Sunday, May 18, 2014

மும்மணிக்கோவை 2014: 1

மும்மணிக்கோவை 2014: 1


இன்னம்பூரான்
18 05 2014

பழையன அறவே கழிந்து, புதியன அதிர புகவே.
இழைகளெல்லாம் பொங்கும் அறிவுரைகள்.
அழையா விருந்தினர் (யான் உட்பட) தயங்கி உரைக்க,
கழைக்கூத்தாடிகளும் குரல் எழுப்ப...

மத்திய அரசும் மாநில அரசும், இந்த ‘மும்மணிக்கோவை 2014’க்கு  செவி சாய்த்து, கருத்து அறிந்து, செயலில் வீரமும், தீரமும், பணிவும், ஆக்கத்தையும் காட்ட, உன்னருள் நாடி நின்றேன், பாரதமாதாவே. சங்கத்தமிழ் அறநூல்களும், வடமொழி ஸுபாஷிதங்களும், எவ்விடத்து தர்ம சாத்திரங்களும் துணைக்கு வர அருள் புரிவாய், தேவீ.

இனி ஒரு வரி பரிந்துரைகள்.

நீதி சதகம்:

கருப்புப்பண ஒண்டுக்குடித்தனமாகி விட்ட ரூபாய் நோட்டுகளில் அண்ணல்  காந்தியின் சித்திரம் போடவேண்டாம். (1.1)

வைராக்ய சதகம்:

பிரதமரும், முதல்வர்களும், வத்ஸ்ராயணம் செய்தெடுத்த அமைச்சரவைகளுக்கு Sir Ivor Jennings பரிந்துரைத்த வகையில் தலைமை தாங்கவேண்டும். (2.1)

சிருங்கார சதகம்:

மக்களை காதலி. (3.1)

தொடரும் & தொடருக.


சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/9/9d/Palm_leaf_manuscript.png

No comments:

Post a Comment