Wednesday, July 17, 2013

அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்




அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்

அப்டேட்.
நான் சொன்னதை யாரும் புரிந்து கொள்ளவில்லை, பார்த்தீர்களா? அவர்கள் சொன்னதிலும் உண்மை உளது.
இன்னம்பூரான்
17 07 2013

Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 6:18 AM




அன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்.
     கஃபூர் என்னை தள்ளிவிட்டான்! அவனுடைய வாப்பா ஜனாப் மஜீத்கான் ‘நீயும் கறி சாப்பிடு ராஜூ. பலம் வரும்’ என்று சொல்லி சிரித்தார். நான் முறைத்தேன். வயது மூன்று இருக்கலாம். அதற்கு மேல் நினைவில்லை. 
     கண் கலங்க வந்த அப்பா, பிருத்வி ராஜ் கபூரின் ‘படோசி’ சினிமாவை பற்றி சொன்னார். மதகின் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் ஹிந்து-முஸ்லீம் அண்டை வீட்டுக்காரர்கள், சடலமாக. சூழ்ச்சி செய்தது ஆங்கிலேயன் என்று அப்பா சொன்னதாக நினைவு. அப்பா ஏன் கலங்கினார்? ஆப்த நண்பன் மஜீத்கானிடம் துக்கம் விஜாரித்து விட்டு வந்திருந்தார். வீட்டிற்குள் போகக்கூட அனுமதியில்லை. வைசூரியில் அவரது குழந்தைகள் மாண்டு போயினர். எந்த குழந்தை? நினைவில் இல்லை. கஃபூரை பிறகு பார்க்கவும் இல்லை. என்ன வாழ்க்கை இது?
     தாயாதி சண்டை கொடிது என்பர். அண்ணன் - தம்பி அடிச்சுண்டா ஆகாயமே கவுந்துடும்டா என்பாள் அந்த நூத்துக்கிழவி. அந்த மாதிரி தான் இருக்கு, இந்த இந்தோ-பாகிஸ்தான் உரைசல். தீவிர வாதம் என்ற சொல்லே தப்பு. தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம். ஆபத்பாந்தவா! நீ தான் இந்த பூலோகத்தை ரக்ஷிக்கணும்.
     ஐயா! ஹிந்துக்களுக்கு ‘ஓம்’ எப்படி தாரகமந்திரமோ, அதே மாதிரி ‘ரஹம்’ ஒரு இஸ்லாமிய தாரகமந்திரமையா. அதற்கு ‘கருணை’ என்று பொருள் ஐயா! மிகவும் இக்கட்டான நிலையில், பகையும், புகைச்சலும் பேயாட்டம் ஆடக்கூடிய வேளையில், ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன். திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்! அது போகட்டும்.
      ஜூலை, 11, 2006: பதினோறு நிமிடங்களில்: 18 24/கார்; 18 24/பாந்த்ரா;18 25; ஜோகேஷ்வரி; 18 26: மாஹீம்: 18 9: மீரா ரோட்; 18 30: மாதுங்கா: 18 35: போரிவிலி => விரைந்தோடும் லோக்கல் ரயில்களில் ஐந்து குண்டுகள்; ஸ்டேஷன்களில் இரண்டு.   210 பயணிகள் கொலை.714 படுகாயம்.

இதே மும்பையில் மார்ச் 1993ல் 13 வெடிகுண்டுக்கள் பல இடங்களில் வடித்து 250 மக்கள் கொலை. கோவையில் ஃபெப்ரவரி 1998ல் 33 பேர் கொலை. ஜூலை 11, 2006 குண்டுவெடிப்புக்கு லஷ்கர் ஏ காஹ்ஹர் என்ற தீவிர அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

     அன்றிரவே ரயில்வே தன் பணியை தொடங்கியது. பொழுது விடிந்ததும், ஊழியர்களும், மாணவர்களும் ரயிலை பிடிக்க, வழக்கம் போல் ஓடினர். இருந்தும், நூற்றுக்கணக்கானவர்கள், ரேகை படிந்த நெற்றியும், வாடிய முகமும் ஆக, தொலைந்த உறவினர்களையும், நண்பர்களையும், தேடி, தேடி, அலைந்தனர். சவக்கிடங்குகளில் கிடந்த உருக்குலைந்த சடலங்களின் சட்டையில் சலவைக்குறி, உடைந்த பல், கைவளை, கால் கொலுசு என்றெல்லாம், தொட்டு, தொட்டு, தேடினர். உணர்ச்சி மரத்துப்போய், இயந்திரமாக, நடை  பிணமாக, இயங்கியவர்களை கண்டு, மற்றவர்கள் குரலெடுத்து அழுதார்கள். 
     குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!
இன்னம்பூரான்
11 07 2011

pastedGraphic.pdf

  But witnesses spoke of Mumbai pulling together, with local people handing out water and food. (Photo: Urdu Times)

Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 8:46 AM



தீவிரம் ஒரு வாதம் ஆகலாமோ? பயங்கரம் ஒரு வாதம் ஆகலாமோ? இரண்டுமே அநியாயம், அட்டூழியம், அதர்மம். அநாகரீகம், அசிங்கம்.//

மனதின் வருத்தம் பிரதிபலிக்கும் வரிகள். :(((((((((
தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//

எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை.  படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை. 


2011/7/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>





     
     குருதி வெள்ளப்படங்களை போட மனம் வரவில்லை. ரத்ததானம் வாங்கும் போது, இனமும், ஜாதியும், குலமும், கோத்திரமுமா கேட்கிறார்கள், இந்த மனித ஜந்துக்கள்? ஒரு மனித நேயப்படம் போதுமடா, சாமி!
இன்னம்பூரான்
11 07 2011




செல்வன் Mon, Jul 11, 2011 at 9:14 AM



இது அண்ணன் தம்பி அடிதடி அல்ல.

காலம் காலமாக நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் சண்டை

இதை இந்து மதம் எதிர் இஸ்லாம் என பிரித்து பாராது  நம்பிக்கைக்கும் (Hope) VS. நம்பிக்கைக்கும் (faith) இடையே நடக்கும் போர் என புரிந்து கொள்வோம்.

(ஆனால் என்று ஜஸ்வந்த்சிங் தனது விமானத்தில் மசூத் அசாரை ஏற்றிகொண்டு போய் ஆப்கானிஸ்தானில் இறக்கிவிட்டுவிட்டு. கூட வெடிகுண்டு வைக்க கைசெலவுக்கு ஒரு ஆயிரம் கோடியையும் கொடுத்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தை மீட்டுகொண்டு வந்தாரோ...

அன்று முதல் எனக்கு ஹோப் மீதான ஹோப் போய்விட்டது)

ஆயிரம் தான் பொருளாராதார அரசியல் ரீதியாக மோசமான ஆட்சி நடத்தியிருந்தாலும் இந்திரா காந்தி என்ற வீராங்கனை மேலான மதிப்பு அன்று பலமடங்கு கூடிவிட்டது.

இந்திரா மேல் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவர் கோழை என்ற குறையை யாராலும் சொல்ல முடியாது அல்லவா?
--
செல்வன்

"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்



]

Innamburan Innamburan Mon, Jul 11, 2011 at 10:08 AM

இரு பின்னூட்டங்களும் எனக்கு ஊக்கம் தருகின்றன. இந்திரா காந்தியை கோழை என்று சொல்ல இயலாது. எனினும், லாஹூரை  கைபற்றும் வேளையில், அமெரிக்க அழுத்தத்துக்கு பணிந்து, விட்டுக்கொடுத்தார். இது பற்றி சரியான விளக்கத்தை வரலாறு கூற நாளாகும். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்



Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 10:24 AM



(ஆனால் என்று ஜஸ்வந்த்சிங் தனது விமானத்தில் மசூத் அசாரை ஏற்றிகொண்டு போய் ஆப்கானிஸ்தானில் இறக்கிவிட்டுவிட்டு. கூட வெடிகுண்டு வைக்க கைசெலவுக்கு ஒரு ஆயிரம் கோடியையும் கொடுத்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தை மீட்டுகொண்டு வந்தாரோ//

