர் சோ. நியூயார்க்லெ விமானம் ‘டொய்னு’ மேலெ ஏறின உடனே மக்கடம் என்ற வகை கடலையை பையோடு கையாக ஒரு ஊழியர் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு ஏழரைநாட்டு சனி போல. பொங்கியெழுந்த ஹீதர் சோ அவரை திட்டி விட்டு, விமானத்தைத் திருப்பச்சொல்லி தடாலடி நாட்டாமை செய்தாள். அந்த கம்பெனிலெ அவள் உயரதிகாரி வேறே. பயணிகள் எல்லாருக்கும் சினமெழுந்தது. என்ன செய்தார்கள் தெரியுமா? இந்திய வாசனை அடிச்சது போல். முணுமுணுத்தார்கள்! முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோர்ட்டுக்கு போய்விட்டது விவகாரம். அழுதுகொண்டே, ஒரு மன்னிப்பு கடுதாசை பேருக்குக் கொடுத்தாளே தவிர பச்சாதாபமே காட்டவில்லை என்று ‘ஓ’ என்ற நீதிபதி கூற அப்பனும் அவளை கண்டித்து வைத்தாராம். அரசு தரப்பில் சட்டத்தை மீறியதற்காகவும், அடிதடியில் இறங்கி ஒரு ஊழியரை மொத்தினதற்கும், விசாரணையில் தலையிட்டதற்கும் சேர்த்து மூன்று வருட சிறை தண்டனை கொடுக்க பரிந்துரை செய்தார்களாம். ஒரு கற்பனை: இந்தியாவில் 2013ம் வருடம் பர்ட் டவரார்ரா மாதிரியான ஒரு பெரும் புள்ளிராசா விமானத்தில் இப்படி பாடாய்படுத்தினால், அவரு தான் கெலிப்பார்.

இதையெல்லாம் இங்கு எழுதும் காரணம் யாது எனில்: தெற்கு கொரியாவில் வம்சாவளி செல்வக்கொழுந்துகள் இப்படி தான் தாறுமாறாக நடந்து கொள்வார்களாம். இந்த வழக்கு நல்ல படிபினையாம். 
இந்தியாவிலும் இந்த மாதிரி தடாலடி கலாட்டா வீஐபீகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தான் காரணம்.
-#-




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment