பெருங்களத்தூர் நோட்ஸ் 1
அலை பாயுதே !
இன்னம்பூரான்
01 08 2014/ 05 01 2019
தர்மமிகு சென்னை நாலாபக்கமும் விரவி வருவதால், வண்டலூர் மிருக கண்காட்சி
சாலைக்கு அருகில் உள்ள பெருங்களத்தூர் என்ற மனித கண்காட்சி சாலையின்
மவுசு ஏறி வருகிறது. புதிய பெருங்களத்தூரின் பிறவி வேறு. அருகே கானகம்
வேறு மெருகேற்றுகிறது. சுற்று வட்டாரத்தில் வேங்கை நடமாடினாலும், இங்கு
புகலடைந்தேன். கிட்டத்தட்ட தமிழில் நாற்பது நூல்கள் எழுதிய சான்றோன்
ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் ஜே.கே.யின் தத்துவங்களை பற்றி ஒரு
அருமையான நூல் படைத்திருக்கிறார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.இது வரை
எழுதியதற்கு அவருடைய முன்னுமதி இருப்பதால், எழுதிவிட்டேன். அவருடன்
அளவளாவுவது ஒரு இனிய அனுபவம்.
அவரும் நானும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அத்தருணம், என்னுடைய
ஜனவரி 1953ம் வருட குறிப்பு ஒன்று தற்செயலாக கிடைத்தது. அதில் ‘The
Psychology of Study’,வீணடிக்கப்பட்ட நேரம், ஆனந்த விகடனில் தேவன் எழுதிய
கதையை பற்றிய விமர்சனம்,அரிஸ்டாட்டில், என்னுடைய சிநேகிதி, அண்ணல்
காந்தி, சர்தார் படேல், கன்ஃபூஷியஸ் எல்லாரும் உலவுகிறார்கள். இருவரும்
இதை படித்துவிட்டு, நினைவலைகளில் மிதந்தோம். அதன் நற்பயனாக, “Master
Kong” (Chinese: Kongzi), Confucius எனப்படும் சீன தத்துவ மேதையிடம்,
எங்கள் சிந்தனை அலை பாய்ந்தது. நண்பர் வயதானவர்.ஓய்வெடுக்க சென்று
விட்டார். கன்ஃபூசியஸ்ஸிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். தமிழில் அவரை பற்றிய
செய்திகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. சாக்ரட்டீஸ் மாதிரி அவரும்
பெரிதும் புகழப்பட்டவர், நிந்திக்கப்பட்டவர்;அவரே தெய்வம்;அவரே சாத்தான்!
எனினும், உலகமெங்கும் சிந்தனைக்களங்களில் இன்றளவும் பேசப்படும் அந்த
ஞானியை பற்றியும் அவருடைய சூத்திரங்களை (Analects (Chinese: Lunyu)
பற்றியும் நாம் அறிந்தது சொற்பம் என்ற தோற்றம். எனவே, அபரிமிதமான
துணிவுடன், அவரை பற்றிய இந்த தொடரை துவக்கியுள்ளேன் பார்க்கலாம்!
இங்கு ஆசான் எனப்படுவது அவரே.அரசாங்கமும், பொது நடப்புகளும் என்ற
தலைப்பில் அவர் எழுதிய சூத்திரங்கள் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்கு
பொருத்தமானவை. இன்றைக்கு முதலாவது:
‘ஆயிரம் தேர்கள் ஆடி வரும் நாட்டில், கண்ணியம், சிக்கனம், கொடை,
காலத்துக்குகந்த வேலை வாய்ப்பு, தரமுயர்ந்த வணிகம் ஆகியவற்றின் மீது
தீவிர கவனம் தேவை என்று ஆசான் அவர்கள் கூறினார்.
‘The Master said: In ruling a country of a thousand chariots there
should be scrupulous attention to business, honesty, economy, charity,
and employment of the people at the proper season.’
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
சித்திரத்துக்கு நன்றி: Internet Encyclopaedia of Philosophy.
பின்குறிப்பு:
இந்த தொடரை சனிக்கிழமை தோறும் பதிவு செய்ய உத்தேசம்.
பெருங்களத்தூர் நோட்ஸ் 2
இன்னம்பூரான்கருத்துக்களுக்கு நன்றி. பதிலும் அளித்துள்ளேன்.
கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் இங்கு உள்ளே நுழைய முடியவில்லை, பிரதான ராஸ்தாவிலிருந்து. அத்தனை காடு. அத்வானம். அடிச்சுப்போட்டா கேட்க நாதியில்லை. அந்த காலத்திலேயே, எழும்பூர் பக்கத்து வாராவதியில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவரின் பெயர் சதானந்த சுவாமிகள். பூர்வாசிரமத்தில் போலீஸ் கான்ஸ்டபளாக இருந்தவர் என்று கேள்வி. அவர் இங்கு வந்து
ஒரு ஆசிரமம் அமைத்தார். அது பிரபலமாயிற்று. சில நாட்கள் முன்னால், ஒரு பிராது. அங்கு சிறார்கள் துன்புறுத்த படுகிறார்கள் என்று. மகளிர் போலீஸ் விரைந்து வந்து அர்த்த ராத்திரியில் ஆய்வு செய்து, பிராது உண்மை என்று அறிந்து, சிறார்களை அழைத்து சென்று காப்பகத்தில் ஒப்படைத்தார்கள். அதற்கு பின் நடந்த கதை தான் வினோதம். பிராது கொடுத்தவரை, ஆசிரமத்து பெண்மணிகள் பிடித்து, முடியை இழுத்து படாது படுத்தி விட்டதாக செய்தி. இந்தியாவில், அத்தகைய அடாவடி ஆசிரமங்கள் இருப்பதாக அறிகிறோம். பூலோக கைலாசபதி நித்யானந்தாவை பற்றி பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உளன. பீடி சாமியார், சாராயப்ரீதி சாமியார் என்றெல்லாம் பலர் தென்னகத்தே கொடி கட்டி பறக்கின்றனர்.
-#-
Comments & Replies:
AnonymousJanuary 5, 2020 at 6:40 AM
I
is time to be happy. I have read this post and if
I could I desire to suggest you few interesting things or advice.
Maybe you could write next articles referring to this article.
I desire to read even more things about it!
site? My blog is in the very same area of interest as yours
and my visitors would certainly benefit from some of the information you present here.
Please let me know if this ok with you. Thanks!