ஏற்கெனவே கொலைகள் நடந்துவிட்டன. மக்களை மீட்கவேண்டும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.  என்றாலும் அதன் பின்னர் வேண்டிய கவனம் எடுத்துக்கொண்டார்கள்.  இது ஒன்றும் முஃப்தி முஹமத் நடத்திய கடத்தல் நாடகம் இல்லை.  ஒரிஜினல் அக்மார்க் கடத்தல்; பிரயாணிகள் எத்தனை பேர் உயிர் பணயம் வைக்கப் பட்டிருந்தது?? அதற்காக வேறே வழியே இல்லாமல் செய்யப் பட்ட ஒன்று.  அந்த நேரம் அதைச் செய்யவில்லை எனில் பிரயாணிகள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.  அப்போதும் அந்தக் குறிப்பிட அரசைத் தான் குற்றம் சொல்லிக்கொண்டு இந்திராகாந்தியாய் இருந்தால் எதையானும் கொடுத்து மீட்டிருப்பார் என்று சொல்வோம். 




செல்வன் Mon, Jul 11, 2011 at 3:32 PM





2011/7/11 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
ஏற்கெனவே கொலைகள் நடந்துவிட்டன. மக்களை மீட்கவேண்டும், அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.  என்றாலும் அதன் பின்னர் வேண்டிய கவனம் எடுத்துக்கொண்டார்கள்.  இது ஒன்றும் முஃப்தி முஹமத் நடத்திய கடத்தல் நாடகம் இல்லை.  ஒரிஜினல் அக்மார்க் கடத்தல்; பிரயாணிகள் எத்தனை பேர் உயிர் பணயம் வைக்கப் பட்டிருந்தது?? அதற்காக வேறே வழியே இல்லாமல் செய்யப் பட்ட ஒன்று.  அந்த நேரம் அதைச் செய்யவில்லை எனில் பிரயாணிகள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.  அப்போதும் அந்தக் குறிப்பிட அரசைத் தான் குற்றம் சொல்லிக்கொண்டு இந்திராகாந்தியாய் இருந்தால் எதையானும் கொடுத்து மீட்டிருப்பார் என்று சொல்வோம். 
ஆக இன்னொரு விமான கடத்தலை நடத்தினால் அப்சல்குருவையும், கசாப்பையும், அபுசலீமையும் ஒப்படைத்துவிடுவீர்கள்.

வருசா வருசம் தீபாவளிக்கு மாப்பிள்ளையையும், பொண்ணும் வீட்டுக்கு விருந்துக்கு வருவது போல் எல்லைதாண்டி வரும் பயங்கரவாதிகள் சாவகாசமா மும்பை வந்து குண்டு வைத்துவிட்டு போகிறார்கள்.மக்களூம் அதை துடைத்துபோட்டுவிட்டு அடுத்தநாளே வேலைக்கு போகிறார்கள். பத்திரிக்கைகளும் "மும்பை தீவிரவாதத்தை மறந்து மீண்டும் இயங்க துவங்கியது" என புகழாரம் சூட்டுகின்றன.

இஸ்ரேலில் வெறும் ரெண்டே ராணுவ வீரர்கள் கொல்லபட்டதுக்கு லெபனான் மேல் போரே தொடுத்தது இஸ்ரேல். லெபனான் தலைநகர் தரைமட்டமாக்கபட்டது.ஆனால் நாம்??


Geetha Sambasivam Mon, Jul 11, 2011 at 4:20 PM



ஆக இன்னொரு விமான கடத்தலை நடத்தினால் அப்சல்குருவையும், கசாப்பையும், அபுசலீமையும் ஒப்படைத்துவிடுவீர்கள்.//

சேச்சே, நிச்சயமா மாட்டோம்.  அன்னை சோனியாவின் ஆணையைச் சிரமேற்கொண்டு பிரதமர் வன்மையாகக்கண்டிப்பார். இதை நாங்கள் சகித்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பார். போதாது??

