Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:25 ‘பழி’ (J'ACCUSE ...!")
அன்றொரு நாள்: ஜனவரி:25 ‘பழி’ (J'ACCUSE ...!")
5 messages

Innamburan Innamburan Wed, Jan 25, 2012 at 10:43 AM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:25
‘பழி’ (J'ACCUSE ...!")
உலகம் சிறியது, சிந்தனை பரவியிருந்தால். இந்தியாவின் கான்பூரில் ஒரு வழக்கு. குற்றவாளியின் தன்னிலை விளக்கத்தைக் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் அது 1932ம் ஆண்டு மீட்கப்பட்டது.‘அன்றொரு நாள்: ஜனவரி:13:நீயோ அரசு! நீயே கள்வன்!’ என்ற இழையின் தொடராக, இது அமைந்தது தற்செயலே. ஆனால் முற்றிலும் பொருத்தமே.
இந்தியன் பீனல் கோட் 121 A யை மீறி மாட்சிமை தங்கிய அரசரின் முடியாட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாகப் பழி சுமத்தபட்டது. 
பின்னணி: 
1920லிருந்து இந்தியர்களின் சுயாட்சி, கலோனிய கவிழ்ப்பு, தொழிலாளிகளின் புரட்சி என்றெல்லாம் இடை விடாமல், பேசி. எழுதியதும் குற்றமே.
அரசு அஞ்சும் வகையில் அவர்களின் எழுச்சியை ஊக்குவித்ததும் குற்றமே.
மற்ற முதலாளித்துவ ஆளுமைகளில் ஒத்துழைப்புடன், குற்றவாளியை, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், இத்தாலி, ஹாலண்ட், ஸ்விட்சர்லாந்து மற்றும் பல நாடுகளிலிருந்து வெளியேற்றினோம். அவர் அடங்கவில்லை. அமெரிக்காவுக்கு டிம்கி கொடுத்தவர், அவர்.
அவருடைய புரட்சி இயக்கத்தை ஒடுக்கினோம்; அடக்க முடியவில்லை.
1926-28 களில், இந்தியாவின் பல இடங்களில் வேலை நிறுத்தங்கள்.
1929ல் ஒரு சங்கிலி தொடராக, தொழிற்சங்கத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1930ல் குற்றவாளி கலோனிய அரசை வீழ்த்தப் புரட்சி துவக்கினார்.
போதாக்குறையாக, ஒரு தேசீய அரசியல் சாஸன மையம் அமைக்கத் திட்டம் வகுத்தார். மக்களை தூண்டினார். 1929ல் அரசு முடக்கிய தொழிற்சங்கங்களை உயிர்ப்பித்தார்.
ஆனால், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. அவர் இந்தியாவுக்கு வந்து விட்டார் என்று வதந்தி. பம்பாய்,கல்கத்தா வாரணாசி, லக்னோ, ஃபைஜாபாத் ஆகிய ஊர்களில் அவர் தான் என்று சந்தேஹித்து, பலரை கைது செய்தோம். அவர் என்னமோ அகப்படவில்லை. அவர் ஆவியுருவில் தான் உலவுகிறறோ?
'பல நாள் திருடன்...! ஜூன் 21, 1931 அன்று, ஏழு வருடமாக செல்லுபடி ஆகாத பிடி வாரண்டை வைத்துக்கொண்டு, அவரிருந்த சிறிய வீட்டை பெரிய போலீஸ் படையுடன் சூழ்ந்து கொண்டோம். தூங்கிக்கொண்டிருந்த ‘ராஜத்துரோகியை’ கைது செய்தோம். மேலும், 11 நாட்களில் நாடு முழுதும் நூற்றுக்கணக்கான கைதுகள். ஜவஹர்லால் நேரு ஓடி வந்தார். நாங்கள் அவரை குற்றவாளியை பார்க்க அனுமதிக்கவில்லை. ஏன்? வக்கீலையே கிட்ட விடவில்லை.  மக்களின் எதிர்ப்பும், ஆரவாரமும் வலுத்தது. ரகசியமாக, அவரை கான்பூருக்கு கொண்டு போனோம். ஆனால், உலகெங்கும் எதிர்ப்பு. வரலாற்று ஆசிரியர் எடுவெர்ட் ஃபக்ஸ்: ‘...இந்திய பிரச்னை உலகரங்கில் வந்து விட்டது’ என்றார். ஆல்பெர்ட் ஈன்ஸ்டீன் அவருடைய விடுதலை கோரினார்.'
என்ன பயன்? ஆகஸ்ட் 1, 1931 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வக்கீலுக்கு அனுமதி இல்லை. அவரே, வழக்கை விசாரித்துத் தான் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று வாதாடினார். என்ன தான் போலீஸ் இருந்தாலும், மக்களின் கொந்தளிப்பு அடங்கவில்லை. அஞ்சிய மாஜிஸ்ட் ரேட் விசாரணையை சிறைக்குள் வைத்துக்கொள்ள தொடங்கினார். குற்றவாளியின் தந்திகளை விலாசதாரர்களுக்கு அனுப்ப மறுத்தார். ஓடி வந்த நேரு திருப்பி அனுப்பப்பட்டார். குற்றவாளி ஒரு குச்சில் அடைக்கப்பட்டார். இதழ்கள் மறுக்கப்பட்டன. நிருபர்களை அண்டவிடவில்லை. அவருக்கு தன்னிலை விளக்கம் தர அனுமதி மறுக்கப்பட்டது. ராஜத்துரோக உரைகளுக்கு கோர்ட்டார் அனுமதி கிடையாது என்று முழங்கிய மாஜிஸ்ட் ரேட், விசாரணையை நவம்பர் 3,1931 அன்று எடுத்துக்கொண்டார். நம்மவரோ, இந்த ஒருதலை விசாரணைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். குண்டுக்கட்டாக, தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஜனவரி 9, 1932 அன்று அவருக்கு 12 வருடங்கள் தீவாந்திர தண்டனை வழங்கப்பட்டது. கைதியின் உடையில் அவர் பரைலி சிறைக்கு ரகசியமாகக் கொண்டுப்போகப்பட்டார். அவர் அங்கிருக்கும்போது, இந்த தன்னிலை விளக்கம் அமெரிக்காவில் வெளியானது. 
அதை கேட்போமா? அதன் தலைப்பே: 
J'ACCUSE ...!"
(தொடரும்)
இன்னம்பூரான்
25 01 2012

