Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 24 தாரதம்யம்

GmailInnamburan Innamburan


அன்றொருநாள்: ஃபெப்ரவரி 24 தாரதம்யம்
9 messages

Innamburan Innamburan Thu, Feb 23, 2012 at 6:47 PM

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 24
தாரதம்யம்
சர்க்கரை என்று மணலை கட்டிக்கொடுத்து விட்டான் என்று வழக்கு. யுத்தகாலம். சர்க்கரைக்கு பஞ்சம். ‘வீசை எட்டணா’ என்றான். எல்லா பொட்டலங்களும் விற்றுப்போயின. வீட்டுக்குப்போனால், டோஸ்!  வாங்கியது மணல். ஏன் வழக்குப் போடமாட்டார்கள்? ஜட்ஜ் தள்ளுபடி செய்து விட்டார், விற்றவர் தரச்சான்றை தாழ்த்தி விற்கவில்லை என்று!
தேயிலைத்தூளில் குதிரைச்சாணி, யானை என்று சொல்லி குதிரையை விற்பது, 22 காரெட் என்று 18 காரெட் தங்கம், கற்பு இழந்த மின் சாதனங்கள், சாக்கடைக்கு தங்கக்குழாய் போன்ற செப்பிடு வித்தைகளை தடுக்க ஆர்வம் கொண்ட பொறியியல் வல்லுனர்கள் ISA (International Federation of the National Standardizing Associations) என்ற அமைப்பை ந்யூ யார்க்கில் நடந்த ஆலோசனைப்படி 1926ல் ஸ்விட்ஸர்லாண்டின் ஜெனிவா நகரில் அமைத்தனர். அடுத்தபடியாக, U N S C C ( U n i t e d N a t i o n s S ta n d a r d s C o o r d i n a t i n g C o m m i t te e ) என்ற அமைப்பு ஐ.நா. ஆதரவோடு 1944ல் லண்டனில் அமைக்கப்பட்டது. அதன் தளபதியான சார்லஸ் லெ மெஸ்த் ரேயின் சுவாசமே எல்லா பொருள்களுக்கும் தர நிர்ணயம் செய்து, சான்று அளிப்பது. 1906 லியே நிறுவப்பட்ட International Electrotechnical commission (IEC) யின் காரியதரிசி, இவர். அவரது விடா முயற்சியும், மற்றும் பலரின் ஆர்வமும் கை கூடி, அக்டோபர் 1946ல் லண்டனில் ஆலோசனைகள் நடந்தபின் IS0 என்ற அமைப்பை ஃபெப்ரவரி 23/24,1947 அன்று துவக்கினர். அதன் இலக்கு:’ பொறியியல்/ தொழில் பொருள்களின் தர நிர்ணயம்/சான்று செய்ய, உலகளவில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவது. இது மாதிரி நம் எல்லாருக்கும் பரிச்சியமானது அக்மார்க். அந்த விஷயத்தில் இந்தியா முன்னோடி. அதற்கான சட்டம்: Agricultural Produce(Grading and Marking ) Act, 1937 as amended in 1986. இந்தியாவின் தர நிர்ணய/சான்று கழகம் 1947ல் ஒரு ரிஜிஸ்டர்ட் சொசைடியாக அமைக்கப்பட்டது. நல்ல எண்ணம். திரிசங்கு சுவர்க்கம். நாற்பது வருடங்கள் கழித்து ஏப்ரல் 1 (!), 1987 அன்று சட்டரீதியாக, Bureau of Indian Standards தலையெடுத்தது. 
