Google+ Followers

Tuesday, June 10, 2014

[MinTamil] சாக்ரட்டீஸ்[MinTamil] சாக்ரட்டீஸ்
21 messages


இந்த இழை எதேச்சையாகக் கிடைத்தது, இன்று, கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து.


எனக்கென்னமோ, மற்றது எல்லாவற்றையும் விட்டு, இதை மட்டும் 'சிக்' என பிடித்துக்கொண்டு தொங்கலாமே என்று தோன்றுகிறது. 

"எதற்கெடுத்தாலும் 'காரணம் கேட்டு வாடி' என்ற வாய்ப்பாடு மனித இனத்தை வழி நடத்தும் போது மங்கலாகத் தான் நிலவுகிறது. போதுமான இயக்கம் இல்லாதது; தரம் தாழ்ந்தது…" என்ற பொருள்பட ஶ்ரீ அரவிந்தர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

இன்னம்பூரான்

10 06 2014
----------------------------------------------------------------------------------------------------------------------


Thamizth Thenee

 “ சில நாட்களுக்கு முன்னால், இன்னம்பூரானை அவர்களை அவர் வீட்டில்
சந்தித்தேன். உடல் நலம் குன்றியிருந்தார். அது பற்றி இங்கு
எழுதியிருக்கிறேன்.


 புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்  புத்திசாலி இல்லை  என்னும் பாடலில் நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு அவர்கள்

”சேர்ந்து வாழும் மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை” என்று ஒரு வரி
பாடுவார்

ஏனோ எனக்கு அவர் நினைவு வந்தது, பொதுவாக மனிதர்களின்  முதுமைக் காலங்கள்
கொடுமையானவை, அதுவும் உலகில் ஒரே துணை என்று நம்பப்படும் இல்லறத் துணை
அது ஆணோ பெண்ணோ  அவர்களும் பிரிந்துவிட்டால் , ஆறுதல் சொல்லக் கூட
யாருமில்லா நிலை,

”வேரென  நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”
 என்னும் கண்ணதாசனின் பாடலும்  மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,

யார் யாருக்கு என்ன நிலைமையோ யார் அறிவார், இன்னம்பூரார் போன்ற
தைரியசாலிகள், அனுபவசாலிகள், சமாளிக்கிறார்கள், எத்தனை எத்தனை மனிதர்கள்
இந்தத் தனிமையை சமாளிக்க முடியாமலும், அந்த தனிமையை  அழிக்க முடியாமலும்
அவதிப்படுகிறார்கள் என்பதை நினைத்து மனதுக்குள் வருந்தினேன், ஆனாலும்
எவற்றையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் திரு இன்னம்பூராருக்கு  என்னால்
முடிந்த ஆறுதலைக்  கூறினேன்,  அவர் மின்னாக்கத்துக்காக வாங்கி வரச்சொன்ன
காமிராவை துபாயிலிருந்து வாங்கி வந்தது அவரிடம் கொடுத்தேன்,  (பணத்தை
உடனே கொடுத்துவிட்டார்), அவர் வீட்டில் அவருடைய மனைவியின் புகைப்படம்
இருக்கிறது, அந்தப் புகைப்படத்தின் முன்னே  ஒரு வினாடி நின்று அந்த இனிய
தெய்வத்தை  இன்னம்பூராரைப் பார்த்துக்கொள்ளச்ச் சொல்லி  மனதார
வேண்டினேன் ,அதுவும் இன்னம்பூராருக்குத் தெரியாமல், கழுகு அல்லவோ
மூக்கில் வியர்க்கும், தணிக்கை அலுவலக நியாபகமும், அனுபவமும் உள்ள
மனிதர்,  ஒரு பார்வையில் வினாடி நேரத்தில் எடைபோடக் கூடிய மனிதர், அதனால்
அவர் அறியாமல் வேண்டினேன், நான் நடிகனல்லவா?


அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த போது  என் முத்தண்ணா பக்கத்தில்
உட்கார்ந்திருந்த ஒரு உணர்வு, மனம் நெகிழ்ந்தாலும் வெளிக்காட்டாமல்
இயல்பாக பொதுவாக சில விஷயங்கள் பேசின பிறகு, அவர் கையில் இருந்த ஒரு
புத்தகத்தை வாங்கிப்பார்த்தேன்- The Trial And Death of Socrates by
Plato. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். இஷ்டமிருந்தால் இந்த
மாதிரி சமாச்சாரங்களை கதை சொல்லியாக பேசுவார், . இல்லையெனில், என்ன
கேட்டாலும், பேச்சை மாற்றிவிடுவார். இவர் ஒரு குழந்தையா? அல்லது பெரிய
மனிதரா  என்று அடிக்கடி சந்தேகம் வரும்,  சுற்றி வளைச்சு? ஆரம்பித்தார்,
ஆமாம் அவரும் மனம் நெகிழ்ந்திருந்தார்,அவராகவே சொன்னது, “ நாம் மின் தமிழில் எழுதுகிறோம்,  சோக்ரதர் என்ற நூலை
பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை திரு.வி.க. அவர் என்ன
சொன்னார் தெரியுமா?” என்று கேட்டு  விட்டு, சாக்ரடீஸ் எப்படி இறந்தார்,
தெரியுமா? என்று வேறு இடத்திற்கு சென்று விட்டார்.தானே தைரியமாக சிரித்துக்கொண்டே ஒரே மூச்சில் விஷம் குடித்து இறந்தார்
என்றேன். இல்லை  தைரியமாகக் குடித்தார், ஆனால் அவர் ஒவ்வொரு பகுதியாகக்
குடித்தார், கொஞ்சம் கொஞ்சமாக  அவருடைய  உடல் மரத்துப் போய்க்கொண்டே
வந்தது  காலிலிருந்து பாகம் பாகமாக, கடைசீ பாகம் விஷத்தைக்
குடித்துவிட்டு சாக்ரடீஸ் சொன்னது என்று ஒரு செய்தி சொன்னார்

யாருக்கோ அவர் கொடுக்கவேண்டிய தொகையைக் கொடுத்துவிடச் சொன்னாராம்,
இறக்கும்போது கடன்காரனாக சாகவிரும்பாத சாக்ரட்டீஸ்


 அவருக்கு விஷம் கொடுக்க வந்த அரசு நியமித்த கொலையாளியே அழுகிறான் பார்
என்று படத்தை காட்டும்போதே அவர் கண்கள் கலங்கியிருந்தன.  மனித மனம்
விசித்திரமானது, அதைமட்டும் என்னால் உணரமுடிந்தது,

 சான்றோர்களின் கதி இது தான் என்றார். சாக்ரிட்டீஸ்ஸின் தத்துவங்களை
எடுத்து சொன்னார். சொஃபிஸ்ட்ஸ், சாக்ரெட்டீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில்,
சிசிரோ, வெ.சாமிநாத சர்மா என்று சொல்லிக்கொண்டே போனார்.சாக்ரட்டீஸ் தான்
காந்திக்கு வழிகாட்டி. ‘எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. தெரியாது
என்ற சொல்ல உனக்கு துணிவு இல்லை. நான் துணிவுடன் அதை ஒத்துக்கொள்கிறேன்
என்பது தான் அடிப்படை என்றார்.  கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் புரியவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது. அவர் அக்கால கிரேக்க தத்துவத்தில்
ஆழ்ந்து விட்டார். நானும் வீடு திரும்பி விட்டேன்.”

ஹூம்  எத்தனையோ  சாக்ரடீஸ்கள், விஷம் மட்டும் வித்யாசமானது

கொடுப்பவர் மாறுகிறார், காட்சிகள் மாறுகின்றன, கோலங்கள் மாறுகின்றன,
ஆனால் அறிஞர்கள் மாறுவதே இல்லை

பின் குறிப்பு:

சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை
திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?”  என்று கேட்டாரே தவிர

என்ன சொன்னார் என்று கடைசீ வரை  சொல்லவே இல்லை’


அன்புடன்
தமிழ்த்தேனீ


meena muthu
நெகிழவைத்துவிட்டீர்கள்..

