Google+ Followers

Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 7 சுவரில் அடித்தப் பந்து!
அன்றொரு நாள்: ஜனவரி: 7 சுவரில் அடித்தப் பந்து!
4 messages

Innamburan Innamburan Sat, Jan 7, 2012 at 1:53 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி: 7
சுவரில் அடித்தப் பந்து!

ஜனநாயகம் தசாவதாரம் போல, பஹுவேஷதாரி. கிரேக்க நாகரீகம் பேசிய நேரடி ஜனநாயகம் பஞ்சாயத்து மாதிரி சிறிய நிர்வாகம். அமெரிக்காவின் ஜனாதிபதி, மக்களின் நேரடி பிரதிநிதி எனலாம், தேர்தல் வழிமுறை சிக்கலானது என்றாலும். இங்கிலாந்தில் மன்னரின் யதேச்சதிகாரத்தைக் குறைத்து, பிறகு அதை அலங்காரமுகமாக்கியது, பிரதிநிதித்துவ ஜனநாயகம். இந்தியாவும், மற்றும் பல நாடுகளும், அந்த முறையை அங்கீகரித்து, பின்பற்றின. கொடுங்கோலர்களின் தாயகமும் ஜனநாயகமே. அதற்கு மாற்று மருந்து புரட்சி. இது உலக வரலாறு.

இந்தியாவின் முதல் பொது தேர்தலலிருந்து, எல்லா தேர்தல்களையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், ஜனவரி 7, 1980 அன்று திருமதி. இந்திரா காந்தி வாகை சூடியதைக் கண்டு நான் வியக்கவில்லை. அவருடைய எமெர்ஜென்ஸி ஆட்சி ஏற்கனவே ‘அன்றொரு நாள்’ இழைகளில் பேசப்பட்டது. அவர் 1978ல் நாடாளும் மன்றத்துக்கு வந்த போது எமெர்ஜென்ஸி காலத்து அடக்குமுறைகளை கண்டித்து, அவரை வெளியேற்றினார்கள். அந்த அடக்குமுறை நிர்வாகத்தை பொதுமக்கள், ஊடகங்கள், அரசியலர் எல்லோரும் கண்டித்தாலும், திரைமறைவில் ஒரு புகழ்ச்சி இருந்தது. ஏனெனில், கண்ணியம், கடமை, கட்டுப்பாடு எல்லாம் குலைந்திருந்தன, அந்த மருண்ட காலத்துக்கு முன். அவை சற்றே தலை நிமிர்ந்தன, அன்றாட அலுவல்களில். போதாக்குறையாக, பிரதமர் சரண் சிங்கின் திறனற்ற, வலிமை இழந்த அரைகுறை, உள்குத்து கூட்டமைப்பு ஆட்சியை, மக்கள் கட்டோடு வெறுத்தார்கள். அத்துடன், இந்திரா காந்தியின் சாமர்த்தியமான தேர்தல் பிரச்சாரம் மக்களை கவர்ந்தது. அவர்கள் எமெர்ஜென்ஸி ஆட்சியை மறக்கத் தயாரானார்கள். இந்த சூழ்நிலையில், 20 கோடி மக்கள் வாக்களித்து, 525 ஸ்தானங்களில், 351 ஸ்தானங்களை இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு அளித்தனர். எதிர்கட்சி என்று ஒன்றுமில்லை. ஜனதா கட்சியும், லோக் தல் கட்சியும் அதல பாதாளத்தில் வீழ்ந்தனர். சுவரில் அடித்தப் பந்து அதிக வேகத்துடன் திரும்புவது போல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்தார். அது ஒரு திரும்பிய முனை.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்ட சபை தேர்தல்களும் 1972 வரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டன. இந்திரா காந்தி இந்த திட்டத்தை மாற்றியமைத்தார். அது ஒரு திருகிய முனை. ஏற்கனவே, இனவாதமும், சாதி வாதமும் அரசியலில் புகுந்து அநாகரீகமாக இயங்கி, மக்கள் நலத்தைக் குலைத்தன. இந்த திருகு வலி அந்த தீயசக்திக்குத் தூபம் போட்டது;போடுகிறது; இனியும் போடும். தேசிய கட்சிகளும், பிராந்திய கட்சிகளும் போட்டியிடுகின்றன,2012 ல். உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும். உத்தரபிரதேசம் ஊடகங்களிலும், பிரச்னைகளிலும், ‘ஜாட்’, ‘யாதவ்’, ‘தலித்’ என்று இனபேதம் செய்வதில் தலைமை வகிக்கும். எல்லா கட்சிகளும், மக்களின் நலத்தை பின் தள்ளி, சட்டசபைகளை ஆக்ரமிப்பதற்கு வழி தேடும். இது புதிது அல்ல. முப்பது நாற்பது வருடங்களாக வளைய வரும் தொடர்கதை.

