Tuesday, November 5, 2013

கல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6

>


அன்றொரு நாள்: நவம்பர் 6 கல்லும் கரைந்த கதை

Innamburan Innamburan 6 November 2011 17:19

கல்லும் கரைந்த கதை:அன்றொரு நாள்: நவம்பர் 6



அன்றொரு நாள்: நவம்பர் 6
கல்லும் கரைந்த கதை
கல்லையும் போட்டார். அதை கரைத்தும் கொடுத்தார்.
Was he the Pied Piper of Hamelin? அல்லது மகுடியூதி மயக்கிய பிடாரனா, இந்த பிச்சுக்குப்பன்? காலை 6:30 மணிக்கு 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, ஊர் எல்லை கடந்தார். சுட்டுப்புடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள், வியப்புடன், இந்த இரண்டுங்கெட்டான் படையை முறைத்து பார்த்தனர். வாளாவிருந்தனர். வழி நெடுக விருந்தோம்பல். சாயும் வேளை. கிட்டத்தட்ட 5000 பேர். ராத்தங்க முகாம் தயாரிக்கும்போது, கைது செய்தார்கள். உடனே ஜாமீனில் விடுதலை. இது ஆரம்ப கட்டம். ஒரு உரையாடல், அதற்கும் முன்னால்.
*
‘என்னிடம் யாது குறை? எனக்கு சிறை செல்ல தகுதி இல்லையா?’
‘சரி, உன் இஷ்டம்,’
*
சட்டத்தை மீறி, எல்லை கடந்து, சில பெண்கள் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து நேட்டாலுக்கு விஜயம். அவர்களை அரசு கைது செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து, மேற்படி உரையாடலுக்குப் பிறகு, சில ஃபீனிக்ஸ் குடியிருப்பு பெண்கள் ட்ரான்ஸ்வாலுக்கு பயணம். கைதாயினர், அவளும் உள்பட.நேட்டாலில் புகுந்த பெண்கள் ந்யூகேஸ்சில் நிலக்கரி சுரங்கபூமிக்கு சென்று, அடிமையாகாத தொழிலாளிகள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, சுரங்கத்தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்ய சொன்னார்கள். அந்த பெண்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொதி நிலை. அருமையாக போற்றி வளர்த்தத் தங்கள் பெண்ணினம் பட்ட அவதியை கண்டு இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். அடிமைகள் தொழிலாளிகளுடன் இணைந்தனர். சூத்ரதாரியும் பிரசன்னம். அவர்களை, சுரங்கத்தை விட்டு விட்டு தன்னுடன் பிராந்தியம் கடந்து, சிறை செல்ல ஆயத்தமாக வரச்சொன்னார். அவர்களும் சம்மதித்தனர். இந்த காலகட்டத்தில் தான் கைது/ஜாமீன்.
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
அந்த கைது/ஜாமீன் எல்லாம் பாசாங்கு. அவரை என்ன செய்வது என்று தான் அரசுக்கு புரியவில்லை. எட்டாம் தேதி, மறுபடியும் சிறையடைக்கும் படலம். மாஜிஸ்ட் ரேட் ஆணை. ‘ஓஹோ! எனக்கு பிரமோஷன்!’ என்று ‘நறுக்’ ஜோக் அடித்தார். மறுபடியும் ஜாமீன். மறுபடியும் யாத்திரை. ஐயாவை கைது செய்தால், பின் தொடருபவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஊஹூம்! வன்முறை வந்தால் தாக்கலாம் என்று பார்த்தார்கள். ஊஹூம்! அண்ணல் சொன்னதால், அமைதி; பூரண அமைதி. ‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் காரியதரிசியிடம், ‘ஜெனரல் இந்த அபாண்ட வரியை தள்ளுபடி செய்தால், நான் சட்டத்தை மீறும் இந்த யாத்திரையை நிறுத்தி விடுவேன்’ என்றார். அவர்கள் ‘உன்னால் ஆனதை பார்’ என்று சொல்லி, அந்த பேச்சை கடாசி விட்டார்கள். 9ம்தேதி மூன்றாம்முறை கைது. 11ம் தேதி 9 மாத கடுங்காவல் தண்டனை. மூன்றே நாட்களில் மற்றொரு குற்றச்சாட்டு. + 3 மாதம். கூட்டாளிகளும் கைது. தொழிலாளிகள் கட்டி இழுத்து ரயிலில் போடப்பட்டு திருப்பப்பட்டனர். அவர்கள் சிறைப்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆள்? அதனால், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊஹூம்!  அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு தோன்றியது. நன்கொடையும், உதவியும் வந்து குவிந்தது. ஏன்? இந்தியாவின் வைஸ்ராயே தென்னாஃப்பிரிக்க அரசின் போக்கைக் கண்டித்தார். எல்லா தென்னாஃப்பிரிக்க சுரங்கங்களிலும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம். ஆயிரக்கணக்காக சிறையில். ராணுவம் மக்களை சுட்டுத் தள்ளியது. அண்ணல் காந்தி சொல்கிறார், ‘தென்னாஃப்பிரிக்க அரசு விழுங்கிய எலியை முழுங்கவும் முடியாமல், உதறவும் முடியாமல் இருக்கும் பாம்பு போல் தவிக்கிறது’. அப்படி தவித்த ஜெனெரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார். என்ன பிரயோஜனம்? இந்தியர்கள் சத்யாக்ரஹிகளை விடுதலை செய்யவேண்டும் என்றனர். இந்த விசாரணை கமிஷனில் ஒரு இந்திய தரப்பு (வெள்ளையனாக இருந்தாலும்) அங்கத்தினர் வேண்டும் என்றனர். ‘எலி விழுங்கிய’ ஸ்மட்ஸ் முடியாது என்றார். 1914 வருட புத்தாண்டு தினத்தில் மாபெரும் வேலை நிறுத்தம் என்று பிரகடனம் செய்தார், காந்திஜி.
இங்கு தான் முதல்முறையாக, காந்தீயம் தலையெடுத்து, ஜெனெரல் ஸ்மட்ஸ்ஸின் கல்மனதை கரைத்தது. அதே சமயத்தில், தென்னாஃப்பிரிக்காவே ஒரு ரயில் வேலை நிறுத்தத்தால் தவிக்க நேரிட்டது. காந்திஜி தன்னுடைய சத்யாக்கிரஹத்தை ஒத்தி வைத்தார், உன் இன்னல் என் ஜன்னல் அல்ல என்றார். ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி காந்திஜியிடம்: ‘ நீங்கள் எங்கள் கஷ்டகாலத்தில் கை கொடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது எப்படி கை வைக்க முடியும்? நீங்கள் வன்முறை பாதையில் சென்றால், உங்களை கையாளும் விதம் எங்களுக்கு தெரியும். நீங்களோ தன்னையே ஆஹூதி செய்து வெற்றி காண்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?’
ஜெனெரல் ஸ்மட்ஸும் காந்திஜியும் பேசிக்கொள்கிறார்கள். கடிதப்போக்குவரத்து வேறே. பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்தன. அபாண்ட வரி தள்ளுபடி. கிருத்துவ முறை அல்லாத விவாகங்களை சட்டம் அனுமதித்தது. ( இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்.) ‘என் கடன் முடிந்தது’ என்று 20 வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார், காந்திஜி. ஒரு மாபெரும் சத்திய சோதனைக்கு பிறகு. பிற்காலம், இந்தியாவின் விடுதலை வாங்கிக்கொடுத்தது அதுவல்லவா. 
இந்தியாவுக்கு திரும்பும் முன், காந்திஜி ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு, தான் சிறையில் தைத்த ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தார். பல வருடங்களுக்கு பின்னால், ஸ்மட்ஸ் கூறியது, “ பல வருடங்களில் வேனில் காலத்தில் நான் அந்த காலணிகளை அணிந்துள்ளேன். ஒரு மாமனிதரின் காலணிகளில் நிற்க எனக்கு தகுதி உண்டா என்று தான் நினைத்துப்பார்ப்பேன்.’
இது தான் கல்லும் கரைந்த கதை.
இன்னம்பூரான்
06 11 2011
last-spike.preview_0.jpg
1913 Mohandas Gandhi was arrested while leading a march of Indian miners in ...
1913-passive-resisters.jpg
Indian women join Gandhi's passive resistance campaign
உசாத்துணை:
This biography was written by Roberta Strauss Feuerlicht and is reprinted here with the permission of the copyright holder.

Geetha Sambasivam 7 November 2011 01:40


 இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்//
இதையும் எழுதுங்க.  தெரிந்த கதை என்றாலும் விபரங்கள் இத்தனை தெளிவாய்த் தெரியாது; பகிர்வுக்கு நன்றி.  


Innamburan Innamburan 7 November 2011 05:45
To: mintamil@googlegroups.com
நன்றி, எழுதுகிறேன், விரைவில், Indian women join Gandhi's passive resistance campaign என்ற படத்தில் இருப்பவர்களின் நடை, உடை, பவனையை பார்த்த்தால், அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஏழை பாழைகள் என்று தோன்றுகிறது.


Innamburan Innamburan 7 November 2011 06:33
To: mintamil@googlegroups.com
Published: November 7, 2011 09:04 IST | Updated: November 7, 2011 09:09 IST

Glass’ meditation on Gandhi returns to Met
PTI

pastedGraphic.pdf
AP In this Nov, 3, 2011 photo provided by the Metropolitan Opera, Richard Croft performs in the role of Gandhi in Philip Glass' "Satyagraha," during a rehearsal at the Metropolitan Opera in New York.

Satyagraha, Philip Glass’ at times magical, and at times maddening, meditation on the early career of Mahatma Gandhi, is back at the Metropolitan Opera where it enjoyed a triumphant run three years ago.
Whatever one’s reservations about the musical side of things, this is a production that should be seen for the brilliance of the staging by Phelim McDermott and Julian Crouch.
Friday night’s revival featured most of the same cast as in 2008, including the sweet-voiced tenor Richard Croft as an eloquent Gandhi and soprano Rachelle Durkin as his stalwart secretary. Dante Anzolini, a frequent Glass collaborator, was again the conductor.
More oratorio than opera, Satyagraha depicts episodes from Gandhiji’s time in South Africa during the years 1896 to 1913 as a young lawyer protesting British tyranny. But it defies expectations of traditional plot or chronology: Instead of following a straightforward narrative, we glimpse moments from his life frozen in front of our eyes.
The libretto, adapted by Constance DeJong from the Bhagavad Gita, is sung in the original Sanskrit. The title, too, is Sanskrit, roughly translated as “truth force,” the term Gandhi used to describe his movement of non-violent resistance.
This distancing of the audience from the words is deliberate. As Glass says in a program note, “without an understandable text to contend with ... the weight of ’meaning’ would then be thrown onto the music, the designs and the stage action.”
Keywords: Metropolitan Opera concertconcert on GandhijiSatyagrahaPhilip Glass
காப்புரிமை & நன்றி: ஹிந்து இதழ் அப்டேட்: 07 11 2011

கி.காளைராசன் 7 November 2011 06:45

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

உங்களது ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் உண்மை நிகழ்வுகளை உள்ளடிக்கியதாக உள்ளன ஐயா,

இதெல்லாம் தங்களைப்போன்றோர் எங்களுக்குச் சொன்னால்தான் உண்டு.

நன்றி ஐயா,


‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் 

கோட்சே போன்ற ஒருவனை அடையாளம் கண்டு அவன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுக்கத் தெரியாதவர்.  எனது பார்வையில் இவரும் ஒரு காந்தியே.