இறையருள் என்றும் துணை நிற்கும். நீங்களும் ஒரு விதத்தில் இறைவன் :)

2010/10/20 Thamizth Thenee <rkc1947@gmail.com>
சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை
திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?”  என்று கேட்டாரே தவிர

என்ன சொன்னார் என்று கடைசீ வரை  சொல்லவே இல்லை’


[Quoted text hidden]

Jana Iyengar Thu, Oct 21, 2010 at 6:02 AM


Aiyah Tamizh Thenee, I would like to join your ilk. Not that I am good
in writing, but may be I could express my feelings that would be
regarded. The problem is communicating in our tongue. My Tamilzh is
tolerably good, but what I lack is know how of using the keyboard. How
to type in Tamizh as freely as we do in English?
Jana Iyengar

2010/10/20 Thamizth Thenee <rkc1947@gmail.com>:

[Quoted text hidden]
--
Jana

[Quoted text hidden]

coral shree Thu, Oct 21, 2010 at 8:18 AM


விவேகானந்தரை தரிசித்த மகானை தரிசித்த மகான் அய்யா நீங்கள் ! சந்திர பாபு பாடல்களெல்லாம் தத்துவ முத்துக்களாயிற்றே!   இ.அய்யாவைப் பற்றிக் கூறி உள்ளம் உறுக வைத்துவிட்டீர்கள். இத்தகைய பேரறிஞர்களின், கற்றோர் சபையில் எனைக் களித்திருக்கச் செய்யும் ஆண்டவனுக்கு வெறும் நன்றி மட்டுமா சொல்ல முடியும் ? பகிர்ந்து கொண்ட தமிழ்த்தேனீ அய்யாவிற்கு என் மனமார்ந்த நன்றி....
[Quoted text hidden]
--
[Quoted text hidden]

செல்வன் Thu, Oct 21, 2010 at 9:41 AM


இன்னம்பூராரை தரிசிக்கும் வாய்ப்பு எப்ப கிட்டும் என ஏக்கத்துடன்


-----------
செல்வன்

www.holyox.blogspot.com

God Bless America

[Quoted text hidden]

Tthamizth Tthenee Thu, Oct 21, 2010 at 9:45 AM


You are   welcome

அன்புடன்
தமிழ்த்தேனீseethaalakshmi subramanian Thu, Oct 21, 2010 at 9:47 AM


எனக்கும் தான்
என் அண்ணாவை எப்போ பார்ப்பேன்
சீதாம்மா

[Quoted text hidden]

venkatachalam Dotthathri Thu, Oct 21, 2010 at 10:49 AM


ஓம்.
அவரே ஒரு பல்கலைக் கழகம்.
இன்னம்புரான் அவர்கள் ஆத்மஸ்வரூபியானவர்.ஒரு பன்மொழிப் புலவர், இயற்கையின் ரசிகர், தீர்க்கதரிசி, நினைவாற்றல் மிகுந்தவர், நக்கீரர்-குற்றம்கண்டவிடத்து  நளினமாகச் சீறுபவர், புதுமை விரும்பும் பழமை வாதி. அவர் தீர்க்க ஆயுளுடன் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தொண்டாற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்..
அன்புச் செல்வர் தமிழ்த்தேனி ஒரு மரபு அணில், பல்துறை விற்பன்னர், சாஸ்த்ரீய நாட்டம் மிகுந்தவர். வாழ்கபல்லாண்டு.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

[Quoted text hidden]

coral shree Thu, Oct 21, 2010 at 10:53 AM


எனக்கும் அதே ஏக்கம் உண்டு.......[Quoted text hidden]

devoo Thu, Oct 21, 2010 at 1:57 PM


இ ஐயாவைப்பற்றி  ஓம் ஐயா சொன்னதற்கெல்லாம் ஆம் ஆம்  போடுகிறேன்; ஒன்றை
மட்டும் சேர்த்துக்  கொள்கிறேன். இ சார் எந்த  ஒரு சூழ்நிலையிலும்
நகைச்சுவை உணர்வு குன்றாதவர்


தேவ்

Innamburan Innamburan Thu, Oct 21, 2010 at 5:27 PM

உங்கள் எல்லாருடைய தயவில், இந்த இழை ‘சாக்ரெட்டீஸ்’ என்றே தொடரட்டுமே.

தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு சாக்ரெட்டீஸ் வியாபகமாகத்தான் இருந்தார். அந்த நூல் என்னிடம் வந்த பின்னணி: இங்கிலாந்தில், ஒரு நாள், என் மருமகப்பெண் என்னை தன்னுடைய ஃபிலாஸஃபி வகுப்புக்கு அழைத்துச்சென்றாள். அந்தக்குழுவின் இலக்கு, தற்கால சிறார்களுக்கு தத்துவபோதனை தொடங்குவது. என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘வடமொழி தெரியுமா?’ அடுத்தது, ‘ஆதி சங்கரரைப்பற்றி நன்கு அறிவீர்களா? இவ்வாறான அலை வரிசை இருக்குமிடத்தில், அந்த நூலை வாங்கிக்கொடுத்தாள், அவள்.