இந்த தொடர்கதை, தமிழ்நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது. நாற்பது வருடங்களாக ‘இன்னா நாற்பது’ தான். மக்கள் நலத்துக்கு வேண்டாதவை மட்டுமே ‘ராவணனின் பத்து தலைகள்’ போல நடப்பில். சமீபத்தில் நடந்த தேர்தலில் ‘திருமங்கலம்’ மங்கலம் இழந்தாலும், ஊடகச்செய்திகள் அச்சமூட்டுகின்றன. அரசியல் எல்லைகளை கடந்த ‘செல்வக்களஞ்சிய’ கூட்டுறவுகளை நிதர்சனமாகக் கண்டால், அச்சம், பல மடங்கு கூடுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் நலம் நாடிய ஜனநாயக ஆட்சி பதவியில் இருந்த காலம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா?

இந்தியாவின் தேர்தல் கமிஷனின் நடைமுறைகளை அரசியல் கட்சிகள் குறை கூறுவார்கள்; மக்கள் வரவேற்பார்கள். தேர்தல் கமிஷன் நிர்வாகத்தையே, உரிய தருணத்தில் எடுத்துக்கொள்வதின் விளைவை அண்மையில் தமிழ்நாட்டில் பார்த்தோம். உலகமே அதிசயிக்கிறது. எனினும், மறுபக்கத்தையும், நாம் பார்க்கவேண்டும். தேர்தல் முடிந்த பின், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற பொருளற்ற சொற்தொடரை, வெற்றி  அடைந்தவர்கள் உரக்கக்கூவுவதும், தோல்வியடைந்தவர்கள் முணுமுணுப்பதும் வாடிக்கை. சில ‘குடியரசுகளை’ போல, தேர்தல் முடிவுகளை மூட்டை கட்டி வைக்கும் கொடுமை இந்தியாவில் இது வரை நிகழாதது, நமது பாக்கியமே. ஆனால், தேர்தல் முறைகேடுகள் அதிகரிப்பதும், அவற்றில் அட்டூழியங்கள் தலை தூக்குவதும், குற்றங்களில் சம்பந்தம் உள்ளவர்கள் பிரதிநித்துவம் நாடி, தேர்தலில் கெலிப்பதும், இதையெல்லாம் மக்கள் பொறுத்துக்கொள்வதும் வாடிக்கையாகி விட்டன, ‘திருமங்கல தேர்தல் விளையாட்டு’ என்பது போல.

தற்காலம், மாநில அரசுகளிலும், மத்திய அரசிலும், ‘பிரதமரின்/முதல்வரின் ஆளுமையில் இயங்கும் பொறுப்புள்ள அமைச்சரவை’ என்ற பிரதிநித்துவ அமைப்பு காணாமல் போய்விட்டது. பிரதமருக்கு ஆளுமை இல்லை என்று தான் தோற்றம். பேரும் ரிப்பேர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைச்சரவைகள் வெறும் இஸ்பேட் ராஜாக்கள். முதல்வர் தான் ஆளுமை. குற்றம், ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அரசு பணத்தை அபகரிப்பது, முறைகேடான அதிகார மையங்கள் எல்லாவற்றையும் ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்ற அசட்டுக்கொள்கையுடன், இந்திய மக்கள் ஜீரணித்து வருகிறார்கள். இந்த ‘லோக் பால்’ மசோதாவை பற்றி, ஒரு ஊடகம், ‘பிரதிநிதித்துவத்தில் ஆதாயம் தேடுவோர் கெலித்து விட்டனர்’ என்று எழுதியது.

1947லிருந்து இன்று வரை தேர்தல், பிரதிநித்துவம், மக்களாட்சி, மக்களுக்காக ஆட்சி என்றெல்லாம் பார்த்தால், ‘எறும்பூர கல்லும் தேய்ந்தது’ போல், இந்திய ஜனநாயகத்தின் தலை கவிழ்ந்திடுமோ என்ற அச்சம் எழுகிறது.