-- 
அன்பன்
கி.காளைராசன்

Nagarajan Vadivel 7 November 2011 06:48

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நான் குளு நட்டால் சென்று இந்தப் போராட்டத்தில் சிறுவனாகக் கலந்துகொண்த 95 வ்து முதியவரிடம் பேசினேன்.  காந்தியார் பல போராட்டங்களை நடத்தினாலும் இந்தியப் பாரம்பரியத் திருமணத்துக்கு எதிரான சட்டம் இந்தியர்கள் அனைவரையும் இணைத்தது.  குறிப்பாகப் பெண்களை வீறுகொண்டெழச் செய்தது என்று குறிப்பிட்டார்.  காந்தியார் நடத்திய போராட்டங்களில் பெண்களை அனுமதித்ததில்லை என்றும் திருமணம் தொடர்பான போராட்டம் என்பதால் முதன் முதலாக இந்த நடைப் பயணத்தில் பென்களுக்கு அனுமதி கொடுத்ததாகவும் முன்னணியில் நின்ற மூன்று பெண்கள் அன்னை கஸ்துரிபா காந்தி, பதினாறு வயது நிரம்பாத தில்லையாடி லள்ளியம்மை மற்றும் அவளின் அன்னை ஆகியோர்.  இந்த நடைப் பயணத்தில்தான் தில்லையாடிவள்ளியம்மை தென்னாப்ரிக்காவின் காவல்துறை அலுவலர் இந்தியா என்ற நாட்டுக்குச் சொந்தக் கொடிகூடக் கிடையாது என்று கூறியவுடன் சேலைத் தலைப்பைக்  கிழித்து இதுவே எம் நாட்டின் கொடி என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார்.  பெண் சக்தியின் பெருமையையும் வலிமையையும் காந்தியார் அறிய வாய்ப்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வே காந்தியாரின் இந்திய விடுதலைக்கு மக்கள் சக்தியைக் குறிப்பாகப் பெண் சக்தியை பயன்படுத்த உறுதுணையாயிற்று என்று குறிப்பிட்டார்
குளு நட்டாலில் வாழ்ந்தவர்களின் முன்னோர் தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.  தஞ்சையிலும் மற்ற நெல்விளையும் லபூமியிலும் மழை பொய்த்த காரணத்தால் தென் ஆப்ரிக்கவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்
குளு நட்டாலில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் இந்தியாவின் மாபெரும் விடுதலைப் போரட்டத்துக்கான விதையை விதைத்த அந்நிலத்தில் காலடி வைத்ததைப் பெருமையாக எண்ணுகிறேன்

2011/11/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நன்றி, எழுதுகிறேன், விரைவில், Indian women join Gandhi's passive resistance campaign என்ற படத்தில் இருப்பவர்களின் நடை, உடை, பவனையை பார்த்த்தால், அவர்கள் தமிழகத்தை சேர்ந்த ஏழை பாழைகள் என்று தோன்றுகிறது.
இன்னம்பூரான்



Innamburan Innamburan 7 November 2011 07:04

நன்றி. திரு.காளைராஜன். நீங்கள் எல்லாரும் படிப்பது தெரிந்தாலே ஒரு ஊக்கம் தான். அநேக நாட்களில், படித்தவர்களின் கருத்துத் தெரியவில்லையே என்று கவலை பட்டிருக்கிறேன். வாசகர்களுக்கு ஆர்வமில்லாவிட்டால், நான் அதை எழுதுவது இல்லை. இன்று பாருங்கள்.
 பேராசிரியரே!நன்றி. மேலதிக பாமரகீர்த்தி விவரங்கள் தந்ததிற்கு. ஒரே நாளில் அந்த விவாக விவரங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. அதான். நான் தேடிப்பிடித்து போட்ட ஃபோட்டோவில் இருப்பது தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன். பல மணி நேரம் தேடியும், எனக்கு ஆதாரம் கிட்டவில்லை. அந்த பெரியவரை கேட்டுச் சொல்லுங்கள். எனக்கு ஆத்மதிருப்தியாகும். இன்று ஒரு தகவலை சேர்த்திருக்கிறேன்.
[Quoted text hidden]

கி.காளைராசன் 7 November 2011 07:31

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்
2011/11/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நன்றி. திரு.காளைராஜன்.

அடியேனுக்கு ஒரு சிறு விண்ணப்பம்.
”தம்பி” காளை.

நீங்கள் எல்லாரும் படிப்பது தெரிந்தாலே ஒரு ஊக்கம் தான். அநேக நாட்களில், படித்தவர்களின் கருத்துத் தெரியவில்லையே என்று கவலை பட்டிருக்கிறேன்.

“இ“றைவன் உயிர்களைப் படைக்கிறான்.  ஆனால் அத்தனை உயிர்களும் இறைவனை அறிகின்றனவோ!
அதுபற்றி ”இ“றைவன் கவலை கொள்ளலாமோ?

வாசகர்களுக்கு ஆர்வமில்லாவிட்டால், நான் அதை எழுதுவது இல்லை.
சில உயிர்கள் “இ“றைவனை மறந்தாலும், “இ“றைவன் அவனது படைப்பை நிறுத்துவானோ?!

அதீதமான படைப்பாற்றல் உங்களிடம் உள்ளது.  அதை அன்புள்ளம் கொண்டு தொடர்ந்து எழுதிக்கொண்டே “இ“ருக்க வேண்டுகிறேன்.


--
அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,



No comments:

Post a Comment