அதே பிஜேபி அரசு அக்ஷர்தாம் ஊடுருவலை எப்படிக் கையாண்டது என நினைத்துப் பாருங்கள்.  காந்தஹார் விமானக் கடத்தலில் தவிர்க்க முடியாமல் தான் அவர்கள் சொன்னபடி செய்ய வேண்டி வந்தது.  அப்சல் குருவை தூக்கில் போடாமல் நிறுத்தி வைத்திருப்பது யார்?? நீங்க சொன்ன இந்திரா காந்தி என்னும் தைரியசாலியின் பரம்பரையினரும், அவங்க கட்சிக்காரங்களும் தான்.  நாட்டை இந்த அளவுக்கு மோசமாக வெளிநாட்டினர் அனைவரும் காறித்துப்பும் அளவுக்கு மோசமான ஊழல் புரிந்து வருவதும் இந்த ஆட்சியில் தான். ஆனாலும் இவங்களுக்கு அதெல்லாம் உறைக்கவும் இல்லை.

இன்னும் நடுத்தர மக்களின் முதுகில் சுமையை ஏற்றுவதிலேயே குறியாய் இருக்கின்றனர்.  எரிவாயு சிலிண்டர் விலை எண்ணூறு ரூபாய் ஆக்கப்போகின்றனர்.  ஒரு வருடத்திற்கு நாலே நாலு சிலிண்டருக்குத் தான் மான்யம்.  சொந்த வீடோ, இரண்டு சக்கர வண்டியோ வைத்திருந்தால் அவங்களுக்கு சிலிண்டர் எண்ணூறு ரூபாய். மத்தவங்களுக்கு ஐந்நூறு ரூபாய்.  அதுவும் வருடத்திற்கு நாலே சிலிண்டர்கள் மட்டும்.  மிச்ச நாட்கள் வயிற்றில் துணியைப் போட்டுக்கணும்.

இதை விட மோசமான ஒரு அரசை இது வரை இந்தியா பார்த்ததே இல்லை.  பிஜேபி அரசில் புதிய எரிவாயுப்பதிவுகளுக்கும் சுலபமாக வாங்க வழி செய்தனர்.  எரிவாயு சிலிண்டரும் சுலபமாக மாற்ற முடிந்தது. தடையில்லாமல் கிடைத்தது.  இந்தியன் ஆயிலில் வேலை செய்யும் மெகானிக் கூட இந்த அரசைத் திட்டிட்டுப் போனார்.  எங்க வீட்டில் எரிவாயு கசிவு இருந்ததால் கூப்பிட்டிருந்தோம். பிட்டுப் பிட்டு வைக்கிறார். எல்லாம் ஆஃப் தி ரெகார்ட்! 




செல்வன் Mon, Jul 11, 2011 at 4:35 PM


காங்கிரஸும் குப்பை லாரி கட்சிதான். இந்திராவுக்கு இருந்த தைரியம் அவர் கட்சியினருக்கு இருக்கும் என நம்ப தான் தயாரா இல்லை.

பாஜக தீவிரவாதிகள் விஷய்த்தில் காங்கிரசை விட சற்று அக்ரசிவா இருப்பார்கள் என நம்பினேன்.வலதுசாரி கட்சிகள் பொதுவா தேச பாதுகாப்பில் கோட்டை விட மாட்டார்கள்.பாஜகவுக்கு அதில் பெயில் மார்க் தான் கொடுப்பேன்.

காங்கிரஸ் கோமாளிகள் ஆட்சியை பாஜக ஆட்சி பரவாயில்லை எனினும்
காந்தகார் கடத்தல், பாராளுமன்ற தாக்குதல் என இந்திய வரலாற்றில் அசிங்கமான சரணாகதிகள் பாஜக ஆட்சியில் நடந்தன. தனியார் மயத்தை ஊக்குவிக்கிறேன் என்றவர்கள் நாலைந்து கம்பனிகளை மட்டும் தனியார் மயமாக்கினர்.காங்கிரசை விட பரவாயில்லை என்பது தான் நாட்டை ஆள குவாலிபேகேஷனா?