இந்தியாவின் ஜனநாயகம் ஏற்கனவே பறி போய்விட்டதா? பிரதிநித்துவம் பிரதிகூலமாக (எதிர்மறையாக) ஆகிவிட்டதா? நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இன்னம்பூரான்
07 01 2012
Indian-elections-villager-001.jpg
Indian elections: villagers wait in queue to cast their votes:
காப்புரிமை & நன்றி: guardian.co.uk
உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Jan 7, 2012 at 2:05 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

போதாக்குறையாக, பிரதமர் சரண் சிங்கின் திறனற்ற, வலிமை இழந்த அரைகுறை, உள்குத்து கூட்டமைப்பு ஆட்சியை, மக்கள் கட்டோடு வெறுத்தார்கள். //

அவர் உள்ளே நுழைந்ததே ஒரு கேலிக்கூத்து!   அருமையானதொரு பிரதமரை இழந்ததோடு நாட்டையும் காங்கிரஸ் என்ற பெயர் கொண்ட தீயசக்தியிடம் அடகு வைத்தாகி விட்டது நிரந்தரமாய். 

 தமிழ்நாட்டில் மக்கள் நலம் நாடிய ஜனநாயக ஆட்சி பதவியில் இருந்த காலம் யாருக்காவது நினைவில் இருக்கிறதா?//

பள்ளி மாணவியாக இருந்தாலும் அப்போதைய பொற்காலம் மறக்கவில்லை. எல்லாம் போய் நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. :(((((

இந்தியாவின் ஜனநாயகம் ஏற்கனவே பறி போய்விட்டதா? பிரதிநித்துவம் பிரதிகூலமாக (எதிர்மறையாக) ஆகிவிட்டதா? நீங்கள் தான் சொல்லவேண்டும்.//

ஜனநாயகத்தின் உண்மையான பொருளை மக்கள் உணர்ந்திருக்கிறார்களா?? சந்தேகமாவே இருக்கு.  ஆனால் இன்றிருக்கும் ஓரளவு கட்டுப்பாடான தேர்தலுக்குக் கட்டாயமாய் டி.என்.சேஷனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.  திருமங்கலம் அவர் கட்டுப்பாடில் இல்லை. இருந்திருந்தால் மாற்றம் இருந்திருக்கலாம். 

பிரதிநிதியா?? யாரு அவங்க?

யாரானும் நமக்காகப் பிரதிநியாக இருந்தால் தானே இது குறித்துச் சொல்ல முடியும்? அவங்க அவங்க சொந்தக்காரியத்தைப்பார்த்துக்கறாங்க.  :(((((((  நாம் நம் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை. செய்தாலே போதும். 

2012/1/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 7
சுவரில் அடித்தப் பந்து!

 எழுகிறது.

இந்தியாவின் ஜனநாயகம் ஏற்கனவே பறி போய்விட்டதா? பிரதிநித்துவம் பிரதிகூலமாக (எதிர்மறையாக) ஆகிவிட்டதா? நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இன்னம்பூரான்
07 01 2012

I

திவாஜி Sat, Jan 7, 2012 at 2:13 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஜனநாயகத்துக்கு நாம் இன்னும் தயாராகவில்லை. சிங்கப்பூர் மாதிரி ஒரு பெனவலன்ட் டிக்டேட்டர் தான் சரிப்படும். எங்கே... ஹும்......
2012/1/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இந்தியாவின் ஜனநாயகம் ஏற்கனவே பறி போய்விட்டதா? பிரதிநித்துவம் பிரதிகூலமாக (எதிர்மறையாக) ஆகிவிட்டதா? நீங்கள் தான் சொல்லவேண்டும்.

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Jan 7, 2012 at 3:41 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
//அருமையானதொரு பிரதமரை இழந்ததோடு//

கவனக்குறைவால் சரண்சிங்கை அருமையான பிரதமர் என்ற கருத்துத் தோன்றும்படி எழுதி இருக்கேன்.  நான் குறிப்பிட்டிருப்பது தேசாய் அவர்களையே!  சாஸ்திரிக்குப் பின்னர் வந்த நல்லதொரு பிரதமர் தேசாய் அவர்களே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.  அதன் பின்னர் நரசிம்மராவும், வாஜ்பாய் அவர்களுமே இந்தியாவுக்குக் கிடைத்த அருமையான பிரதமர்கள்.

2012/1/7 Geetha Sambasivam