Google+ Followers

Saturday, May 17, 2014

இனி ஆவன செய்வோம்: 3

இனி ஆவன செய்வோம்: 3

இன்னம்பூரான்
17 05 2014
இன்று தன் பதவியை ராஜிநாமா செய்த பிரதமர் மன்மோஹன் சிங் கடைசி முறையாக மக்களை நோக்கி பகர்ந்த ஆங்கில உரையை இணைத்துள்ளேன்; மொழி பெயர்க்க வில்லை. நம் அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் என் மதிப்புக்குரியவரல்ல. நான் மிகவும் மதிக்கும் public intellectual இவர். Ineffectual அரசியலர் ஆக அவர் ஆனது துரதிர்ஷ்டமே.
அவருடைய உரையின் சாராம்சம்: 
ஆய்ந்து அலசும் தன்மையை கருவியாகவும், உண்மையை கலங்கரை விளக்காகவும், உகந்ததை செய்யும் திறன் நாடும் பிரார்த்தனையாகவும் உறுதுணையாக வைத்துக்கொண்டு, பத்து வருடங்கள் முன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். ஆண்டவனின் தீர்ப்பு ஒரு நாள் வரும். அதற்கு முன் மக்கள் மன்றத்தின் தீர்ப்பு. நேற்றைய தீர்ப்பை நீங்களும், நானும், எல்லோருமே மதிக்க வேண்டும். அது ஜனநாயகத்தின் அஸ்திவாரத்துக்கு தும்சு கட்டை போட்டுள்ளது. என் வாழ்க்கையும், பதவி ஆளுமையும் திறந்த புத்தகம். நான் நாட்டு நலனுக்கு என்னால் இயன்றவரை உழைத்தவன்.
 கடந்த பத்து வருடங்களில் நம் நாடு பல சாதனைகளை புரிந்துள்ளது. உங்கள் சாதனை அது. நாம் மேலும் உன்னதம் அடையமுடியும். கடுமையான உழைப்பு தேவை. அகதியாக வந்த என்னை பாரதமாதா அரவணைத்து முன்னிறுத்தினாள். அவளுக்கு நான் என்றென்றும் கடமை பட்டுள்ளேன். பழமையும் புதுமையுமாக, ஒன்றி வாழும் வேற்றுமை என்ற அதிசயமான நாம் உலகை வழி நடத்த முடியும்.
புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள்.
இனி ஆவன செய்வோம்: 3
நாம் மேற்படி உரையை மென்மையாக, பெருந்தன்மையுடன் அணுகவேண்டும். எனவே, ஏகதேசமாக கண்ணியமானவர் என்று புகழ் அடைந்த அவருக்கு ஆண்டவன் மன நிம்மதியையும், உடல் நலத்தையும் அளிக்கட்டும். அவருடைய உண்மையான உழைப்புக்கு, அது விழலுக்கு இறைத்ததாக ஆயினும், வந்தனம் செலுத்துவோம். ‘நாம் மேலும் உன்னதம் அடையமுடியும். கடுமையான உழைப்பு தேவை.’ என்றதை ஏற்றுக்கொள்வோம்.
ஆகஸ்ட் 15, 1947 அன்று ‘We have tryst with Destiny...’ என்ற இறவா வரம் பெற்ற சொற்பொழிவுக்கு முன், திரு. மன்மோஹன் சிங் உரைத்தது பாலை நிலத்து கூழாங்கற்களை குலுக்கியது போல. சாரமற்றது. அவரால் வேறு ஒன்றும் சொல்ல இயலாது. அவரை டிஸ்மிஸ் செய்தது மக்கள் அல்ல. அவருடைய புகழையும், உழைப்பையும் கபளீகரம் செய்த ராஜீவ் காந்தி குடும்பமும், அதற்கு ‘பூம் பூம்’ மாடாக வந்து அடி வருடிய காங்கிரஸ் கட்சியும் தான் அந்த கைங்கர்யத்தை செய்தன. ஊடுருவியாக உள் புகுந்து, மார்பில் பாய்ந்த வளர்த்த கடா’ ஆகிய கூடாநட்பு தோழமை கட்சிகளும், காங்கிரஸ் கட்சியினரும். எரிந்த வீட்டீல் எல்லாரும் அகப்பட்டதை சுருட்டின -2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு, ஓட்டப்பந்தயம் ஆக எண்ணற்ற கொள்ளைகள்.
திரு. மன்மோஹன் சிங் அந்த ஈனச்செயல்களை இத்தனை வருடங்களாக ஏன் பொறுத்தார்? கைநாட்டுச் சிறுவன் வசையை ஏன் ஜீரணம் செய்தார்? டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, தான் நன்கு அறிந்து டாக்டர் பட்டம் பெற்ற பிரிட்டீஷ் நாடாளுமன்ற நற்பண்பு உத்தியை, தரம் கெட்ட இந்திய நாடாளுமன்ற அங்கத்தினர்கள், சோனியா முதல், ஆதாய பொறுப்புகளை வகிக்கலாம் என்ற வகையில் துஷ்பிரயோகம் செய்ய இருமுறை ஏன் பரிந்துரைத்தார்? அண்மையில், உச்ச நீதி மன்றத்தின் கண்ணியமான தீர்ப்பை நீர்மையாவதற்கு, தன்னிடம் பணி புரிந்து, பின்னர் ஜனாதிபதியான ப்ரணாப் முக்கர்ஜி அவர்களிடம் ஏன் வாங்கிக்க்கொண்டார்? ஒன்றுக்கும் பதில் இல்லை. அவர் ‘திறந்த புத்தகம்’ எழுதுவாரா என்பதே கேள்விக்குறி.
நான் மிகவும் மதிக்கும் ஒருவரை இவ்வாறு விமர்சனம் செய்ததற்கு, நான் என்னிடமே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். 
சித்திரத்துக்கு நன்றி: http://sheetmusicdb.net/demonoten/9012410.gif
*******
“My Fellow Citizens,
I address you today for the last time as Prime Minister of India.
Ten years ago, when I was entrusted with this responsibility, I entered upon it with diligence as my tool, truth as my beacon and a prayer that I might always do the right thing.
Today, as I prepare to lay down office, I am aware that well before the final judgment that we all await from the Almighty, there is judgment in the court of public opinion that all elected officials and governments are required to submit themselves to.
Fellow citizens, each one of us should respect the judgement that you have delivered. The just concluded elections have deepened the foundations of our democratic polity.
As I have said on many occasions, my life and tenure in public office are an open book. I have always tried to do my best in serving this great nation of ours.
In the last ten years, we as a country have seen many successes and achievements that we should be proud of. Today, India is a far stronger country in every respect than it was a decade ago. I give credit for these successes to all of you. However, there is still vast latent development potential in our country and we must collectively work hard to realize it.
As I leave office, my abiding memory will be the love and kindness that I have always received from you. I owe everything to this country, this great land of ours where I, an underprivileged child of Partition, was empowered enough to rise and occupy high office. It is both a debt that I will never be able to repay and a decoration that I will always wear with pride.
Friends, I am confident about the future of India. I firmly believe that the emergence of India as a major powerhouse of the evolving global economy is an idea whose time has come. Blending tradition with modernity and unity with diversity, this nation of ours can show the way forward to the world. Serving this nation has been my privilege. There is nothing more that I could ask for.
I wish the incoming government every success as it embarks on its task and pray for even greater successes for our nation.

Thank you. Jai Hind.”