திவாஜி Wed, Jan 25, 2012 at 11:30 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
yes!
2012/1/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
J'ACCUSE ...!"--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam Wed, Jan 25, 2012 at 12:39 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
waiting, waiting. Jai Hind!

2012/1/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:25
‘பழி’ (J'ACCUSE ...!")

அதை கேட்போமா? அதன் தலைப்பே: 
J'ACCUSE ...!"
(தொடரும்)
இன்னம்பூரான்
25 01 2012


Swaminathan Venkat Wed, Jan 25, 2012 at 2:07 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
J"  Accuse..- இதை நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டிருக்கிறேன். இது மிகப் புகழ் பெற்ற குற்றச்சாட்டு   Emile Zola  என்னும் ப்ரெஞ்ச் நாவலாசிரியர் ப்ரெஞ்சு அரசைக் குற்றம் சாட்டி எழுதிய  பகிரங்க கண்டன அறிக்கை. ப்ரெஞ்ச் ராணுவ அதிகாரி ஒருவன் இர்ண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனுக்கு உளவு சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டு தீவாந்திர சிடசைக்கு அனுப்பப் பட்டான். அவன் பெயர் ட்ரைஃபஸ். இது பெயர் மாறாட்டத்தால் விளைந்த அப்பாண்ட குற்றச்சாட்டு என்று எமில் ஸோலா வின் தலைமையில் அவனை விடுவிக்க ஒரு பெரும் போடாட்டம் நடந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஸோலா எழுதிய புகழ்பெற்ற அறிக்கை  J '  Accuse எனறு படித்திருக்கிறேன். இது பற்றிய ஒரு புத்தகச் சுருக்கம் 50-களிலோ அல்ல்து 60-க்ளிலோ  Readers Digest-l  வெளிவந்தது.   இன்னம்பூராரருக்கு தெரிந்திருக்கும்.