சுருக்கமாக வரலாறு படைத்தாயிற்று. இனி சுய அனுபவம்/புராணத்தில், ஒரு துகள். அதை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரில் சொல்வது தான் சரி. அது தான் என்’ அரெஸ்ட் வாரண்ட்டுடன்’ நின்று போய் விட்டதே, கேட்பார் இல்லாமல்! எதற்கும், இந்தியாவின் தர நிர்ணய/சான்று சொசைடியுடன் யான் பட்ட அனுபவங்களில் ஒன்றை மட்டும் பற்றி சொல்பமாக எழுதி விட்டு, நகருகிறேன். கேசு பூரா சொன்னால், Ripley's 'Truth is stranger than Fiction' மாதிரி இருக்கும் உண்மைகள்.
ஒரு உரையாடல்: விமானத்தில்:
மேலதிகாரி:  டில்லியா? என்ன பிரமேயமோ?
நான்: இந்தியாவின் தர நிர்ணய/சான்று சொசைடியுடன் ஒரு மோதல்.
மேலதிகாரி: ஏற்கனவே இஞ்சினீயர்களுடன் லடாய். இது வேறையா? ஜமாய்!
அடுத்த உரையாடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு:
முதலமைச்சர்: உன் ரிப்போர்ட்டை படித்தேன்.
நான்: சார்.
முதலமைச்சர்: தயை தாக்ஷிண்யமில்லாமல் எழுதியிருக்கிறாய்.
நான்: சார்.
முதலமைச்சர்: எனக்கு ஒரு உத்தரவாதம் வேண்டும். 
நான்: சார்.
முதலமைச்சர்: நீ சொன்னதை யாராலையும் மறுக்க முடியாது என்று உத்தரவாதம் தர முடியுமா?
நான்: சார். தருகிறேன்.
முதலமைச்சர்: உனக்கு இத்தனை நுணுக்கங்கள் எப்படி தெரிய வந்தன?
நான்: சார்.
முதலமைச்சர்: உனக்கு பொறியியல் அனுபவம் இல்லை என்று தான் உன்னை பற்றிய குறிப்பு கூறியது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
நான்: சார். பொறியியல் அனுபவம் இல்லாதது தான் எனக்கு சகாயம்.
முதலமைச்சர்: எப்படி?
நான்: சார். தெரியாததைத் துருவி துருவி வினா தொடுப்பது, திறந்த மனம் இருந்தால் தான் முடியும். அறியாமை திறந்த மனதின் செவிலித்தாய்.
முதலமைச்சர்: புன்சிரிப்புடன். You are a rogue.
(தேனீர் வரவழைத்தார். அது மகுடம் அணிவித்த மாதிரி.)
சமாச்சாரம்: 
அரசை நிர்பந்திக்கும் தோரணையில் விஜிலன்ஸ் கமிஷன் என்னிடம் ஒரு விசாரணையை கொடுத்தது. ஆழ்கிணறுகளுக்குக் குழாய் வாங்கியதை பற்றி. தரநிர்ணயப்படி electronically welded pipes (ERW) வாங்க வேண்டும். வாங்கியதோ electrically welded pipes (EW). தரம் தாழ்ந்தவை. கோடிக்கணக்கில் வீண் செலவு. இது என் திடுக்கிடும் பல முடிவுகளில் ஒன்று. திறந்த விசாரணை தளத்தில். நான் கேட்டப்படி இரு தரமும் வைக்கப்பட்டிருந்தன. இரண்டையும் கூர்ந்து கவனித்த முதல்வர், வித்தியாசமே தெரியவில்லையே என்றார். பொறியாளர்கள் ஆமாம் போட்டார்கள். நான் முதலில் ERW குழாயின் வெல்டின் மீது என் விரலை இழுத்துக்காண்பித்தேன். ஒன்றும் ஆகவில்லை. பிறகு EW குழாயின் மீது இழுத்தேன். ரத்தம் வந்தது. விளக்கம்: ERW பெரிய தொழிற்சாலையில் செய்யப்பட்டது, மிஷின் மூலம். EW கிராம கைத்தொழில். ஆழ்கிணற்றுத் தண்ணி பிச்சிக்கும். 
மூன்றாவது உரையாடல்:
முதலமைச்சர்: நாம் கேட்கும் அளவுக்கு ERW பைப் கிடைக்காது என்று சான்றுக்கடிதம் கொண்டு வந்துள்ளார்கள். நீ என்ன சொல்கிறாய்?
