Google+ Followers

Monday, September 9, 2013

'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்... [2]


'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...

Innamburan S.Soundararajan Tue, Sep 10, 2013 at 11:13 AM'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
(தொடரும்)


தேமொழி Tue, Sep 10, 2013 at 11:45 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
On Monday, September 9, 2013 10:43:57 PM UTC-7, இன்னம்பூரான் wrote:

'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...


சூப்பர் ட்ரைலர்.....


..... தேமொழி
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel Tue, Sep 10, 2013 at 11:53 AM

இந்த வரிசையில் எங்களுக்கு "இந்திரா" காந்தி, "ராஜீவ்" காந்தி "சோனியா" காந்தி "ராகுல்" காந்தி தெரியும்

'அண்ணல்' காந்தி தெரியலீங்களே 

வவ
[Quoted text hidden]

Dhivakar Tue, Sep 10, 2013 at 12:02 PM

லஞ்சம் எனும் வரிசையில் காந்திகளை வைத்துப் பார்ர்க்கும்போது அண்ணல் காந்தி எப்படி கண்ணுக்குத் தெரிவார்?
[Quoted text hidden]
--
Dhivakar
[Quoted text hidden]

கி.காளைராசன் Tue, Sep 10, 2013 at 8:55 PM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

On Tue, Sep 10, 2013 at 11:13 AM, Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> wrote:

'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
(தொடரும்)
படித்தமாத்திரத்திலேயே
வருந்துகிறேன்.
வாதி, பிரதிவாதி இருவரையும் விசாரித்த பின்பே ஒருவர் மேல் மற்றவர் குற்றம் சொல்ல முடியும்.

கொலை செய்விக்கப்பட்ட ஒருவரைப் பற்றி, 
தன்னிலை விளக்கம் அளிக்க அவர் உயிருடன் இல்லாத நிலையில்,
இந்த வார்த்தைகளைப் படித்து வருந்துகிறேன்.

உயிரோடு இருப்பவர் மேல்,
அதுவும் அவர் பதில் அளிக்கும் மனநிலையில் இருந்தால் மட்டுமே அவர்மீது குற்றம் சாட்ட நாம் தகுதி பெற்றவராவோம் என்று கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
[Quoted text hidden]

Pandiyaraja Tue, Sep 10, 2013 at 9:13 PM

அன்புள்ள ஐயா,
என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரியவில்லை. முழுவதும் தெரிந்த பின்னர்தான் எதுவும் சொல்லமுடியும். இருந்தாலும் தலைப்பு திகைக்கவைக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்.
ப.பாண்டியராஜா


Subashini Tremmel Tue, Sep 10, 2013 at 11:24 PMOn Tue, Sep 10, 2013 at 7:43 AM, Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> wrote:
'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
(தொடரும்)

??? என்ன இது? விஷயமில்லாமல் வெறும் தலைப்பு மாத்திரம் .. அதுவும் இந்திய தேசத்தந்தையை குற்றம் சொல்லும் வகையில்? ஏன் இந்த முயற்சி?

சுபா 


 
[Quoted text hidden]


Innamburan S.Soundararajan Tue, Sep 10, 2013 at 11:47 PM

'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்... [2]நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல சிலர் தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டால் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையோர்களில் ஒருவர் தான் 'அண்ணல்' காந்தி . ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று:லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். அவற்றின் கரு 'அண்ணல்' காந்தி உருவெடுத்த தினம். சுபாஷிணியின் சினம் புரிகிறது. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ஒரு அன்பளிப்பு நஞ்சாகி விட்ட சமாச்சாரம். முழுதும் எழுதி விட்டால், சுபாஷிணியின் சினம் தணிந்து விடும். அண்ணல் என்ற சொல், அடைப்புக்குள் இருப்பதால், நான் மஹாத்மா காந்தியை பற்றி இதை எழுதவில்லை என்பது தெளிவு. முழுதும் எழுத முடியவில்லை. கை வலி. நேரமின்மை. இப்போதே நடு நிசி நெருங்குகிறது. எனக்கும் உறக்கம் வரப்போவதில்லை. காலை 5 மணிக்கு எழுந்தால் தான் அலுவல்களை கவனிக்க முடியும்.
பொறுத்தாள்க.


(தொடரும்): 24 09 2013 அன்று.

இன்னம்பூரான்