Innamburan Innamburan Wed, Jan 25, 2012 at 2:55 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88
நண்பர் வெங்கட் சுவாமிநாதன் இதை கவனித்துப் படித்து கருத்தளித்தற்கு நன்றி. அவருடைய பின்னூட்டம் ஊக்கமளிக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக, அன்றாடம் எழுதி வருகிறேன். ஜனவரி 13ம் தேதி, எமிலி ஜோலாவின் J"  Accuse பற்றி எழுதியிருந்ததை, உங்கள் செளகரியத்திற்காக, கீழே பதிவு செய்கிறேன்.  முழு டெக்ஸ்ட் இருக்கிறது.
இன்றைய இடுகை தொடரும்.
இன்னம்பூரான்

**************
அன்றொரு நாள்: ஜனவரி:13
நீயோ அரசு! நீயே கள்வன்!

வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே
        (சிலப்பதிகாரம்: வழக்குரை காதை :  24-29)
ஜனவரி 13, 1898 ஒரு கரி நாள், ஃபிரான்ஸ் நாட்டின் வரலாற்றில். எமிலி ஜோலா என்ற பிரபல இலக்கியவாதி அக்காலத்து அரசின் மீது ‘ ‘பழி சுமத்துகிறேன்’ (J'ACCUSE ...!")-  என்று ஒரு சிறிய காட்டமான கட்டுரையில் கரும்புள்ளி குத்தி,குற்றம் சாட்டினார். அன்றைய தினமே, அங்கு ‘வைகறை’ என்ற புகழ்வாய்ந்த இலக்கிய இதழ் அதை பிரசுரித்தது. உலகத்தின் இதழியல் வரலாற்றில் இது பெரிய சாதனை. கூகிளாண்டவரிடம் J'ACCUSE ...!" என்ற சொல்லை தேடினால் இருபது லக்ஷம் வரவுகள். அந்த அளவுக்கு அந்த சொற்றொடர்- சகுனி, கூனி, விபீஷணன், வாலி வதம், quisling, ஆகியவை போல - அகராதியில் புதுவரவாகி விட்டது. இல்லை?  ‘அறிவு அறை போகிய’ நிலை, ஒரே அடியாக, உலகெங்கும் அதிகரித்து வருகிறதா? 
எமிலி ஜோலாவின் கட்டுரை அந்நாட்டு ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்கக்கடிதம். சர்ச்சையின் சிகரம். மனதை இளக வைக்கும் இலக்கியம். உண்மை விளம்பி. இந்த அளவுக்கு சட்டம், தார்மீகம், சமுதாய நோக்கு ஆகியவற்றை பாதித்த இதழியல் கட்டுரை யாதும் வந்தது இல்லை. நடந்தது என்ன?
கேப்டன் ஆல்ஃப்ரெட் ட்ரேஃபுஸ் என்ற யூதர் பீரங்கிப்படையில் பணியாற்றி வந்தார். 1894ல் ஜெர்மனிக்கு வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி, அவமதிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார். அவர் முற்றிலும் குற்றமற்றவர். வழக்கு முறைகேடாக நடந்தது. சாக்ஷியம், பொய்யும், புனைசுருட்டும். அவருக்கு உண்மை உரைக்க வாய்ப்பு அளிக்கவில்லை. ராணுவத்திலிருந்து அவமதித்தபின் தூக்கி எறியப்பட்டார். ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கூளித்தீவில் கடுங்காவலில் வைக்கப்பட்டார். அநீதியை பற்றி 1896ல் தெரியவந்தாலும், உயர் அதிகாரிகள் மாபெரும் தவறுகளை, உண்மை குற்றவாளி எஸ்டெர்ஹெசி என்று தெரியவந்ததையும், மூடி மறைத்தனர். எமிலி ஜோலாவின் சான்றுகளும், வாதத்திறனும், சொல்லாட்சியும் இறவா வரம் பெற்றவை. ஓரிடத்தில், ‘உண்மை பீடுநடை போடுகிறது. அதை தடுத்து நிறுத்த இயலாது’ ("la verite est en marche et rien ne l'arretera") என்றார். அண்ணல் காந்தி மாதிரி, இருமுனைப்போர். 1. தர்மம் வெல்லவேண்டும். 2. துணிவு இருந்தால், அரசு தன் மீதே வழக்குத்தொடரட்டும். பல உண்மைகளை வெளிக்கொணரலாம். அதே மாதிரி செய்தார்கள். ஒரு வரியை பிடித்துக்கொண்டுக் காளிங்க நர்த்தனம் செய்தார்கள். அதற்குள், உலகமே விழித்துக்கொண்டது. லண்டன் டைம்ஸ்: ‘உண்மையையும், மனித உரிமையையும் போற்றி பாதுகாத்தது தான், ஜோலாவின் குற்றம். சுதந்திர ஆத்மாக்கள் அவரை பாராட்டுவார்கள்...’. ஜோலா வழக்கை கண்காணிக்க, உலகமே திரண்டு வந்தது. என்ன பயன்? யூத எதிர்ப்பு பேயரசாக இயங்கியது. அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை. அவரோ இங்கிலாந்துக்கு புலன் பெயர்ந்து, அங்கிருந்து சண்டை போட்டார். ஜூன், 1899ல் ட் ரேஃபுஸ், ஒரு தடுமாற்றத் தீர்ப்புக்குப் பின், விடுதலை ஆனபின் தான், திரும்பி வந்தார். கஜானா காலி.  
1906ம் ஆண்டு, ஃப்ரென்ச் அரசு ட் ரேஃபுஸ் குற்றமற்றவர் என்று சொல்லி, விருது அளித்து, ராணுவத்தில் உயர் பதவியில் அமர்த்தியது. அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னால், ஜோலா மறைந்து விட்டார். ட் ரேஃபுஸ் வந்திருந்தார். அத்தருணம், இரங்கல் உரை ஆற்றிய அனடோல் ஃப்ரான்ஸ் என்ற சான்றோன், ‘...ஜோலா மனித இனத்தின் மனசாட்சியில் ஒரு நொடி...’ என்றார்.
காலத்தின் கோலமடா! ஜூன் 4, 1908 அன்று ஜோலாவின் சடலம் ‘பாந்தியன் புனித மையத்திற்கு’ மாற்றப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ட் ரேஃபுஸ்ஸை க்ரகெரி என்றவன் சுட்டுக் காயப்படுத்தினான். அவன் தண்டிக்கப்படவில்லை. தப்ப விடப்பட்டான்!
எதற்கு இந்தக்கதை என்று உம்மில் யாராவது கேட்கலாம். அஃறிணையிலும், உயர்திணையிலும், ஆண்பால், பெண்பால் இரண்டிலும் கணக்கில் அடங்காத ட் ரேஃபுஸ் பலிகடாக்கள். ‘க்ரகெரி‘ போன்றவர்கள், மறைமுக அதிகார மையங்களில்.  J'ACCUSE ...!" என்று கொடி பிடித்து, ஆக்கபூர்வமான, மனித இனத்தின் மனசாட்சியின் நொடிகளாக, அச்சமின்றி இயங்கும் எமிலி ஜோலாக்கள், அவசரத்தேவை. 
எங்கே என்று கேட்கிறீர்களா? ~ இந்தியாவில் தான்!
இன்னம்பூரான்
13 01 2012

உசாத்துணை:
Wilkes, D.E. (1998): Flagpole Magazine: (February  11, 1998):"J'ACCUSE ...!": EMILE ZOLA, ALFRED DREYFUS,AND THE GREATEST NEWSPAPER ARTICLE IN HISTORY”
***************
[Quoted text hidden]