சில சமயங்களில், நம் மனக்கிடக்கையை மற்றவர்கள் சொல்லி புரிந்துக் கொள்கிறோம். தமிழ்த்தேனீ எனக்கு அந்த கொடுப்பினையை அளித்திருக்கிறார் என்றால் மிகையல்ல. I see Jean-Paul Sartre’s authenticity in his prayers to my wife, Vasantha. நெகிழ்வாக அவர் என்னை பற்றி, ஆதரவாகவும், புகழ்ந்தும் கூறியதையும், மீனா, செல்வம், ஜனா ஐயங்கார்,பவளா, சீதாலக்ஷ்மி, ஓம் ஐயா, தேவ் ஆகியோர் எனக்களித்த புகழுரைகளையும், ‘தன்னடக்கம்’ என்ற ஜமுக்காளத்தின் அடியில் தள்ளும் ரகம் அல்ல, யான். பணிவுடனும், துணிவுடனும், அந்த கெளரதைகளை மதித்து, மேலும், மேலும், யான் இயங்கும் தரத்தை உயர்த்திக்கொள்ள முயல்வேன். இனி என்னை ஒதுக்கிவிடுவோம். சாக்ரெட்டீஸ் வருகிறார்.

சிறு வயதில், தத்துவம் புரியாத நிலையிலும், சாக்ரெட்டீஸ் என்னை மிகவும் பாதித்தார்், வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழியாக்கத்தின் மூலம். என் மனம் அவர் உயிரிழந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது. 18/19 வயதில் கில்பெர்ட் முர்ரே, பெஞ்சமின் ஜொவெட் போன்ற பேராசிரியர்களின் நூல்களின் மூலம் தெளிவுரைகள் கிடைத்தன. என் பயணங்கள் எப்படியெல்லாம் அமைந்தாலும், சாக்ரெட்டீஸ் அக்ராசனராகவே இருந்தார். எனவே, தமிழ் தேனீ என்னில்லம் வந்தபோது, அங்கு அவர் சர்வவியாபகியாக இருந்தது வியப்புக்குரியது அல்ல.

எனினும், இனி நான் சொல்லப்போவது, சில நாட்கள் கழிந்த பின் 17 10 2010 அன்று கார்டியன் இதழில் வந்திருந்த சாக்ரெட்டீஸ் பற்றிய குறிப்பு. அதன் சுருக்கத்தின் சுருக்கம்,  என்னிடம் உள்ள நூலின் அட்டைப்படம். (இணைத்துள்ளேன்) ‘விண்ணுலகத்திலிருந்து தத்துத்தை இவ்வுலகில் தரவிறக்கம் செய்தவர் சாக்ரெட்டீஸ்’, என்கிறார், சிசிரோ. சாக்ரெட்டீஸ் வாழ்வின் இலக்கு அறிய விழைந்தார். அவரின் பாதை கடினம், கல்லும், முள்ளும். ஆனால், என்னே கவர்ச்சி! என்னே நேர்த்தி! என்று இளைஞர்கள் சூழ, அவரதடிகள் பணிய, கீர்த்திமானாகி விட்டார், அவர். ஐம்பது வருடங்கள் கழிந்தன, இவ்வாறு. கிரேக்க அரசுகள் சிறியவை, நகருக்கு ஒன்று. முனிசிபாலிட்டி என்று கூட சொல்லலாம். அவர் வாழ்ந்த  ஏதென்ஸ் நாட்டின் அரசுக்கு கெட்டகாலம்: போர்க்களங்களில் படு தோல்வி, நிதி நிலை மோசம், ஏழைகள் பட்டினி, எல்லாம் தலைகீழ். சால்ஜாப்பு தேவை. புரிகிறதா? [இன்று  இந்த உலகில் பல நாடுகள் இருக்கும் நிலைமை, இது. இந்தியாவிலும் தான். ]

அகப்பட்டுக்கொண்டது சாக்ரெட்டீஸ், கி.மு. 399ம் ஆண்டின் நாளொன்றில். அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது: 1. நாட்டின் கடவுளர்களை அவமதித்தது; 2. இளைஞர்களின் மனதை குலைப்பது. குற்றம் என்று தீர்ப்பு. தண்டனை: அரசு மேற்பார்வையில் தற்கொலை, ஹெம்லாக் என்ற விஷம் அருந்தி. 

