Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்

GmailInnamburan Innamburan

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
19 messages

Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 6:28 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.
நமது மெத்தனங்களில் ஒன்று, ஆளுமை ஒதுக்கினால், நாமும் ஒதுக்குவது. கண்டால் தான் காமாட்சி நாயக்கன்! யதா ராஜா! ததா கூஜா! இதை விட அநாகரீகமான அடிமைத்தளை வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு பேசுகிறேன், வலி பொறுக்காமல். சர்தார் படேலுக்கு உதட்டளவில் மரியாதை. ஒரு படி கீழே நேதாஜிக்கு. ராஜாஜி என்றால் தள்ளுபடியே. ஏன்? இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டடிப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி?)  அருகிலிருந்து கண்டோம். பாரிசவாயுவினால் நலம் குன்றியிருந்தார், சாவர்க்கர், என்று ஞாபகம். 1966ல் சல்லேஹனம் இருந்து (உணவு, நீர், மருந்து எல்லாவற்றையும், சக்கரவர்த்தி சந்திரகுப்த மெளரியர் மாதிரி உயிரை பரித்யாகம் செய்து விடுவது) ஆத்மஹத்தி செய்து கொண்டார். அவரை பற்றி சில வார்த்தைகள்.
இங்கிலாந்தில், இந்திய விடுதலை புரட்சியாளன் என்று 1910ல் கைது செய்யப்பட்டார்; 50 வருட தீவாந்திர சிக்ஷை வழங்கப்பட்டது. தப்பித்து மார்ஸேல்ஸ் என்ற ஃப்ரென்ச் நகருக்கு ஓடிவிட்டார். பிடிப்பட்டு, இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். அங்கு தான் ஹிந்துத்துவ தேசாபிமானம் என்ற கருத்தை, சிந்தித்து, சிந்தித்து, கோட்பாடாக வகுத்தார். சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.
அவருடைய ஹிந்துத்துவ தேசாபிமானம் சமய சின்னத்துக்குள் அடங்க வில்லை; அந்த எல்லைக்குள் வளைய வரவில்லை. ஹிந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கிய மதம் எல்லாம் அவருடைய அகண்ட பாரதத்தில் ஒன்று சேர்ந்து இயங்கின. தன்னை வெளிப்படையாகவே நாத்திகன் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். இஸ்லாமிய பிரிவினைக் கொள்கைகளும், அந்த சமயமும், கிருத்துவமும் நாட்டின் எல்லை தாண்டிய விசுவாசம் வைத்திருந்ததை அவர் ஆதரிக்கவில்லை. சாதி வெறியையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார். ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை திரும்பவும் கொணர முயன்றார். ஹிந்து மஹாசபையின் அக்ராசனராக 1937லிருந்து 1943 வரை பணி புரிந்த சாவர்க்கர், முஸ்லீம் லீக் உடனும், கம்யூனிஸ்ட்களுடனும் சேர்ந்து இரண்டாவது உலக யுத்தத்தில் இங்கிலாந்தை ஆதரித்தார்.ஹிந்துக்களை ராணுவத்தில் சேர தூண்டினார். 1947க்கு பிறகு ஹிந்து மஹா சபையில் பிளவுகள் தோன்றின. ஷியாம் பிரசாத் முக்கர்ஜி, கருத்து வேற்றுமையினால் உப அக்ராசனர் பதவியிலிருந்து விலகினார்.
1947ல் சுதந்திரம் வந்தாலும் வந்தது; 1905லியே சுதந்திர யக்ஞத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரள் திரளாக கலந்து கொண்டாலும், அவருடைய ராணுவ நோக்கை மரியாதை செய்யும் வகையில் ராணுவ வண்டி கொடுங்கள் என்ற (அநாவசிய) வேண்டுகோளை, பாதுகாப்பு அமைச்சர் சவான் நிராகரித்தார். மஹாராஷ்ட்டிர மாநில சார்பில் ஒரு அமைச்சர் கூட மயானத்துக்கு வரவில்லை. நாடாளுமன்ற மரியாதை தர, அவைத்தலைவர் மறுத்தார். சவானோ, மொரார்ஜி தேசாயோ அந்தமான் சென்ற போது, இவர் இருந்த சிறையின் குச்சு அறையை பார்வையிட மறுத்தனர்.
சாவர்க்காரின் தீவிர ஹிந்துத்வ சிந்தனைகள், பாரபக்ஷமற்ற, மதவெறி தணித்த இந்திய ஜனநாயகத்தின் ஒற்றுமை பண்பாட்டை குலைக்கும் என்று ஒரு கட்சி; ஜனநாயக மரபை குலைக்காமல், மக்களின் அபிலாஷையை தான் அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன என்பது எதிர் கட்சி. காமன் எரிந்த கட்சி/எரியாத கட்சி விதண்டாவாதம் போல் இது இருக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிந்தனைகளை நடுநிலையில் வைத்து ஆராய்வது தான் நியாயம் என்ற ஆய்வு ஒன்றை, ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தந்துள்ளார். இரு சாராரும், சாவர்க்காரின் தத்துவம், சிந்தனை, கருத்துக்கிட்டங்கி ஆகியவற்றை மேலெழுந்தவாரியாகத்தான், அவரவரது பிரசார பீரங்கிகளுக்கு பயன் படுத்தினர். அது நியாயமில்லை என்கிறார். அந்த ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இரு காரணங்கள்: 1. ஆய்வுகட்டுரையே சுருக்கி அமைக்கப்பட்டிருப்பது. 2. இந்தியாவில், ஆய்வின்மையால், வரலாறு நடுநிலை பிறழ்ந்து இருப்பது. இன்று ராமச்சந்திர குஹா, கோபால்கிருஷ்ண காந்தி போன்றோரின் படைப்புகள் போன்ற ஆய்வுகள் பெருகவேண்டும். உதாரணத்திற்கு, சில வினாக்கள்.
 1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
 2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
 3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
 4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:
 1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
 2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது. 
 3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
 4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
உசாத்துணை:

