Tuesday, April 8, 2014

சுடச்சுட:வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 4


சுடச்சுட: சோனியா மாமிக்கு ஆட்டம் காட்ட வந்த ஆம் ஆத்மி  நீத்பதி ஃப்க்ருத்தீன் ( ஓய்வு) வாபஸ் !!!!!!!!!!!!!!!!!!!



வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 4

இன்னம்பூரான்
08 04 2014

தேர்தல் காலகட்டத்திலே தேர்தல் கமிஷன் ‘ஒரு நாள் ராசா’. குடியரசுக்காக தொண்டு செய்யும் அதிகார மையமது. கடந்த இரு தேர்தல்களிலும், தற்பொழுதும் அவர்களின் பற்றற்ற தொண்டை கண்டு வியந்திருக்கிறேன். தமிழக போலீஸ் தலைகள் இரண்டும் ( டீ.ஜீ & சென்னை கமிஷனர்) உருண்டன. சில கலைக்டர் தலைகளும். மேற்கு வங்களாத்தில் மமதா மாமி முடியாது என்று முரண்டு பிடிக்கிறார். மமதையோ !? ப.சி.யின் மகனார் கார்த்திக் என்ற இளைய தலைமுறை பெருந்தகைக்கு சிக்கல். ப.சி. பழுத்த சிற்பி அரசியலில். ரொம்ப நல்லா பேசுவாரு. பட்....!
கார்த்திக் தன் சொத்துப்பத்தை பற்றி உண்மை உரைக்கவில்லை என்று வருமான வரி உயர் அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். எனினும், கார்த்திக் வேட்பாளராக ஏற்கப்பட்டு விட்டாலும், கதை தொடரலாம். இந்த புகார் தேர்தல் முடிவை பாதிக்காது என்று என் ஊகம். மக்கள் வாக்கு வாங்கியவர்களில் பலர், இது வரை, அவர்களின் யோக்யதையை பொறுத்து வாக்கு வாங்கவில்லையே. சில வேட்பாளர்களின் சொத்தும் பத்தும் புடலங்காய் கொடியை போல் வளருவதை பார்த்து பொறாமை படுவோம். வேட்பாளர்கள் தன் செல்வ நிலையை பற்றி சத்தியம் செய்து ஒரு அறிக்கை தாக்கல் செய்ய வேணும். அதுவே மூலம்.
‘பிரதிநித்துவம் ஒரு பணங்காய்ச்சி மரம்’: ஜாபிதா
  1.   2009 ல் 5.91 கோடி சொத்து அறிவித்த திரு.ஜகத்ரக்ஷகன் இப்போது அது 78.04 கோடி என்கிறார்.
  2. அதே காலகட்டத்தில் திரு. தயாநிதி மாறன்: Rs 3.66 crore to Rs 10.93 crore. ஓ! மும்மடங்கா! அவருக்கு சொத்து குவிந்த விதம் பற்றி பல புகார்களுண்டு.
  3. புதுச்சேரி வாசாலகர் திரு. வி.நாராயணசாமி அவர்களும் மும்மடங்கர்.
  4. அருணாசல பிரதேசத்தின் 152 வேட்பாளர்களில் 91 பேர்கள் கோடீஸ்வரர்கள்.
  5. மறுபக்கம்: 90 வயதிலும் புகழ் தணியாத சான்றோன், வி.எஸ். அச்சுதானந்தன் -மார்க்ஸ்சிஸ்ட் &  காங்கிரஸ்ஸை சார்ந்த ஏ.கே. அந்தோனி. இருவருக்கும் கை சுத்தம் என்ற புகழ். இருவருடைய ஸ்டைல் வேறு; இருவருக்கும் மக்களிடம் நல்ல செல்வாக்கு. செல்வம் இல்லையேல் செல்வாக்கு வரும். என்ன சொல்றேள்?


சித்திரத்துக்கு நன்றி: http://www.vinavu.com/wp-content/uploads/2013/01/paid-news-cartoon.jpg

No comments:

Post a Comment