கி.மு. 469ல் ஒரு கல்லுளி மங்கனாக (சொல் வந்து பொருத்தமாக விழுந்தது!) பிறந்த (son of a stonemason) சாக்ரெட்டீஸ், கிரேக்க அழகு இல்லாத விகாரரூபன்; பானை தொந்தி; விசித்திரமான நடை, தேடும் கண்கள், ரோமம் அடர்ந்த உடல். ஊரார் மாதிரி பட்டும், பகட்டும், அவரை கவரவில்லை. ஊருக்கு ஒவ்வாத மனிதன். சமயம் சமுதாயத்தின் பொது சொத்து ஆக ஆளுமை செய்த அக்காலத்தில், தன்னுடைய உள்ளுணர்வை ("daimonion") மட்டும் மதித்து, இளைஞர்களிம் மனம் கவர்ந்த இந்த கள்வனை, இன்று நாம் மதிப்பதின் காரணம், இன்றும் அவரின் கோட்பாடுகள் உன்னதமாக கருதப்படுவதே.அவர் வாழ்ந்த காலத்தில், ஜனநாயகத்தின் நுணுக்கத்தை, உட்பொருளை, வினா-விடையாக விளக்கியவரை, சர்வ வல்லமை பொருந்திய அரசு வெறுத்தது, இன்றும் நடக்கக்கூடிய இழிவே. லிங்கனும், காந்திஜியும் சுடப்பட்டது போல, இவரும் தாக்கப்படுவார்; 2010ல் அதிகாரமையங்கள்  அவரை கொல்லும்.  

"மாடமாளிகைகளும், போர்க்கப்பல்களும், சிலை வரிசைகளும் இருந்து பயன் என்ன, மக்கள் அதிருப்தியுடன்  இருந்தால்? நேசமில்லா வாழ்வினால் யாது பயன்?” என்று வினா தொடுத்தார், அவர். சுவாசிக்கும் காற்று போல, அறிவை நாடுவதை போற்றினார், அவர். ஏதோ ஒரு ஞானி என்று முத்திரை குத்தி, அவரை விலக்காதீர்கள்.  ஒரு பாமர மனிதன், அவர். நேசமும், ஆற்றலும் தான் அவருக்கு முக்யம். தண்ணியும் போடுவார். சண்டையும் போடுவார். இந்த உலக புருஷன், மற்றவர்கள் மாதிரித்தான்.
ப்ளேட்டோவும், க்செனோஃபானும். அவருடைய வரலாறு எழுதும் போது, அவரின் வினாக்களை கோர்த்து அளிக்கிறார்கள்.
  1. வாழ்க்கையின் பொருள் என்ன?
  2. அவரவரது வாழ்க்கையின் பொருள் என்ன?
  3. எது மகிழ்ச்சி தருகிறது?
  4. எது நன்மை பயக்கிறது?
  5. எது நன்கடமை?
  6. எது நேசம்?
  7. நாம் வாழ்க்கையின் தரம் உயர்த்த என் செய்யவேண்டும்?
மறுபடியும் படியுங்கள். இன்று நம்மை எதிர்நோக்கும் வினாக்களே, இவை. எனவே, அவர் சொல்வது இன்றும் சாலத்தகும்.
எழுதப்பட்ட ஆவணங்களை பற்றியும், நேருக்கு நேர் பேசுவதின் வலிமையையும் அறிந்த அவருடைய பிரசித்தமான வினா: ரொட்டியும், கள்ளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எளிய விடை பெற்ற அவர்,’ நேர்மையானதும், உன்னதமானதும் எங்கு கிடைக்கும் என்று , மற்றவர் தடுமாற, ‘என்னிடம் வா’ என்றார்.  உங்களுக்கு காந்திஜீம் சத்தியப்பிரமாணம் நினைவில் வருகிறதோ! சாக்ரெட்டீஸ், ‘சொல்லின் பொருள் ஆராய்ந்து அறிக’ என்று அடிக்கடி சொல்வார். ‘புரிந்து செயல்படுக.’ என்பார். தர்க்கவாதம் அவருக்கு பிடிக்காது.(Rhetoric without truth was one of the greatest threats to the "good" society.)
“The Hemlock Cup: Socrates, Athens and the Search for the Good Life, by Bettany Hughes” என்ற இந்த நூலாசிரியர், ஏதென்ஸ்ஸின் ஏமாற்றத்தின் பலிகடா, சாக்ரெட்டீஸ் என்கிறார்.  ஆராய்ந்து நெறிப்படுத்தாத வாழ்க்கை பயனற்றது ("the unexamined life is not worth living" ) என்ற அவரின் வாதம் எந்த சர்வாதிகார அரசுக்குத்தான் பிடிக்கும்?
சலிப்பு தட்டுகிறதா? முடித்து விடுவோம்.  அவர்  வழக்கு மன்றத்தில், ‘ என் குற்றங்களுக்கு தண்டனை இல்லை. வதந்திகளும், வீண்பேச்சுகளும், உங்கள் முணுமுணுப்புகளும் என்னை குற்றவாளியாக சித்தரிக்கன்றன’ என்று கூறி, இன்முகத்துடன், சட்டத்தை நிறைவேற்றி தன்னை மாய்த்துக்கொண்டார். 
தமிழ்த்தேனி சொல்வது போல், ‘ஹூம்  எத்தனையோ  சாக்ரடீஸ்கள்!’
நன்றி , வணக்கம்,