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 fromhttps://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 7:58 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அருமையான இழை.  எனக்கு சாவர்க்கரிடம் மிகவும் மதிப்பும், அபிமானமும் உண்டு.  அவரை இருட்டடிப்புச் செய்தது நம் அரசியல்வாதிகளின் பிழைப்புக்குப் பயன்படுகிறது.  இல்லை எனில் மக்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். :((((((

On Sat, Feb 25, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.

 1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
 2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது. 
 3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
 4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
உசாத்துணை:

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 fromhttps://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 7:59 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சாவர்க்கரைக் குறித்து நிறையப் படிக்கவேண்டும்.  நான் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டதே பல புத்தகங்களையும் படித்துத்தான்.   அவருடைய தேசபக்திக்கு உரிய மரியாதை தரப்படவில்லை.  
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 8:05 PM
To: Geetha Sambasivam 
Dear GS,
Why don't you read the excellent reference that I have given and give its synopsis in Tamil? Take your own time. No hurry. Either you or I can suitably mention about its coming in this thread. This solo thread will become interactive.
Innamburan
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 8:15 PM
To: Innamburan Innamburan
அன்பார்ந்த ஐயா ,

படிக்கிறேன்.  ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகும்.  சுபாவிற்குக் கட்டுரை ஒன்று தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.  மேலும் ஒரு சில கட்டுரைகள் தயார் செய்து கொடுக்க வேண்டும்.  அதற்காகப் படிக்கிறேன்.  நீங்கள் சொன்னாப்போல் நிதானமாகப் படித்துவிட்டுச் சொல்கிறேன்.  மார்ச் மாதம் 11-ஆம் தேதி இந்தியா செல்கிறோம்.   ஒரு மாதம் முன்னால் செல்லும்படியான சூழ்நிலை.  அதோடு ஏப்ரலில் ஒரு கல்யாணம்.  மற்றவை பின்னர்.  

வணக்கங்களுடன்,

கீதா
[Quoted text hidden]

Innamburan Innamburan
ததாஸ்து
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 8:49 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை.  //

முக்கியமாய் இதைக் குறித்துக் கேட்கவில்லை.  காந்தியும், நேருவும் சிறைவாசம் செய்தாலும் சகல வசதிகளோடும் செய்தார்கள்.  அவர்களுக்கு அரசியல் கைதிகள் என்ற அந்தஸ்தோடு அன்றாடம் படிக்கத் தினசரிகளும் கிடைத்தன.  வெளி உலகோடு தொடர்பும் இருக்கும்.  காந்தி தன் காரியதரியான மஹாதேவ் தேசாயையும், மனைவியான கஸ்தூரிபாவையும் கூட உடன் வைத்துக்கொண்டார்.  அதோடு மருத்துவ வசதிகளும் இருந்தன.  இல்லையா?