நான்: சார். நான் வாங்கித்தருகிறேன். சில நிபந்தனைகள் உண்டு, சார்.
முதலமைச்சர்: சொல்லு.
நான்: சார். நான் செய்யப்போவது எல்லாம் முன்கூட்டி, உயர்தளத்துக்கு மட்டும் ஒரு ரகசிய ஆவணம் தருகிறேன். நீங்கள் கையொப்பமிட்ட பிறகு, குறிப்பிட்ட கெடு வரை, அது என்னிடம் இருக்கவேண்டும் (என் மனைவியிடம் கொடுத்து வைத்திருந்தேன்!) நான் கல்கத்தா போகவேண்டும். உபசார செலவுகளுக்கு இத்தனை ரூபாய் வேண்டும். அதில் லாகிரி வஸ்துக்கள் வாங்க நேரிடலாம். அது நம் அரசின் கொள்கைகளுக்கு முரண். என் தீர்மானத்துக்கு அதை விட்டு விடவேண்டும். (நான் முழுதும் திருப்பிக்கொடுத்து விட்டேன். காலணா செலவு இல்லை.) 
அவர் ஆமோதித்தார். முதன்மை காரியதரிசி, அனுபவத்தின் பேரில், சில அறிவுரைகள் தந்தார். விஜயம் 100% வெற்றி. அந்த தொழிற்சாலையின் உற்பத்தித் திட்டத்தை 105% அச்சாரம் கொடுத்து எங்கள் பக்கம் வளைத்தேன். இதற்கு பின்னணி இந்தியாவின் தர நிர்ணய/சான்று சொசைடியுடன் நடந்த மோதல்.
ERW/EW பற்றி அபிப்ராய பேதமில்லை. குழாயின் தடிமனை பற்றி தான் பிரச்னை. தடிமன் தடிக்க, தடிக்க, எடை கூடும்.நீளம் குறையும்.விலை கூடும். உற்பத்தி குறையும். அந்த சொசைடி மூன்று தடிமன்களை இது அல்லது/அது என்ற வகையில் சிபாரிசு செய்து இருந்தனர். எனது ஆய்வுப்படி இது பிரிட்டீஷ் நிறுவனத்திடமிருந்து இரவல். அமெரிக்கன் நிறுவனம் குறைந்த தடிமனை சிபாரிசு செய்தது. டிப்பார்ட்மெண்ட் பெரும் தடிமனார். நான் சிறு தடிமனார்.இந்தியாவின் தர நிர்ணய/சான்று சொசைடி மதில் மேல் பூனை. அகப்பட்டுக்கொண்டது கோடிக்கணக்கான ரூபாய்கள்/வேலையில் மெத்தனம். 
நான் நிரூபித்தது: சொசைடி இரவல் வாங்கியது, பிரிட்டீஷ் தரச்சான்று; ஆனால், அங்கு ஆழ்கிணறு அனுபவம் சொற்பம். இந்திய மண்ணின் தரமும், அவர்களதும் பொருந்தாதவை. அமெரிக்காவில் அனுபவம் அதிகம். இந்திய மண்ணின் தரமும், அவர்களதும் பலதரப்பட்டவை. ஒப்புமை எளிது. சுருங்கச்சொன்னால், தடிமனை குறை. ஹாய், ஹூய் என்றார்கள். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், முதல்வரின் சம்மதத்துடன் வைத்திருந்த மடலை காண்பித்தேன். வழிக்கு வந்தார்கள். என் விஜயம் 100% வெற்றி தான். இணைய தளம் இல்லாத அக்காலத்தில், குறைந்தது ஒரு வருடம் ராத்தூக்கம் இரண்டு மணி தான். பொண்ணு கூட லேட்டாத்தான் பிறந்தாள். கொட்டிப்பிட்டேன். யார் யார் என்ன என்ன சொல்வார்களோ?
இன்னம்பூரான்
24 02 2012
பி.கு: ஜட்ஜ் ஏன் தள்ளுபடி செய்து விட்டார்? விற்றவரின் கூற்று: ‘எஜமான்! நான் விலை மட்டும் தான் கூவினேன். சர்க்கரை/மணல் என்று சொல்லவே இல்லை. 
ஹூம்! சிலர் சர்க்கரை கொடுத்தாலும், அதை மணல் என்பர், Lead, Kindly Light.
Inline image 1
உசாத்துணை

