Sunday, March 24, 2013

அன்றொருநாள்: மார்ச் 24 ‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:)




அன்றொருநாள்: மார்ச் 24 ‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:)
14 messages

Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 6:38 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 24
‘மஜிஸ்டர் லூடி’ (குருப்யோ நம:)

மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
—(கூத்தநூல் - தோற்றுவாய்)

யாமொன்று நினைக்க, சிந்தனை எங்கெங்கேயெல்லாம் இழுத்தடிக்கிறது. ‘மனதே’ என்றேன்: -தீக்ஷிதர் ~மும்மூர்த்திகள் ~கர்நாடக சங்கீதம் ~இசை ~அரங்கேற்றுக்காதை ~வி.கே.நாராயணமேனன் ~ கூத்தநூல்~Ludwig Pesch எழுதிய கர்நாட்டிக் ம்யூசிக்ஆய்வு~ Magister Ludi ~Nils L. Wallin, Björn Merker, and Steven Brown ஆகியோர் எழுதிய ‘இசையின் மூலம்’ ~~~ என்னது இது? மைண்ட் மேப்பிங்?/மைண்ட் அலைச்சல்? ஹெர்மன் குண்டெர்ட் என்ற ஜெர்மானியர் ஒரு மலையாள புலவர். அவருடைய மருமானும், பிரபல நாவலாசிரியருமான ஹெர்மென் ஹெஸ், இந்திய கலாச்சாரத்தையும், தத்துவத்தையும் போற்றுபவர். Magister Ludi ("The Master Player") என்று அவர் எழுதிய நூலுக்கு நோபெல் பரிசு கிடைத்தது. அதில் அவர் சொல்கிறார்:
“...என் வாழ்க்கை, பல இலக்குகளை தாண்டியபடி, ஊர்வலம் சென்றபடி இருக்கவேண்டும். எப்படி தெரியுமோ? சங்கீதம் மாதிரி. ஒரு சங்கதி ~ ஒரு படி ஏறிய சங்கதி; ஆரோஹணம் ~அவரோஹணம்~ ஆரோஹணம்..., பிர்காவிலிருந்து பிர்கா...~ ஸ்வரம் பிசகாமல் ~சதா ஸ்மரணை~ ஆலாபனை ~ நிரவல் ~ இங்க்லீஷ் நோட் எப்போதும் நிகழ்காலம்...” ( மொழியாக்கம்ம்பொறுப்ப்உ எனது)
ஒரு பாடாக, அது என்னை முத்துஸ்வாமி தீக்ஷிதர்வாளிடம் கொண்டு வந்து சேர்த்தது. ‘மனதே! நீ திருவாரூர் தியாகராஜனை தியானி...’ என்று ஆனந்த பைரவியில் இசைத்து, நம்மை எல்லாம் ஆட்கொண்ட முத்துசாமி தீக்ஷிதர்வாளின் அவதார தினம் இன்று: மார்ச் 24, 1775. 1835ம் வருட தீபாவளி விழா, அக்டோபர் 21, 1835. அன்றைய தினம், வழக்கம் போல் விஸ்தாரமான பூஜை, புனஸ்காரம் எல்லாம் முடித்து விட்டு, சிஷ்ய கோடிகளை, பூர்வீகல்யாணியில் ‘மீனாக்ஷி மே...‘ பாடச்சொன்னார், இந்த ‘குருகுஹ’ இலச்சனை பதித்த தீக்ஷிதர்வாள். ‘மீனலோசனி,...‘ என்ற வரி வந்தவுடன், கையை உயர்த்தி, ‘சிவ பாஹி‘ என்றார், இந்த ஞானமார்க பக்திமான். ஆத்மா விமோசனம் ஆயிற்று.  அவருடைய சமாதி எட்டையபுரத்தில் இருக்கிறது. எண்ணங்களின் ஊர்வலம்  -1 என்ற கட்டுரையில் (30 09 2009) நமது ஸுபாஷிணி எழுதியது: ‘... எட்டயபுரம் ஆஸ்தானத்திற்கு நிறைய சங்கீத வித்வான்கள் உண்டு. ஆனால் அங்கேயே தங்கியிருந்தவர்களில் முக்கியமானவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் தம்பியான பாலுசாமி தீக்ஷிதர். தம்பி வாழ்ந்த இடத்திற்கு அண்ணனும் வந்தார், வாழ்ந்தார், மறைந்தார். முத்துசாமி தீக்ஷிதருக்கும் நினைவு மண்டபம்  இருக்கின்றது. பாரதியின் நினைவு மண்டபத்திற்குக் கொஞ்ச தூரத்திலேயே இதுவும் அமைந்துள்ளது...’

எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்கிறது. அபூர்வமான உசாத்துணைகள், சொல்லி வைத்தாற்போல், ‘அப்பா! இங்கு வந்து மொண்டுக்கோ. அமுதகலசம் கொண்டு வந்திருக்கிறேன். நிறைகுடம். எடுத்துக்கோ. வாரி, வாரி, எல்லாருக்கும் கொடு’ என்கிறது.
எனவே, நண்பர்களே!, நேராக உசாத்துணைக்குப் போய், 1936ல் நாகஸ்வர வித்வான் திரு. நடராஜசுந்தரம் பிள்ளை எளிய ஆங்கிலத்தில் எழுதிய “தீக்ஷித கீர்த்தன பிரகாசிகையை படியுங்கள். எனக்கு, அவரை விட சிறப்பாக எழுதத் தெரியாது.
டாக்டர். வி.ராகவன் அவர்கள் அளித்த புகழ்மாலையையும் படியுங்கள்.
[TRANSLATION: He who received the boundless Grace of Lord Subrahma- n. ya, the One who revealed the meaning of Pran. ava; he who attained immortality by bestowing his timeless compositions, the life blood of our karn. a ̄tik music; he who became the soul of the very spirit of Music; he who by his sporting acts and deeds, showed us the essence of that spirit of Music — let him, the revered Muddusva ̄mi D ̄ıks.itar, confer his benign blessings on us!]

உங்களுடைய நாதோபசனைக்கு குறுக்கே வர விரும்பாத,

இன்னம்பூரான்
24 03 2012
Inline image 1


உசாத்துணை:

Mohanarangan V Srirangam Fri, Mar 23, 2012 at 6:44 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
என்ன அவசரம்? அவசரக் கோலம் அள்ளித் தெளிச்சா மாதிரி....மாஜிச்டர் லூடிக்கு நன்றி. :-) 


Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 6:51 PM
To: 
ஒத்துக்கிறேன். நாளை நின்று நெடுந்தூரப்பயணம். மூட்டைகட்டிண்டுருக்கேன். ஆயிரம் குறுக்கீடுகள். அடாது மழை பெய்தாலும், விடாது ஆட்டம் போடாவிடினும், ஶ்ரீரங்கம் மோஹன ரங்கன் கோபிச்சுப்பாரோ ( என் மாதிரி இல்லை; அவருக்கு கோபம் வரும்.) என்ற வ்யாகூலம். கை வேறே வலிக்கிறது. நிஜமாத்தான் கேக்கிறேன். நடராஜ சுந்தரம் முன்னாலே, சுந்தர ராஜன் நிக்கமுடியுமோ?


Subashini Tremmel Fri, Mar 23, 2012 at 9:30 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com



2012/3/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 24
..
ஒரு பாடாக, அது என்னை முத்துஸ்வாமி தீக்ஷிதர்வாளிடம் கொண்டு வந்து சேர்த்தது. ‘மனதே! நீ திருவாரூர் தியாகராஜனை தியானி...’ என்று ஆனந்த பைரவியில் இசைத்து, நம்மை எல்லாம் ஆட்கொண்ட முத்துசாமி தீக்ஷிதர்வாளின் அவதார தினம் இன்று: மார்ச் 24, 1775. 1835ம் வருட தீபாவளி விழா, அக்டோபர் 21, 1835. அன்றைய தினம், வழக்கம் போல் விஸ்தாரமான பூஜை, புனஸ்காரம் எல்லாம் முடித்து விட்டு, சிஷ்ய கோடிகளை, பூர்வீகல்யாணியில் ‘மீனாக்ஷி மே...‘ பாடச்சொன்னார், இந்த ‘குருகுஹ’ இலச்சனை பதித்த தீக்ஷிதர்வாள். ‘மீனலோசனி,...‘ என்ற வரி வந்தவுடன், கையை உயர்த்தி, ‘சிவ பாஹி‘ என்றார், இந்த ஞானமார்க பக்திமான். ஆத்மா விமோசனம் ஆயிற்று.  அவருடைய சமாதி எட்டையபுரத்தில் இருக்கிறது. எண்ணங்களின் ஊர்வலம்  -1 என்ற கட்டுரையில் (30 09 2009) நமது ஸுபாஷிணி எழுதியது: ‘... எட்டயபுரம் ஆஸ்தானத்திற்கு நிறைய சங்கீத வித்வான்கள் உண்டு. ஆனால் அங்கேயே தங்கியிருந்தவர்களில் முக்கியமானவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் தம்பியான பாலுசாமி தீக்ஷிதர். தம்பி வாழ்ந்த இடத்திற்கு அண்ணனும் வந்தார், வாழ்ந்தார், மறைந்தார். முத்துசாமி தீக்ஷிதருக்கும் நினைவு மண்டபம்  இருக்கின்றது. பாரதியின் நினைவு மண்டபத்திற்குக் கொஞ்ச தூரத்திலேயே இதுவும் அமைந்துள்ளது...’

ஆஹா நாளை (24) அவர் பிறந்த நாளா.. தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நீங்கள் குறிப்பிடும் எனது எட்டயபுரத்தை நோக்கி பதிவு இங்கே உள்ளது.