ஆனால் சாவர்க்கர்??? அவர் இருந்தது தனிமைச் சிறையில். கூட யாரும் இல்லை;  யாரையும் பார்க்கவும் முடியாது.  வேலையோ கடுமை.  சொந்த ஊரை விட்டு, நாட்டை விட்டு எங்கோ கண்காணா இடத்தில் மனிதர்களைக் காணமுடியாமல் இருந்தபோது உடல் மட்டுமா குலையும்? உள்ளமும் நலியும்.  அந்த நலிவில் கிடைத்த ஒரு சின்ன இடைவெளிப் பலவீனத்தில் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கலாம்;  கொடுக்கும்படியான சூழ்நிலை இருந்திருக்கும்.  ஆனால் காங்கிரஸ்காரர்கள் இதைத் தான் பெரிது படுத்திப் பேசுகின்றனர்.  அவர்களில் எவராவது இத்தகைய தனிமைச் சிறையை அனுபவித்திருக்கின்றனரா?  காந்தி, நேரு, படேல் உட்பட???????

ஷ்யாம் ப்ரசாத் முகர்ஜியுடனான கருத்து வேறுபாடு தனி ரகம். இல்லையா?

On Sat, Feb 25, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
 சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.

 1. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
உசாத்துணை:

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 fromhttps://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 8:52 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அவர் இறந்த விதம் குறித்துச் சொல்லவே இல்லையே?

On Sat, Feb 25, 2012 at 12:28 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்

 1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
 2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
 3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
 4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:
 1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
 2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது. 
 3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
 4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இன்னம்பூரான்
25 02 2012
Inline image 1
உசாத்துணை:

Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 fromhttps://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 8:53 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
யோகமுறையில் மரணத்தைத் தழுவியதாகக் கேள்வி.  அப்போ நான் பள்ளி மாணவி.  என்னோட கமர்ஷியல் ஜியாக்ரபி+கமர்ஷியல் ப்ராக்டிஸ்(இப்போதைய எகனாமிக்ஸ்) ஆசிரியர் தான் வீரசாவர்க்கர் குறித்து முதலில் விபரமாக எங்களுக்குச் சொன்னவர்.  அவர் இறந்த செய்தியையும் அப்போதே அறிந்தோம். 
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 8:54 PM
To: Geetha Sambasivam
நீங்கள் சொல்லும் இரண்டு கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. இடைவெளி பலவீனம் என்று தோன்றவில்லை. அவர் அசகாய சூரர். அந்த மார்ஸேல்ஸ் தப்பியது பெரிய விஷய்ம் நான் அதை விளக்கி எழுதுகிறேன், யாராவது கேட்டால், நீங்கள் உள்பட.
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Feb 25, 2012 at 9:00 PM
To: Geetha Sambasivam
சொல்லியிருக்கேனே. சல்லேஹனம். அது ஒரு சமண மரபு. சரவணபெல்கோலா வந்து, அங்கு சல்லேஹனம் செய்து, சந்திரகுப்த மெளரியர் ஆத்ம விடுதலை செய்து கொண்டார். அதே மாதிரி, இவரும் செய்தார். ஆனால், ஜைன மரபு அல்ல. சாவர்க்கரின் பிரத்யேக உறுதி. பதஞ்சலி மகரிஷியின் ஏகலைவ சிஷ்யன்.
Geetha SambasivamSat, Feb 25, 2012 at 9:08 PM
To: Innamburan Innamburan
2-வது பத்தியை இப்போதுதான் திரும்பப் படித்தேன்.  அவசரமாய்ப் படித்ததின் விளைவு சொல்லலைனு நினைச்சுட்டேன்.  மன்னிக்கவும். 
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Feb 25, 2012 at 9:10 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
2--ஆவது பத்தியில் குறிப்பிட்டிருப்பதை இப்போது தான் கவனித்தேன், மன்னிக்கவும்.  அவசரமாய்ப் படித்ததன் விளைவு.    மற்றபடி அவர் தப்பியது மன பலவீனம் இல்லை என்றால் அது குறித்தும் விபரமாக எழுதவும்.
[Quoted text hidden]

திவாஜி Sun, Feb 26, 2012 at 3:52 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இவங்க எல்லாம் ஹோலி கவ்ஸ்!
சாவர்கர் சாதா கௌ! 