Dhivakar Mon, Jul 11, 2011 at 4:43 PM



செல்வன்,

ராவணனா அல்லது கும்பகர்ணனா என்று இரண்டுதான் சாய்ஸ் உங்களுக்கு.




செல்வன் Tue, Jul 12, 2011 at 8:06 AM





இருவரையும் விபீஷணன் ஆக்கலாம் என நம்பிக்கை இருக்கு ஐயா

அரசியல் அமைப்பில் மாறுதல் கொண்டு வந்து, உட்கட்சி தேர்தலும் அமெரிக்காவில் இருப்பதுபோன்ற பிரைமரி முறையும், குறிப்பிட்ட தேதியில் தான் தேர்தல் நடக்கும் என்ற முறையும் வந்தால் பழம்பெருச்சாளிகளை, ஊழல் பேர்வழிகளை இக்கட்சிகளீல் இருந்து ஓட்டலாம்,புதிய ரத்தத்தை பாய்ச்சலாம்.

இப்பத்துக்கு இதெல்லாம் நடப்பது இல்லை..அதனால் நீங்க சொன்னமாதிரி அம்மாவா, ஐயாவா என்ற இரு சாய்ஸ்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்த்துக்கணும்:-))

--
செல்வன்

கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:35 AM

வணக்கம்
கர்மவீரர் காமராசருக்கு சுவிசுவங்கியில் கணக்கு இருக்கு என்று சொன்னதையெல்லாம் கேட்டு உண்மை யென நம்பி ஓட்டுப் போட்ட மக்கள்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்“

காங்கிரசையும்
பிசேபியையும்
நாம எப்படி வேண்டுமானாலும் பேசலாம்

ஆனால் நாம ஒரு சின்ன வார்டுல கூட நின்னு செயிக்க முடியுமா.  சொல்லுங்க பார்ப்போம்,.

இதுதான் இந்திய அரசியல்.

அன்பன்
கி.காளைராசன்



கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:38 AM



சேசன் தேர்தலில் ஏன் தோற்றார்.

அன்பன்
கி. காளைராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 8:39 AM



காங்கிரஸ் ராவணனாய் இருக்கலாம். இருக்கிறது.



Geetha Sambasivam Tue, Jul 12, 2011 at 8:42 AM



ம்ம்ம்ம் வெளிப்படையான சில விஷயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள். பாராளுமன்றத் தாக்குதல் நடந்தாலும் அதை முறியடித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது மும்பை முற்றுகை நடந்ததே, அப்போது ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சிறப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையைத் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருமாறு  ஒளிபரப்பினார்களே அம்மாதிரி எதுவும் நடக்க முடியாது பிஜேபி ஆட்சியில்.


2011/7/11 செல்வன் 
.

பாஜக தீவிரவாதிகள் விஷய்த்தில் காங்கிரசை விட சற்று அக்ரசிவா இருப்பார்கள் என நம்பினேன்.வலதுசாரி கட்சிகள் பொதுவா தேச பாதுகாப்பில் கோட்டை விட மாட்டார்கள்.பாஜகவுக்கு அதில் பெயில் மார்க் தான் கொடுப்பேன்.

காங்கிரஸ் கோமாளிகள் ஆட்சியை பாஜக ஆட்சி பரவாயில்லை எனினும்
காந்தகார் கடத்தல், பாராளுமன்ற தாக்குதல் என இந்திய வரலாற்றில் அசிங்கமான சரணாகதிகள் பாஜக ஆட்சியில் நடந்தன. 





கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 8:43 AM


Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com
ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.

...ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது சொல்கிறேன்.....

ஐயா,   அவசியம் எழுதுங்கள் ஐயா.

நாங்களும் அறிந்து கொள்வோம்.

அன்பன்

செல்வன் Tue, Jul 12, 2011 at 8:49 AM


Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com



பார்லிமெண்டில் தாக்குதல் நடந்தபிறகு என்ன நடவடிக்கை எடுக்கபட்டது? ஒண்ணும் இல்லை. எல்லையில் ராணுவத்தை நிறுத்தி வைத்து, உடல்பயிற்சி செய்ய வைத்து திருப்பி அனுப்பினார்கள்.
--
செல்வன்

Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 11:45 AM
To: mintamil@googlegroups.com
காளை ராஜன் ஸ்பெஷல்:



அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971 


‘...தருணம் வரும்போது ( அதாவது, வந்தால்? ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்?) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா? எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்!