Geetha Sambasivam Thu, Feb 23, 2012 at 6:56 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
 வழிக்கு வந்தார்கள். என் விஜயம் 100% வெற்றி தான். இணைய தளம் இல்லாத அக்காலத்தில், குறைந்தது ஒரு வருடம் ராத்தூக்கம் இரண்டு மணி தான். பொண்ணு கூட லேட்டாத்தான் பிறந்தாள். கொட்டிப்பிட்டேன். யார் யார் என்ன என்ன சொல்வார்களோ?
இன்னம்பூரான்//

soooooper!
24 02 2012
பி.கு: ஜட்ஜ் ஏன் தள்ளுபடி செய்து விட்டார்? விற்றவரின் கூற்று: ‘எஜமான்! நான் விலை மட்டும் தான் கூவினேன். சர்க்கரை/மணல் என்று சொல்லவே இல்லை. 
ஹூம்! சிலர் சர்க்கரை கொடுத்தாலும், அதை மணல் என்பர், Lead, Kindly Light.//

haahaahaa

On Thu, Feb 23, 2012 at 12:47 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 24
தாரதம்யம்
சர்க்கரை என்று மணலை கட்டிக்கொடுத்து விட்டான் என்று வழக்கு. யுத்தகாலம். சர்க்கரைக்கு பஞ்சம். ‘வீசை எட்டணா’ என்றான். எல்லா பொட்டலங்களும் விற்றுப்போயின. வீட்டுக்குப்போனால், டோஸ்!  வாங்கியது மணல். ஏன் வழக்குப் போடமாட்டார்கள்? ஜட்ஜ் தள்ளுபடி செய்து விட்டார், விற்றவர் தரச்சான்றை தாழ்த்தி விற்கவில்லை என்று!

பி.கு: ஜட்ஜ் ஏன் தள்ளுபடி செய்து விட்டார்? விற்றவரின் கூற்று: ‘எஜமான்! நான் விலை மட்டும் தான் கூவினேன். சர்க்கரை/மணல் என்று சொல்லவே இல்லை. 
ஹூம்! சிலர் சர்க்கரை கொடுத்தாலும், அதை மணல் என்பர், Lead, Kindly Light.
Inline image 1
உசாத்துணை

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.காளைராசன் Thu, Feb 23, 2012 at 7:12 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 
லண்டனில் ஆலோசனைகள் நடந்தபின் IS0 என்ற அமைப்பை ஃபெப்ரவரி 23/24,1947 அன்று துவக்கினர். அதன் இலக்கு:’ பொறியியல்/ தொழில் பொருள்களின் தர நிர்ணயம்/சான்று செய்ய, உலகளவில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவது. இது மாதிரி நம் எல்லாருக்கும் பரிச்சியமானது அக்மார்க். அந்த விஷயத்தில் இந்தியா முன்னோடி. அதற்கான சட்டம்: Agricultural Produce(Grading and Marking ) Act, 1937 as amended in 1986. இந்தியாவின் தர நிர்ணய/சான்று கழகம் 1947ல் ஒரு ரிஜிஸ்டர்ட் சொசைடியாக அமைக்கப்பட்டது. நல்ல எண்ணம். திரிசங்கு சுவர்க்கம். நாற்பது வருடங்கள் கழித்து ஏப்ரல் 1 (!), 1987 அன்று சட்டரீதியாக, Bureau of Indian Standards தலையெடுத்தது.
 அருமையான தகவல். 
நான் நிரூபித்தது: சொசைடி இரவல் வாங்கியது, பிரிட்டீஷ் தரச்சான்று; ஆனால், அங்கு ஆழ்கிணறு அனுபவம் சொற்பம். இந்திய மண்ணின் தரமும், அவர்களதும் பொருந்தாதவை. அமெரிக்காவில் அனுபவம் அதிகம். இந்திய மண்ணின் தரமும், அவர்களதும் பலதரப்பட்டவை. ஒப்புமை எளிது. சுருங்கச்சொன்னால், தடிமனை குறை. ஹாய், ஹூய் என்றார்கள். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், முதல்வரின் சம்மதத்துடன் வைத்திருந்த மடலை காண்பித்தேன். வழிக்கு வந்தார்கள். என் விஜயம் 100% வெற்றி தான்.

இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் இந்தியா என்றோ முன்னேறியிருக்கும்.

--
அன்பன்
கி.காளைராசன்


திவாஜிFri, Feb 24, 2012 at 3:49 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
உண்மையை சொன்ன அந்த முதலமைச்சர் யார்?
:-))

2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
முதலமைச்சர்: புன்சிரிப்புடன். You are a rogue.
(தேனீர் வரவழைத்தார். அது மகுடம் அணிவித்த மாதிரி.)


--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
[Quoted text hidden]

Dhivakar Fri, Feb 24, 2012 at 5:31 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
முதலமைச்சர்: புன்சிரிப்புடன். You are a rogue.
(தேனீர் வரவழைத்தார். அது மகுடம் அணிவித்த மாதிரி.)
 இது ஒரு மிகப் பெரிய ’பாயிண்ட் மேட்.’ (உங்கள் பாஷையில்).
முதலமைச்சாராக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பொறுப்பானத் தலைமைப் பதவியில் இருப்பவராயினும் (அரசியல், ஆட்சி) இந்த தேநீர் வழங்கும் விஷயத்தில் ஒரு செய்தி உண்டு. நான் பிஸியானவன்.. எல்லோரையும் உபசரிக்கமுடியாது. ஆனால் பார், ஒரு மாதிரியான மதிப்பை எனது விருந்தாளியாக உனக்கு மட்டுமேக் காண்பிக்கிறேன் - என்பதை சூசகமாகச் சொல்வதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என நினைக்கிறேன். இது பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய ஐ.ஸி.எஸ் அதிகாரிகளுக்கும், அவர்களிடமிருந்து அரசியல் தலைவர்களுக்கும் மாறியிருக்கலாம் என்பது என் ஊகம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை கவர்னராக ஜான் சிங்க்ளேர் - பெண்ட்லாண்ட் பிரபு (1912 முதல் 1919) வரை இருந்தபோது அவருக்கும் அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், லண்டன் கோர்ட் வரை மோதல் இவையெல்லாம் உண்டு. கோட்டையில் நடந்த ஒரு சுவையான வாக்குவாதம் ஒன்று குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. இது இண்டு பேப்பரிலோ அல்லது மெயில் பேப்பர் கட்டிங்கிலோ வந்தது (எம்டன் புத்தகத்துக்காக சேகரித்த சேகரத்தைத் தேடினால் எனக்கு சரியாகக் கிடைக்கும்) ஒரு கட்டத்தில் அன்னி பெசண்ட’இடம் ’உனக்கு இங்கு டீ பறிமாறப்பட்டதே ‘வேஸ்ட் ஆஃப் டைம்’ என கவர்னர் சொல்கிறார்.


2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Tthamizth Tthenee Fri, Feb 24, 2012 at 10:54 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நீர்  மட்டுமா   லேட்டா தூங்கினீர்
 
ஜட்ஜ் தூக்கத்தையுமல்லவா கெடுத்திருக்கிறீர்
 
இதற்கு ஈபீகோ செக்‌ஷன் படி என்ன தண்டனை தெரியுமோ
 
லேட்டா வந்தாலும்   லேட்டஸ்ட்டா  வரது
 
அதான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/2/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
.

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 12:01 PM
To: thamizhvaasal@googlegroups.com
ஹிது பாய்.
இ.
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 12:08 PM
To: mintamil@googlegroups.com
பெண்ட்லண்ட்க்கு கொஞ்சம் பெண்ட்-அப் ஃபீலிங்கு! ஆனா பாருங்கோ. மீட்டிங்க்லே இதழாளர்களை அதட்றார். திரு.வி.க. 'தருமம் கிடைக்கும் தினம் வரும் தினம் (டூம்ஸ்டே) வரும் என்கிறார். கோபம் வர்ராதா?
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 24, 2012 at 12:09 PM
To: thamizhvaasal@googlegroups.com
லேட்டா வந்தாலும்   லேட்டஸ்ட்டா  வரது
~ ஆஹா! செஞ்சா போச்சு. இன்னிக்கு போட்ற முடிச்சை அவிழ்க்கவும்!


[Quoted text hidden]