Google+ Followers

Tuesday, October 29, 2013

அனுபவி ராஜா! அனுபவி! அன்றொரு நாள்: அக்டோபர் 31


அன்றொரு நாள்: அக்டோபர் 31

Innamburan Innamburan 1 November 2011 13:33


அன்றொரு நாள்: அக்டோபர் 31
வானொலியில் நடன இசை ஒலிக்க, அதில் ஆழ்ந்திருந்த ரசிகபெருமக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சி! அச்சம்! ஆச்சர்யம்! திகைப்பு! பீதி! கதி கலங்க ஓட்டம்! தலை தெறிக்க ஓட்டம்!  ஒன்றன் பின் ஒன்றாக காட்டாற்று வெள்ளமாக கொட்டிய செய்திகள் அப்படி. 
~‘சிந்தாத்ரிப்பேட்டையில் ஒரு தீப்பந்தம் விழுந்தது.’
~‘நம்ம பாலு சேட்ஜியை பார்த்து கடன் வாங்கப்போனானே, என்ன ஆச்சோ’ என்று அடுத்தாத்து அம்புஜம் கேட்கச்சயே, ராபின்சன் பார்க்லெ நாலு மரம் எரியறது என்றார்கள்.
~‘விச்சு! சத்தம் போடாதே! என்னமோ ரங்கனாதன் ஸ்ட்ரீட்ங்க்றானெ. உங்கம்மா  மாட்சிங்க் ப்ளௌஸ் பீஸ் வாங்கப்போயிருக்காளே டா. அய்யோ! பில்டிங் மேலோ என்னமோ மோதறதாமே. டமால் னு சத்தம் காத பிளக்றதே! தீ பத்தி எரியதாம்! ஜனங்க சிதறி ஓடறளாமே. மணி கண்டா! நீ தாண்டா ரக்ஷிக்கணும். கண்ணெ மூடிண்டு தலையை சாச்சுட்டாரே, கிழவர்!
~ ‘அடக்கடவுளே! ஐலண்ட் மைதானத்தில் கப்பல் கப்பலாக வந்து இறங்கறார்கள். புஷ்பக விமானம் மாதிரியும் இல்லெ. போயிங்க் மாதிரியும் இல்லெ. வாலு, மூக்கு, ராக்ஷஸ கண்கள். கிட்டத்தட்ட நூறு இறங்கிடுத்து. சார்! வாய் குழறது. அன்னிக்கி இந்திராகாந்தியை, அதான், இதே தேதி இருபத்தி அஞ்சு வருஷம் முன்னாலெ சுட்டுப்டானே, அன்னிக்கும் நான் தான் ந்யூஸ் வாசிச்சேன். வாய் குழறிப்போச்சு. ஓபென்னா அழுதேன். 
~ சென்ட்ரல்லேருந்து மூட்டையும் முடிச்சும்மா ஓடி வரா, சார். பின்னாலேயே எஞ்சினை தூக்கிண்டு வீசறான், சார். மனுஷா மிருகம்னா இது தானா? அய்யய்யோ! வலி உசிர் போறதே. அவன் மயிர்க்கால் சவுக்கடி மாதிரி. அடடா! கோடியாத்து சுப்புணியோட தலைனா இது!
~ எல்லாரும் கோயிலுக்குள் போங்கோ. கோட்டைக்கதவை மூடிண்டு குமுதம் மாதிரி கூட்டுப்பிரார்த்தனை பண்ணுங்கோ. ஆத்மார்த்தமா பண்ணனும் ஆமாம். கபாலிக்குளம் தண்ணி பூரா குடிச்சுடுத்தே, அவன் கூட வந்த நாய்! நாயா அது? பேய்ங்காணும்! நாப்பது கால். எல்லாம் வளையறது. ராக்ஷஸ ஜலமண்டலி ஒண்ணு, உசிலை மணி மாதிரி ஆடி அசஞ்சுண்டு வரதே. 
~ ஒன் மினிட் ப்ளீஸ்! ஆல் இந்தியா ரேடியோ டவரெல்லாம் கட்டை விரலால்ல நசுக்றான், சார்! வலி தாங்கலைடாப்பா! நீ தான் கண் கண்ட தெய்வம். சமத்தோல்ல்ல்ல்லியோ! 
~ ரேடியோ ஸ்டேஷன் காலி. டெம்ப்பர்ரியா ஹார்பர் ஸ்டேஷன்லேருந்து. டிஸாஸ்டர் ராணுவம் அனுப்பிச்சாச்சுன்னு ப.சி. தகவல். ஒபாமா வரார். 767 விமானங்களுடன், 57 கப்பலுடன். 
~ இதென்ன குறுக்கே பேச்சு கேக்கிறது? எதுக்கும் கேட்டுக்கோ.
~ ‘நான் சென்னை ஹார்பர் மாஸ்டர். எல்லா கப்பலும் வெளியேறணும், உடனே. ஹார்பர் மேடாயிண்டு வரது. புதன் கிரகத்தேலெயிருந்து வந்ததுகள் எல்லாம் இங்கே தானா காலைக்கடன். ப்ராரப்தம்!
~ பெங்களூரு ரோடு க்ளோஸ்ட். எல்லா விமான சர்வீஸ் ரத்து. 
~ காஞ்சீபுரத்துக்காரால்லாம் இங்கே ஓடிவந்துண்டிருக்கா.
~ நெல்லூர் ரோடு காணோம்.
நம்பமாட்டேள். இந்த மாதிரி அக்டோபர் 30. 1938 அன்று ‘கிரகங்களுக்குள் சண்டை’ என்ற ஹெ.ஜீ. வெல்ஸ் நாவலை, ஆர்சன் வெல்ஸ் என்ற அமெரிக்க ரேடியோ அண்ணா அமெரிக்காவையே, டிராமாவை செய்தி அறிவிப்பு மாதிரி நடித்து, ஆட்டி வைத்து விட்டார்.
இத்தனைக்கும் அப்பப்போ இது ரேடியோ நாடகம்னு அறிவிப்பு வேறு, பூடகமா. யாராவது கேட்டா தானே. ஓட ஆரம்பிச்சுட்டாளே! மறு நாள், அதான் அக்டோபர் 31, 1938 அன்று சாவதானமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். 
ஆறு பாகத்தில் யூ ட்யூப் இணைப்பு. எல்லாம் ஒரிஜினல். எஞ்சாய்! எஞ்சாய்! ஹிந்தியில் ஜமாய்! தமிழில் அனுபவி ராஜா! அனுபவி.
இன்னம்பூரான்
01 11 2011
உசாத்துணை

YouTube - Videos from this email

Geetha Sambasivam 1 November 2011 15:07


‘நான் சென்னை ஹார்பர் மாஸ்டர். எல்லா கப்பலும் வெளியேறணும், உடனே. ஹார்பர் மேடாயிண்டு வரது. புதன் கிரகத்தேலெயிருந்து வந்ததுகள் எல்லாம் இங்கே தானா காலைக்கடன். ப்ராரப்தம்!//
நல்லா ரசிச்சேன்!  நன்றி.
2011/11/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

ஆறு பாகத்தில் யூ ட்யூப் இணைப்பு. எல்லாம் ஒரிஜினல். எஞ்சாய்! எஞ்சாய்! ஹிந்தியில் ஜமாய்! தமிழில் அனுபவி ராஜா! அனுபவி.
இன்னம்பூரான்
01 11 2011
உசாத்துணை

YouTube - Videos from this email