2012/2/26 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
காந்தி, நேரு, படேல் உட்பட???????  

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
[Quoted text hidden]

Dhivakar Sun, Feb 26, 2012 at 5:51 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சொல்வதற்கு நிறைய இருக்கிறது. 

மிக நிறைய 

dhivakar

2012/2/26 Geetha Sambasivam 

DEV RAJ Sun, Feb 26, 2012 at 5:59 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
க்யா ப³தாஊ ̐ ?
’இ’ ஸாஹேப்³ நே கமால் கர் தி³யா ஹை |

தேவ்

On Feb 25, 11:28 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
>    1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
>    2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
>    3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
>    4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
>
> சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால்,
> அலசவேண்டும். இப்போதைக்கு:
>
>    1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன.
>    வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.>    2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல,
>    சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக
>    வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது.
>    3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு
>    இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ
>    இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன்
>    பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
>    4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை
>    முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
>
> சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
>
> இன்னம்பூரான்
>
> 25 02 2012
>
http://www.kamat.com/database/pictures/philately/s272.jpg
>
> [image: Inline image 1]
>
> உசாத்துணை:
>
http://www.savarkar.org/
>
http://www.savarkarsmarak.com/
>
> Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A
> Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper
> No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics:
> Retrieved on Feb 24, 2012 fromhttps://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni...
[Quoted text hidden]

Dhivakar Sun, Feb 26, 2012 at 6:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வீர் சவர்க்காருக்கு வீர் சிவாஜிதான் தெய்வம், எல்லாமுமே!! 

சிவாஜியைப் பற்றி அவர் எழுதுகின்ற போதெல்லாம் அந்த ஒவ்வொரு வரியும் அவர் சிவாஜியின் மீது வைத்த பக்தியைப் பற்றி சிறப்பாகப் பேசும். மராத்தியர் மீதும் சிறப்பான இவருக்கு உண்டு. 

மராத்தியர் ஒருவரே இந்தியாவில் மறுபடியும் சநாதனதர்மத்தை நிலைத்து வைக்கப் பாடுபட்டனர் என்பதை அடிக்கடி எழுதினார். பேஷ்வாக்கள் மீதும் அவர்கள் பாரத சநாதானதர்மத்தைக் காக்க உதவியதையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். நம்மில் சிலர் தனித்தமிழ்ப்பெருமை பேசுவது போல மராத்தியர் பெருமை இவரிடம் அதிகமாகவே உண்டு (நான் இவர் எழுத்துக்களைப் படித்ததில் புரிந்துகொண்டது).

சிவாஜியின் வம்சத்தினர் தமிழகத்தைப் பிடித்தபின்னர் முகலாயருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றி அதிகம் எழுதவில்லை. 

இந்தியாவுக்கு மிக அரிதாகக் கிடைத்த தலைவர் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்கமுடியாது.
[Quoted text hidden]
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
[Quoted text hidden]

S.Krishnamoorthy Sun, Feb 26, 2012 at 6:12 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மிக அருமையான பதிவு.  எனக்கு நினைவுக்கு வருகிறது.  கோடைஇடி மஹாலிங்க அய்யர் எனப்புகழ் பெற்ற ஹிந்து மஹா சபாக்காரர் (டைரக்டர் எம்.வி. இராமன் அவர்களின் தந்தை) வீர விநாயக  தீர தாமோதர சூர சாவர்க்கர் என்று வி.டி. சாவர்க்கரைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கியதை.
கிருஷ்ணமூர்த்தி
[Quoted text hidden]
--
S. Krishnamoorthy
[Quoted text hidden]

கி.காளைராசன் Sun, Feb 26, 2012 at 10:00 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

நல்லதை நோக்கி நடந்தாலும்,
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிந்தித்துச்  செயலாற்றியுள்ளனர்.

2012/2/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 1. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
இவர்போன்று ஏராளமானோர் இன்றும் உள்ளனர். எனவே இவர் பற்றி இன்னும் அறிந்திட விரும்புகிறேன்.   ஐயா, தாங்கள் அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதுபற்றியும் சொல்லிட வேண்டுகிறேன்.

-- 
அன்பன்
கி.காளைராசன்