இன்னம்பூரான்
21 10 2010

Socrates – a man for our times | Books | The Guardian.webarchive
1000K

Geetha Sambasivam Thu, Oct 21, 2010 at 5:30 PM


அற்புதமாக உங்கள் எண்ணத்தை வடித்திருக்கிறீர்கள். நன்றி பகிர்வுக்கு.
2010/10/20 Thamizth Thenee 

rajam Thu, Oct 21, 2010 at 7:17 PM

சலிப்புத்தட்டுமா? அதுவும் மிகச் சிக்கலான செய்திகளையும் தெளிவாகவும் எளிமையாகவும்
நீங்கள் விளக்கும்போது?
 நல்ல கருத்துக்களை எங்களுக்கு நாள் பூராச் சொல்லுங்கள்.
கேட்போம், நன்றியோடு.

அன்புடன்,
ராஜம்


On Oct 21, 2010, at 4:57 AM, Innamburan Innamburan wrote:
Subashini Tremmel Fri, Oct 22, 2010 at 12:19 AM


தேனீயார்,
இனிய பகிர்வு. நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு முறை சந்தித்து ஒலிப்பதிவு கருவியோடு சென்று என்ன சொன்னார் என்று பதிவு செய்து விடுங்கள். நெடுநாளாக திரு.இன்னம்பூரானின் திரு.வி.க பகுதி  போட்காஸ்ட் பகுதியில் விஷயங்கள் சேர்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அன்புடன்
சுபா
2010/10/20 Thamizth Thenee 


ஆராதி Fri, Oct 22, 2010 at 5:37 AM


திரு இன்னம்பூராரே

சாக்ரடீசையும் தமிழ்த்தேனையும் பிசைந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அருமை. அதற்கு நடுவில் I see Jean-Paul Sartre’s authenticity in his prayers to my wife, Vasanthaஇப்படி ஒரு வாக்கியத்தையும் இணைத்துள்ளீர்கள். ழான் போல் சார்த்தரையும் உங்கள் மனைவியையும் குறிப்படக் காரணம் என்ன. சற்று விரிவாகச் சொல்லுங்களேன்.

அன்புடன்
ஆராதி

2010/10/21 Innamburan Innamburan <innamburan@googlemail.com>


அஷ்வின்ஜி Fri, Oct 22, 2010 at 6:47 AM


திரு.வி.க என்ன சொன்னார்? யாராவது சோக்ரதர் புத்தகம் வைத்திருந்தால்
சொல்லுங்கள்.