நினைவாலயத்தின் படம்..

Inline image 1

சுபா

Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 11:02 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
கண்ணில் ஒற்றிக்கொண்டு நெஞ்சில் பதித்துக்கொண்டேன்.  உள்ளத்தில் இருந்து பீறிட்டு வரும் உணர்வுப் பிரவாஹத்தின் ஒரு துளியே இப்படி மூழ்கடிக்கிறது என்றால் முழுதும் எழுதினால்!  அதான் ஒரு கோடி மட்டும் போலும்!  நன்றி பகிர்வுக்கு.


கூத்த நூலின் தோற்றுவாய்ப் பாடல் அப்படியே கண் முன்னே காட்சிகளை விவரிக்கிறது. இந்தப் பாடல் இன்று வரை தெரியாது.  இன்றே அறிந்தேன்.


கி.காளைராசன் Sat, Mar 24, 2012 at 5:05 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 24
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
உலகத் தோற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் குறிப்பதுபோல் பாடல் உள்ளதே?
இதன்வழிப் பார்த்தால், தில்லைக் கூத்தனை வணங்கும் முன் முத்துச்சாமி தீட்சிதரை வணங்குவது சிறப்புடையது என்று உணர்கிறேன்.

அருமையானதொரு பாடலை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி ஐயா,
எனக்கு அதிர்ஷ்டம் நிறைய இருக்கிறது.அபூர்வமான உசாத்துணைகள், சொல்லி வைத்தாற்போல், ‘அப்பா! இங்கு வந்து மொண்டுக்கோ. அமுதகலசம் கொண்டு வந்திருக்கிறேன். நிறைகுடம். எடுத்துக்கோ. வாரி, வாரி, எல்லாருக்கும் கொடு’ என்கிறது.
எங்களுக்கும் அதிர்ஷ்டம் நிறையவே இருக்கிறது.
நாங்கள் ஏதும் சொல்லி வைக்காமலேயே, பல அரிய சுரங்கங்களைத் தோண்டியெடுத்து, புடம்போட்டு எங்களுக்குத் தருகின்றீர்களே.

நன்றி ஐயா,
அன்பன்
கி.காளைராசன்


Tthamizth Tthenee Sat, Mar 24, 2012 at 5:25 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
படிக்கப் படிக்க திகட்டாத இன்பம் அள்ளித்தரும் இன்னம்புரார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த  வணக்கம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee Sat, Mar 24, 2012 at 6:46 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கூத்த நூலைப் பார்த்து யாத்த நூல் கீழே

"மோனத் தவமிருந்து மூழ்கி உள்கிடந்து
ஞானத் தவமிருந்து  தனித்தே உள்கடந்து 
ஒன்றித் தழைத்தே உள்ளுருவாகி வளர்ந்து
ஓங்காரநாதம் ஓங்கிப் புறப்பட்டே  உள்ளிருந்து
 
ஒலித்துத்  தொடங்கி நாடகம் பிறந்தது
நாடகம் பிறந்தது அசைவின் மொழியே
அசைவு பிறந்தது  மொழியின் வகையே
மொழி பிறந்தது மனதின் பிம்பமே
 
மனமொழி என்பது இதயத்தின் ஒலியே
மனம் என்பது இதயத்தின்  இருப்பே
இருப்பு என்பது  இறைவனின் அறையே
அறை என்பது அன்னையின் கருவே
 
கரு என்பது ககனத்தின் விதையே
விதை என்பது ககனத்தைப் பிளந்து
வெடித்துக் கிளம்பி காற்றை உள்வாங்கிய
விருட்ஷத்தின் அணுவே அணுவென்பது ஆதிமூலமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


[Quoted text hidden]

Subashini Tremmel Sat, Mar 24, 2012 at 7:10 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அருமை தேனீயார். எனக்கு கவிதை யாப்பு தெரியாதெனினும் கருத்தும் சொற்களும் வாசிக்க மிக நன்றாக அமைந்துள்ளன.
சுபா
]

Tthamizth Tthenee Sat, Mar 24, 2012 at 7:16 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றி

அன்புடன்
தமிழ்த்தேனீ


[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Mar 24, 2012 at 7:49 AM
To: mintamil@googlegroups.com
மனம் பேசிற்று அல்லவா. கவின் நிறைந்த கவிதை. வாழ்த்துக்கள், தமிழ்த்தேனீ
இன்னம்பூரான்

2012/3/24 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
நன்றி



Nagarajan Vadivel Sat, Mar 24, 2012 at 1:24 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
http://www.youtube.com/watch?v=RF6OmU3av9s

Krithi: Meenakshi Me Mudamdehi
Ragam: Poorvi Kalyani
Talam: Adi
Composer: Muthuswami Deekshitar
Artist: Kamalakiran Vinjamuri
Nagarajan






[Quoted text hidden]

No comments:

Post a Comment