‘எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை.  படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை.’

அப்றம் என்ன? நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ? மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா! எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா? ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா! இனம் தெரியாத அழுகைன்னா வரது. 

போறும். போறும். விஷயத்துக்கு வாங்கோ. விஷயம் இப்போத்தான், அப்பா!, வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன்? அவா கிட்டயே கொடுத்துட் றேன். உங்க பாடு! அவா பாடு!

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.

இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு  ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!

என்றோ ஒரு நாள் சொன்னேன். அது ஞாபகத்தில் வந்தால், நானா, பிணை?

‘மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! ‘

நான் இனி பேசப்போவதில்லை. பேசவும் தெரியாது.

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர் தொடருகிறார்: ‘ அருண் பால்மணம் மாறாத இளைஞன் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. என்ன தான் ராணுவ கட்டுக்கோப்பு இருந்தாலும், மனிதநேயம் ஆத்மதரிசனம் செய்ய விழைகிறது. உங்களிடம் பாவமன்னிப்பு கேட்க நினைத்தேன். அதற்கு பதில், அருணுக்கு வீரவணக்கம் செய்கிறேன், ஐயா. வாழ்வின் இறுதியில் நெறி ஒன்றுக்குத் தான் அமரத்துவம்.

என்றோ படித்தது அவர்களுக்கும், எனக்கும் ஞாபகத்தில் உறைகிறது.
‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’

பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரிடமிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு மடல் பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலுக்கு டில்லியில் பிறகு வந்தடைந்தது.  வாசகம்:
‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’
 பால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.
இன்னம்பூரான்
ஜூலை 11, 2011
pastedGraphic.pdf
உசாத்துணை:
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

2011/7/12 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.

...ஒரு ஹிந்துவும், ஒரு இஸ்லாமியரும் ஆரத்தழுவிய நிகழ்வு ஒன்று உண்டு. தருணம் வரும்போது சொல்கிறேன்.....

ஐயா,   அவசியம் எழுதுங்கள் ஐயா.

நாங்களும் அறிந்து கொள்வோம்.



அன்பன்

கி.காளைராசன்

கி.காளைராசன் Tue, Jul 12, 2011 at 12:44 PM



ஐயா  “இ“னா அவர்களுக்கு வணக்கம்.எவ்வளவு ஞாபகசக்தி,  எவ்வளவு தேசபக்தி... வணக்கம் பல.

ஒருமுறையல்ல, பலமுறை படித்தேன்.

யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’‘
Flag2.jpg
ஐயா அந்த வீரனின் படம் இருந்தால் அன்புடன் பதிப்பியுங்களேன்.

‘‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்!’‘கள்தான்.

ஞாபக பகிர்வுக்கு நன்றியுடையேன்.

அதிபர் முசுராபும் ஒரு முறை இந்தியா வந்து சென்றதும் ஞாபம் வருகிறது.

அன்பன்
கி. காளைராசன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Tue, Jul 12, 2011 at 1:01 PM


2011/7/12 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா  “இ“னா அவர்களுக்கு வணக்கம்.
[Quoted text hidden]

செல்வன் Wed, Jul 13, 2011 at 4:24 PM


இன்று மும்பையில் குண்டு வெடிப்பு.மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்திய முஜாகிதீன் தககுதலுக்கு பொறுப்பேற்றது.

இதை கண்டித்து இன்னும் மன்மோகன் அறிக்கை வெளியிடவில்லை.ஆனால் விரைவில் கண்டிப்பார் என தெரிகிறது.அவர் கண்டித்துவிட்டால் என்ன செய்வது என பாகிஸ்தான் பதறிபோய் உள்ளது.


--
செல்வன்

No comments:

Post a Comment