சோக்ரதர் புத்தகத்தை யார் வெளியிட்டார்கள்?
மின்தமிழில் திரு நரசையா அவர்களின் கட்டுரை முன்பு வெளிவந்தது அதனை இங்கே
மீள் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
http://groups.google.com.sb/group/mintamil/browse_thread/thread/c9fdd5220553c42a?fwc=௧

-------------------------------------------------------------------------------------------------------------------

*லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி*

தம்து 83 வது வயதில் வெள்ளியன்று (12-06-09) காலமான திருமதி *லக்ஷ்மி*
தீரர்
சத்திமூர்த்தியின் ஒரே புதல்வி; 1925 ஜூலையில் பிறந்தவர்; திரு
கிருஷ்ணமூர்த்தி
93 அகவையைத்தாண்டியவர். கிருஷ்ணமூர்த்தி தம்பதியருக்கு மூன்று
குமாரர்கள்.

தீரர் சத்தியமூர்த்தியின் புதல்வி ஆகையால் ஆரம்ப காலத்திலிருந்தே
அரசியலில் ஆர்வ்மிருந்த்து. ஆனாலும் எந்த கட்சியிலும்
சேர்ந்திருக்கவில்லை
தமிழ் நாடு மேல் சபை உறுப்பினராக 1964 லிருந்து 1970 வரை பணியாற்றினார்.

1968 - 69 காலத்தில்  தமிழின்  மீது இருந்த ஆர்வமிகுதியால்,
தமிழுக்குச் சேவை செய்ய முன்வ்ந்தார்.
தம்து கணவ்ரின் துணையுட்னும், சிட்டியின் தூண்டுதலாலும், புக் வெஞ்சர்
என்ற ஒரு
அமைப்பைத் தொடங்கினார். அதன் மூல்மாக வாசகர் வ்ட்டம் என்ற அமைப்பை
உண்டாக்கி
சநதாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்கு
சலுகை
விலையில் நூல்கள் வழ்ங்கப்பட்டன. பதிப்பகத்தின் முதலீட்டுப் பொறுப்பை
லக்ஷ்மி
ஏற்றுக் கொண்டார்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ந்டைபெற்ற இச்சோதனை முயற்சி மூலம் வெளிவ்ந்த
நூல்களே அவரது முயற்சியின் அத்தாட்சியும் சாட்சியுமாகும்!:

இராஜாஜி எழுதிய *சோக்ரதர் *என்ற நூல் தான் முதலில் வெளியிட்ப்ப்ட்ட்து.
அதன்
சிறப்பு, இராஜாஜியே அதை வெளியிட்ட்து தான்!
coral shree Fri, Oct 22, 2010 at 7:10 AM


சுபா கண்மணி கருமமே கண்ணாயினார்.Innamburan Innamburan Fri, Oct 22, 2010 at 6:04 PM

1. அஷ்வின்ஜியின் குறிப்புக்கு நன்றி. அந்த நூல் என்னிடம் இருக்கிறது.
தேடவேண்டும். நான் ஒரு மூலையில் எழுதிவைத்த குறிப்பு: இராஜாஜியின்
'சோக்ரதர்'க்கு திரு.வி.க. வின் அணிந்துரை: '...கசிந்து கசிந்துருகிப்
பாடினோர் பாடலை, ஓதுவோரும் கசிந்து உருகுவது இயல்பே. இதை எழுதியபோது
ஆசிரியர் இராஜகோபாலர் தம்மை மறந்து சோக்ரதராக மாறியிருந்தார்...'

2. ஆராதிக்கு பதிலளிக்க, என் 1952 குறிப்பு ஒன்று
தேடிக்கொண்டிருக்கிறேன். பொறுத்தாள்க.

இன்னம்பூரான்

Innamburan Innamburan Thu, Oct 28, 2010 at 9:51 PM

T
     ஆராதிக்கு பிறகு பதில். இப்போது ‘ஒடெஸி’ , ‘இலியட்’எனப்படும் சிலப்பதிக்காரம், மணிமேகலை போன்ற அருமையான இரட்டைகாப்பியங்களை படைத்த, ஹோமர் என்ற கிரேக்க இலக்கிய கர்த்தாவுடன், காலசக்ரத்தை சுற்றி வளைத்து வந்து, உரையாடுவோமா! சுற்றி வளைப்பதாலும், எனக்கும் கொஞ்சம் தளர்வாக இருப்பதாலும், இன்று சிறிய அறிமுகம். மற்றவர்களுக்கு ஆர்வம் இருந்தால், வளர்த்தலாம். எங்கு போனாலும், எப்போது வேண்டுமானாலும் சாக்ரெட்டீஸ்சுக்கு திரும்பி வரலாம். அப்பிடி ஒரு ஆகுருதி அவருக்கு.
     எந்ததொரு காலகட்டத்திலும், நமது குறை/நிறை காணும் மக்களுக்கு பஞ்சமில்லை; அவர்கள் வாழும் நெறிகளை சொல்லியும் கொடுப்பார்கள்; அப்பேர்ப்பட்டவர்கள் இல்லையெனில், நம் மனசாட்சி கைகொடுக்கும் என்றார்,  ஜெஃப்ஃரி டேலர், பாரிஸ் அமெரிக்கன் அகாதமியில், ஜூலை 6, 2009 அன்று. பிறகு ஹோமருக்கு வருமுன், ஒரு பொன் வாக்கு, பெட்றார்க்கிடமிருந்து.
    
     “வாழ்க்கையின் பயணமோ துரிதம். எதற்கும் தயங்கி, தங்கிவிடாத ஓட்டமோ ஓட்டம்! வேகமாக தொடருவதோ சாவு!” (“L a vita fugge, et non s’arresta una hora, / et la morte vien dietro a gran giornate”)

     இதன் உள்ளுறை காண விழைபவர்கள், மெதுவாகத்தான் சுற்றி வளைத்து செல்லவேண்டும்.  பெட்றார்க் ஒரு நிகழ்வைக்கூறவில்லை. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிறார் என்று ஒரு வியாக்யானம். இல்லை. உனது பாதை கல்லும், முள்ளுமாக, புதரும் பூச்சியுமாக இருக்கும். அதையெல்லாம் கடந்து முன்னேற மற்றோர் கருத்துக்களை கவனி என்று பொருள் என ஒரு விமர்சனம். சொல்லப்போனா, இரண்டுமே நேரிடையாக கூற படவில்லை. ஹோமரை பார்த்த பிறகு தான் விளக்கம் தேட இயலும் என்க.
     ஐயோனியாவில் கி.மு. 9 அல்லது 8 நூற்றாண்டில் வாழ்ந்த ஹோமர் மேற்கத்திய கலாச்சாரத்துக்கு அடித்தளம் கோலினார் என்றால், மிகையல்ல. ஒடெஸி’யின் சாராம்சம்: ஆசியா மைனர் பகுதியில் இருக்கும் ட்ரோஜன்களுடன் ஏழு வருடங்கள் போர் புரிந்தபின் வெண்ற மன்னன் ஓடிஸ்ஸ்யெஸ் தன்னுடைய தீவு நாடாகிய இத்தாக்காவுக்கு, கப்பலேறி வருகிறார். அவருக்காக, அங்கு காத்திருப்பது ராணி பெனெலோப். இவர் உயிருடன் திரும்புவாரா என்று கூட அவளுக்கு தெரியாது. வழியில் என்னே ஆபத்துக்கள் - ஒத்தைக்கண் இராக்கதன் ஸைக்ளோப்ஸ்,  மனிதருண்ணும் லைஸ்த்றிகான்ஸ்,  சைரன் என்ற மகளிர் அணி, வகையறா. அதையெல்லாம் தாண்டி வந்து பெனெலோப்பின் ஆசை நாயகர்களை கொன்று குவித்து, பற்பல இன்னல்களை கடந்து அரியணை ஏறுகிறார், மன்னர் ஓடிஸ்ஸ்யெஸ். அவரை தந்திரக்காரனாகவும், வீராதி வீரனாகவும், கனவானாகவும் சித்திரிக்கிறார், ஹோமர். கடவுளாரை நாடும் அவர் வாகை சூட, தன்னிச்சையாகவும் செயல் பட்டவர். கொஞ்சம் ராமாயணம், மஹாபாரதம் போல இருக்கிறது அல்லவா! நம் போல கிரேக்கர்களும், ஒடெஸியை, வாழ்வின் கண்ணாடி என்றும், ஞானச்சுடர் என்றும் கருதினர். [டயர்ட்]
(தொடரும்)
இன்னம்பூரான்
28 10 2010

coral shree Fri, Oct 29, 2010 at 10:56 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றி அய்யா. முத்து முத்தான எழுத்துக்கள்......படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது. கொஞ்சம் ஓய்வு.....பின்பு வாருங்கள் அய்யா ....மேலும் சொல்ல.....காத்திருக்கிறோம்.